பண்டைய காலத்தில் வானிலை அறிவியல்

ஜிக்யாசா வாத்வானி தமிழில்: ஜீவா

ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த வானுடவியல் அறிஞர்-கணிதவியலாளர் உஜ்ஜைனை சேர்ந்த வராஹமித்ரா எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு வரி வருகிறது. “சூரியன் மழையைப் பெற்றெடுக்கிறது”. இந்த வரி மேகங்களுக்கும் மழைக்கும் உள்ள ஆழ்ந்த புரிதலை காட்டுகிறது. வானிலையை உணர்த்தும் ஒரு முக்கிய குறியீடுதான் மேகங்கள். செயற்கைக்கோள்கள் மூலம் இப்புவி வரைபடத்தை ஆய்வு மேற் கொள்வதற்கு முன்னர், சங்க கால இலக்கியங்கள் மற்றும் மக்களின் அறிவு மூலமே வானிலை கணிக்கப்பட்டது. இதை உறுதிபடுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 700 – 300 காலகட்டத்தில் எழுதப்பட்ட உபநிடதங்களில் மேகங்கள் உருவாக்கம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சௌராஷ்டிராவில் 10/11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படாலி என்ற அறிஞர், மழையைக் கணிப்பதற்கான 10 குறியீடுகள் குறித்துப் பாடல்கள் எழுதியுள்ளார். மேகங்கள், காற்று, மின்னல், வானத்தின் நிறம், இடி, இடியின் ஒலி, மனித்திவலை, பனி, வானவில் மற்றும் நிலவு/சூரியன். வானிலை ஆய்வு, உயிரியல், மானுடவியல் குறியீடுகள் மூலம் வானிலையை கணிப்பது, வானிலை அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், விவசாயிகள் ஆகியோரின் ஆர்வத்தை மீண்டும் ஒருமுறை தூண்டியிருக்கிறது. இவற்றைச் சார்ந்த இலக்கியங்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான  Indian Journal of Traditional Knowledge எனும் இதழில், மழையின் 25 இயற்கை குறியீடுகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில், காசியா ஃபிஸ்துலா எனும் தாவரம் (Cassia Fistula) எனும் தாவரம் பருவமழை துவங்குவதற்கு 45 நாட்களுக்கு முன்பு மலர்வதாகவும், தவளைகள் மழைகாலம் துவங்குவதற்கு முன்பு ஒலி எழுப்பி சதுப்பு நிலங்களில் தங்கள் முட்டைகளை மறைத்து வைக்கும் எனவும், பறவைகள் வித்தியாசமான ஒலியுடன் மணலை கிளறி விளையாடுதல் ஆகியவை மழையின் அறிகுறிகளுள் சிலவனவாக அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள ஜூனாகத் விவசாய பல்கலைக்கழகத்தின் (ஜே.ஏ.யு) பேராசிரியர் பர்ஷோத்தம் ரஞ்சோட்பாய் கனானி (Parshotam Ranchhodbhai Kanani), குஜராத் மாநிலத்தில் 50-60 சதவீத விவசாயிகள் பண்டைய வானிலை முறைகள்படியே, குறிப்பாக படாலி பாடல்கள் மூலமே வானிலையை கணிப்பதாக குறிப்பிடுகிறார். 1994-ஆம் ஆண்டிலிருந்து ஜே.ஏ.யு.பல்கலைக்கழகம், ஆண்டுதோறும் மாநிலத்திலுள்ள விவசாயிகளை அழைத்துவந்து அவர்கள் பண்டைய முறைப்படி அந்த ஆண்டின் பருவமழையை கணிக்கும் கருத்தரங்கத்தை நடத்திவருகிறது. “எந்த விவசாயியின் கணிப்பு 60-80 சதவீதம் சரியாக உள்ளதோ அவருக்கு நாங்கள் சன்மானம் அளிப்போம்”, என கனானி தெரிவிக்கிறார்.

முதன்மைக் குறியீடுகள்:

மழையைக் கணிக்கும் முக்கிய அறிகுறி மேகங்கள்.  Indigenous Rain Forecasting in Andhra Pradesh, என்ற புத்தகம் அம்மாநிலத்தில் உள்ள வறண்டநில விவசாயம் குறித்த ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில், மழையைக் கணிப்பதற்கான இயற்பியல் மற்றும் உயிரியல் குறியீடுகள் குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது. அந்தக் குறியீடுகளில் மேகங்கள் தான் முதலிடத்தைப் பிடித்தது. ஆந்திராவில் 16.7 சதவீத விவசாயிகள் மேகங்களின் மூலமே மழையைக் கணிக்கின்றன. அதேபோல், 2009-ஆம் ஆண்டு ஆனந்த் விவசாயப் பல்கலைக்கழகம், குஜராத் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் மழையின் 16 அறிகுறிகள் குறித்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்னதாக கிழக்கு வானத்தில் தோன்றும் செம்மையான மேகங்கள், திடீர் புயல், காற்றின் திசை, இடி, மின்னல், பலமான காற்று, மழையின் அடையாளங்கள், வானவில், முட்டைகளை சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனை சுற்றி ஒளிவட்டம், வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை மற்றும் தூசுப் பனிமூட்டம் ஆகியவை ஆறு மாதங்களுக்கான மழையைக் கணிக்கும் அறிகுறிகளாக  அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. 1996-ஆம் ஆண்டு பி.ஏ.கோலக்கியா ஜே.ஏ.யு பல்கலைக்கழக உயிரிதொழில்நுட்பவியல் துறை தலைவர் மற்றுமொரு தொடர்பைப் பற்றிச் சொல்கிறார். பகலில் காகங்கள் நிறத்திலான மேகங்கள் மற்றும் இரவில் தெளிவான வானம் ஆகியவை வறட்சியான ஆண்டுக்கான அறிகுறி என குறிப்பிட்டிருக்கிறார்.

வானுடத்தின் தொடக்கப்புள்ளி:

மேகங்களின் மூலம் வானிலையை கணிப்பதன் தடயங்களை ஆராய்ந்தால், அதில் பஞ்சாங்கம் வழியாகத்தான் ஆராய முடியும். பல்லாயிரம் ஆண்டுகளாக வானிலையை கணிப்பதில் பஞ்சாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேகங்களின் வடிவங்கள் மற்றும் அதன் உயரங்கள் வைத்தே, அந்த ஆண்டில் எந்தளவில் மழைப்பொழிவு இருக்கும் என்பதை பஞ்சாங்கத்தின் மூலம் கணிக்கப்படுகின்றன. மேகங்களின் வகைகள் மூலம் மழையை கணிக்க அதற்கென சூத்திரம் உள்ளது. நீலம் மற்றும் வருணம் (பஞ்சாங்கத்தில் மேகங்களின் வகைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் இரண்டு வகைகள்) ஆகியவை கடும் மழையை உருவாக்கும். அதேபோல், காலம் மற்றும் புஷ்கரம் மேகங்கள் லேசான சாரலை உருவாக்கும். பஞ் சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேகங்களின் வகைகள், நவீன காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேகத்தின் வகைகளுக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. பஞ்சாங்கத்தில் உள்ள கணிப்புகள் சோதனை களுக்கும் உட்படுத்தப் பட்டிருக்கின்றன. கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேச்வரா பல்கலைக்கழகம் மற்றும் ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் (திருப்பதி) ஆகியவை இணைந்து வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், திருப்பதியில் 1992-2004 காலகட்டத்தில் பஞ்சாங்க கணிப்புகள் மற்றும் சமகால வானிலை கணிப்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பஞ் சாங்கத்தில் உள்ள கண்காணிப்புகளின்படி மழைப்பதிவு செயல்பட்டது 63.6 சதவீதம் பொருந்தியுள்ளது. 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை வானிலை குறித்த பண்டைய அறிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது. மேகங்களின் வடிவங்கள் மற்றும் நிறம் ஆகியவற்றை பொறுத்து மழையின் அளவு எப்படி இருக்கும் என்பதற்கான அனுமானங்கள் இந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது. உதாரணமாக, மேகங்களில் கோடுகள் காணப்பட்டால் அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யும். அல்லது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கார்மேகங்கள் காணப்பட்டால், அந்நாளிலிருந்து மூன்றாவது நாளில் மழை பெய்யலாம். இதேபோன்ற ஆராய்ச்சி ஆந்திராவிலும் மேற்கொள்ளப்பட்டது. CRIDA என்ற அமைப்பு, ஆந்திராவில் விவசாயிகள் மழையை கணிக்கும் அறிகுறிகளை ஆவணப்படுத்தியுள்ளது. கிழக்கு நோக்கி நகரும் கார்மேகங்கள் வடமேற்கை நோக்கிய மேகங்கள், மேற்கு மற்றும் தெற்கில் காணப்படும் ஒன்றோடொன்று இணைந்த மேகங்கள், எதிர்த் திசையில் பயணிக்கும் தாழ்ந்த மேகங்கள் ஆகியவை குறுகிய கால மழையின் அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் மறைவின்போது தோன்றும் செம்மேகங்கள் நடுத்தர அளவிலான அறிகுறிகள்.

பண்டைய வானிலை கணிப்புகள், சமகால வானிலை ஆய்வுகளும்: 

இந்திய வானிலை மையம் மாவட்ட அளவிலான பண்டைய வானிலை குறியீடுகள் மூலம் மழையை கணித்துள்ளது. இந்த பண்டைய வானிலை குறியீடுகள், குறுகிய, நடுத்தர, நீண்ட கால கணிப்புகளை அளித்துள்ளது. ‘‘பண்டைய
கால வானிலை கணிப்பு முறைகளுக்கு மாற்றாக நவீன அறிவியல் இன்னும் வளரவில்லை”, என விவசாய வானிலை துறை பேராசிரியர் வித்யாதர் வைத்யா கூறுகிறார். ‘‘பண்டைய வானிலை அறிவியல் குறித்து கடந்த 22 ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தி வருகிறோம். அதில், எல்லாமே சரியாக முடிவுகளை அளிக்கவில்லை. அந்த முறைகளை நாங்கள் நிராகரித்துள்ளோம். அதன்மூலம், வானிலையை கணிக்க நாங்கள் விவசாயிகளை ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட பண்டைய வானிலை முறைகளை உபயோகிக்க விவசாயிகளை ஊக்குவிக்கிறோம். உதாரணமாக, படாலியின், ஹோலி பண்டிகையன்று வீசும் காற்றை வைத்து மழையை கணிக்கும் பாடல்கள் ஆகியவற்றை நவீன அறிவியல் வானிலை முறைகள் துல்லியமானவை என நம்பப்பட்டாலும், இந்திய வானிலை மையத்தின் கணிப்புகள் அடிக்கடி தவறாக இருந்திருக்கின்றன. அறிவின் பன்முகத் தன்மையையும் ஒருங் கிணைக்கும் விவசாயியின் அறிவையும், நவீன அறிவியலையும் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன”, என ஆர். ரங்கலஷ்மி, (Gender and grassroots Institutions) கூறுகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments