இழப்புக்கான ஆபத்து

ஸ்ரீஷன் வெங்கடேஷ் | தமிழில்: ஜீவா

உலகம் முழுவதும் மந்திர விரிப்புகளாக சூழ்ந்திருக்கும் காற்று, மேகங்கள் ஆகியவைதான் வானிலையை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புரிந்து கொள்வதென்பது, வானிலை மாற்றத்தை விளங்கிக்கொள்ள மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப் பதற்கும் முக்கியமானது. கடந்த 250 ஆண்டுகளாக மேகங்களின் பண்புகள் மற்றும் அவற்றின் நீட்சி எப்படி மாறிக்கொண்டே வந்திருக்கின்றன, வருங்காலத்தில் எப்படி மாறும் என்பதுதான் அவசியம் என, பேராசிரியர் நீல் டோனாஹ்யூ (Neil Donahue) (Carnegi
Mellon University) கூறுகிறார். இந்த மாற்றங்களை புரிந்துகொள்ள வானிலை அறிஞர்கள், செயற்கைக் கோள்கள் மற்றும் வானிலை தொழில் நுட்பங்களை மேம்படுத்தவும், மேகங்களின் பயணம் குறித்து அறிந்துகொள்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், மேகங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கின்றன, தம்மைத்தாமே ஒழுங்கமைத்துக் கொள்கின்றன. காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பண்புகள் நிச்சய மற்றதாக உள்ளன. இதனால், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் சவாலானதாக உள்ளது.

வளிமக்கரைசல்கள்: சிறியதுகள், பெரியதாக்கம்:

வளிமக்கரைசல்கள், வாகன மற்றும் தொழிற் சாலை மாசுபாடுகள் உள்ளிட்ட மனித செயல்களால் உருவாகின்றதா என்ற புதிரை கட்டவிழ்க்க காலநிலை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். மனித செயல்களால் உருவாகும் காற்று மாசுபாடு மேகங்களின் உருவாக்கம் மற்றும் பண்புகளை பாதிக்கிறது. வழக்கமான கருத்தாக்கங்களின்படி, வளிமண்டலத்தின் மேலடுக்கில் உருவாகும் வளிமக்கரைசல்கள், அதிக நீர்த்திவலைகளை உருவாக்கி வானத்தை மேகமூட்டம் கொண்டதாக மாற்றுகிறது. வளிமக் கரைசல்களின் செறிவானது, 1800-களில் தொழில்மயமாக்கலுக்கு முன்புவரை குறைவாக இருந்தது. அதாவது, தொழில்மயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு, இப்போது இருப்பதைவிட மழைப்பொழிவு குறைவாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. மேக நீர்த்திவலைகள் சூரியனின் கதிரியக்கத்தை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கின்றன. இதனால் பூமியில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த தர்க்கத்தின்படி, தொழில்மய காலத்தில் உள்ள மேகங்கள் பூமியில் அதிக குளிர்ச்சியை உண்டாகும். வெப்பமயமாதலின் விளைவு மறைக்கப்படுவதாகவும் சில யூகங்கள் உள்ளன. “கார்பன் – டை – ஆக்ஸைடு உருவாக்கும் வெப்பமயமாதலில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய மாசுக்களால் மறைக்கப்படுகின்றன என்பதே எங்களின் முக்கிய மதிப்பீடு”, என டோனஹ்யூ கூறுகிறார். இதன் நிச்சயதன்மையை நிரூபிக்க தொழில்மயமாக்கல் காலகட்டத்திற்கு முந்தைய வளிமண்டல ஆய்வுத் தரவுகள் இல்லை. சுவிட்சர்லாந்தை சேர்ந்த (European Organaisation for Nuclear Research) CERN  எனப்படும் மையம், இதனை உயர்தர தொழில்நுட்பத்தின் உதவியுடன் CLOUDS (Cosmics Learning Outdoor Droplets) என்ற பெயரில் சோதனை மேற்கொண்டது. இதில், தொழில்மயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு, மரங்களால் வெளியிடப்படும் ஏரோசால்கள் சமகாலத்தைப் போன்றே வெப்பமயமாதலை தடுக்கும் போர்வையாக விளங்கியது கண்டுபிடிக் கப்பட்டது. சூரிய கதிரியக்கத்தில் உள்ள காஸ்மிக் துகள்கள், மேகங்கள் உருவாக்கத்தில் எந்தளவுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து CERN விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கால வளிமண்டலம், கடந்த காலங்களில் இருந்ததை விட, எவ்வாறு வேறுபட்டது என்பதை புரிந்துகொள்ள இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், நீர்த்திவலைகள் உருவாக்கம் குறித்த நுண்ணறிவை உருவாக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் ETH Zunivh University  பல்கலைக்கழக விஞ் ஞானிகள், கடந்த 2012-ஆம் ஆண்டு மேகம் உருவாக்கம் குறித்த வழக்கமான அறிவியலை ஒழித்துக்கட்டும் வகையில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். (கரிம வளிமக் கரைசல்களில் உருவாகும் நீர்த்திவலைகள் அவற்றின் பாகுமை தன்மை (பிசுபிசுப்பு தன்மை) பொறுத்து நீர்த்திவலைகளாக உருவாக பல மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும்.) கரையும் தன்மை குறைவாக உள்ள வளிமக்கரைசல்கள், நீர்த்திவலைகளை உருவாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் (Department of Energy’s Lawrence Berkely National Laboratory) விஞ்ஞானிகளும் மேக உருவாக்கத்தில் உள்ள நடைமுறைகள் குறித்து, கரிம மற்றும் கனிம வளிமக் கரைசல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியில், வளிமக்கரைசல்களில் கரையும் தன்மையை விட, அவற்றுக்கும் உறைந்த நிலையிலான நீராவிக்கும் தொடர்பே முக்கியமானது என கண்டறிந்தனர். கரிம வளிமக் கரைசல்கள், மேற்பரப்பின் அழுத்தத்தை பெருமளவில் குறைவதன் மூலம் பெரியளவிலான நீர்த்திவலைகள் உருவாக்கப்படுவதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. வளிமக் கரைசல்களின் துகள்களின் வேதியியல் மற்றும் நீர்த்திவலைகள் உருவாக்கம் இவற்றுக்கான தொடர்பு குறித்து அறுதியிட்டு கூறப்படவில்லை. ஆனால், அவை முடிவாக தெரியவரும்போது, மேகங்களின் தெளிவுத் தன்மை மற்றும் மழைப்பொழிவு குறித்து புரிந்து கொள்வது குறித்து உயர்ந்த மதிப்பீட்டை கொண்டிருக்கின்றன.

இரட்டை வேடம் கொண்டிருக்கும் மேகங்கள்:

மேகங்கள் காலநிலையின் முக்கிய கூறாகும். ஏனெனில், புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதே மேகங்கள்தான். புவி வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதல் இரண்டுக்குமே மேகங்கள்தான் முக்கிய காரணம். மேகங்களின் வகைகள் மற்றும் அவை எங்கு உருவாகியிருக்கின்றன என்பதை பொறுத்தே வெப்பம், குளிர்ச்சி இரண்டின் அளவும் வேறுபடும். உதாரணமாக, மேகங்கள் தாழ்மட்டத்தில் உருவானால், சூரிய வெப்பத்தை மறைக்கும் கவசமாக செயல்பட்டு புவியில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. இது மேகங்களுக்கு தெளிந்த உண்மை நிறத்தைக் கொடுக்கிறது. ஆனால் மேகப்பரப்பு இல்லாமல், மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் அனைத்தும் புவியின் மேற்பரப்பின் நீர்த்துளிகளாக இருந்தால், அதேநேரத்தில் பூமியின் வெப்பநிலை 20 சதவீதம் அதிகரிக்கும். அதனால், பூமியின் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும். ஆனால், வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மேகங்கள் உருவானால், புவியின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும் அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், பூமியின் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக இருக்கும்.மேகங்களின் இந்த இரட்டைதன்மையை புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில், மேகங் களிடையே நிகழும் மாற்றங்கள் எப்படி பூமியின் ஆற்றல் மற்றும் கதிரியக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். ‘‘நிகழ் காலநிலையில், மேகங்கள் குளிர்ச்சி விளைவை ஏற்படுத்தும் வலைப் பின்னலை அடக்கியுள்ளன”, என பேராசிரியர் ஜோயல் நேரிஸ் (Joyal Noris) (Climate and Atmospheric Sciences at the Scripts Institution of Oceanography in San Deigo, California) கூறுகிறார். ஏனென்றால், மேகங்களின் குளிர்ச்சி விளைவு, அதன் வெப்ப விளைவை கடந்து செல்கின்றன. உலக வெப்பமய மாதல் விளைவுகளில், மேகங்களின் இந்த வலைப் பின்னல் பலமானதாக இருக்கிறதா அல்லது பலமற்றதாக இருக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது எனவும் ஜோயல் கூறுகிறார்.

இடம்பெயர்தலில் நெருக்கடி:

கடந்த 30 ஆண்டுகளில், மேம்பட்ட தொலை உணர் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் விஞ்ஞானிகள் மேகங்கள் எப்படி மாறுகின்றன மற்றும் எப்படி மறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன என்பதை புரிந்துகொண்டுள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகம் ஆகியன, 19542008 வரையிலான வானிலை தரவுகளை தொகுத்து, கடல்கள் மீதான மேகங்களின் தாக்கம் குறித்த வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், வானிலை மையம் மூலம் 1971-2009 காலகட்டத்திலான தரவுகளைக்கொண்டு, நிலத்தின் மீது மேக பரப்புகளின் தாக்கத்தின் வரை படத்தையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வரைபடங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றங்களை கொண்டுள்ளன. கடல்களின் மீதான மேகப்பரப்பு குறைவாக இருக்கும் அதேவேளையில், நிலத்தின் மீதான மேகங்கள் அதிகளவில் விலகுகின்றன. வெப்ப மண்டலங் களின் நடு அட்சரேகையில் மேகபரப்பு குறையும்போது துணை வெப்பமண்டலங்கள் மற்றும் உயர்மட்ட மேகங்கள் ஆகியவை துருவங்களை நோக்கி நகருகின்றன. இதனை நாசா இந்தாண்டு மேமாதத்தில் உறுதிப்படுத்தியது. உயர்மட்ட மேகங்கள் துருவங்களை நோக்கி நகர்வது கவலையளிப்பதாக உள்ளன. துருவங்களில் உள்ள பெருமளவிலான நீரை கருத்தில் கொண்டால், அங்கு வெப்பநிலை உயரும்போது உலகளவில் கடல்மட்ட உயர்வில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பேரழிவுகள் ஏற்கனவே நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். உலகிலேயே இரண்டாவது பெரிய பனிப்பிரதேசம்  கிரீன்லாந்தில் அமைந்துள்ளது. அவை, வேகமாக உருகிவருகிறது. ஏனெனில், அந்த மண்டலத்தில் மேகப்பரப்பின் தாக்கத்தால் அப்பகுதியில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. இது, உலகளவில்  மொத்த கடல்மட்ட உயர்வில் மூன்றில் ஒருபங்கு. ஸ்கிரிப்ஸ் கடலாராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், மேகங்கள் துருவங்களை நோக்கி மட்டும் நகராமல் வளிமண்டலத்தில் மேல்நோக்கியும் நகர்வதாக கூறுகின்றனர். (மிதவெப்ப மண்டலங்களின் விரிவாக்கம் குறைந்து சூரிய கதிரியக்கத்தை மேகங்கள் மூலம் விண்வெளிக்கு திருப்பியனுப்புகின்றன. மேலும், புவி அதிக சூரிய கதிரியக்கத்தை உறிஞ் சுகின்றன). இது அதிக வெப்பத்தை உருவாக்கும். “உயரத்திலும் அதிக உயரமான மேகங்களின் உயர்வு குறித்து நான் கண்டறிந்திருக்கிறேன். இவை உலக வெப்பமயமாதலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன”, என நாரிஸ் கூறுகிறார். வளிமண்டலத்தின் கீழடுக்கு அதிக வெப்பத்தையும், மேலடுக்கு குளிர்ச்சியையும் கொண்டிருக்கும்போது, மிதமான மேகங்கள் வானத்தில் அதிக உயரத்திற்கு செல்லும். இந்த மேகங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சும். இது வெப்பமயமாதலை அதிகரிக்கும்.

இன்னும் புதிரே:

கடந்த சில ஆண்டுகளாக மேகங்கள் குறித்த ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. உற்றுநோக்கல், தொலை உணர் தொழில்நுட்பம், வானிலை பலூன்கள், பல சாதனங்கள் அடங்கிய விமானம் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் மேகங்கள் எப்படி காலநிலை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றன என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், காலநிலை மற்றும் மேகங்கள் அமைப்பை தன் வயப்படுத்துதல் இன்னும் நிறைவேறவில்லை. “காலநிலை மீதான மேகங்களின் காரணிகள் இன்னும் அறியப்பட வில்லை. அதை கண்டறிய வேண்டும். இதுவரையிலான ஆராய்ச்சிகள் முழுமையாக நிறைவடையவில்லை”,என விஞ்ஞானி கெவின் ட்ரென்பெர்த்  (Kevin Trenberth)  (Senior Scientist at the Climate Analysis Section , the US national Center for Atmospheric Research), கூறுகிறார். ‘‘காலநிலை மாதிரிகள், மேகங்களின் இயற்பியலை நேரடியாக கையாளுவதில்லை”, என ரோகர் டேவிஸ் (Rogar Davis, Professor of Climate Physics at the University of Auckland, NewZealand), கூறுகிறார்.மேகங்களின் பண்புகள் மற்றும் ஈரப்பதமான பண்புகள் வேறுபாட்டை பொறுத்து, மேகங்கள் மிகவும் பிரகாசமானதாகவோ, அல்லது வறண்டதா கவோ இருக்கலாம் என டேவிஸ் கூறுகிறார். செயற்கைக்கோள் உற்றுநோக்கல் தொழில் நுட்பத்தின் போதாமையே, மேகங்களின் மாற்றம் குறித்த குழப்பங்களுக்கு காரணம் என டேவிஸ் கூறுகிறார். முன்பெல்லாம், காலநிலை அளவிடுதலைவிட வானிலை குறித்து ஆராயவே செயற்கைக்கோள்கள் உபயோகிக்கப்பட்டன. “கடந்த 20 ஆண்டுகளாகத்தான் மேகங்கள் குறித்த ஆய்வை முன்னெடுத்திருக்கிறோம்.மேகங்களின்
மாற்றங்கள் குறித்து தெளிவான முடிவுகளை பெற பல ஆண்டுகள் ஆகும்.”, என டேவிஸ் விவரிக்கிறார். மேகங்களின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இன்னும் பல தகவல்களுக்கு நாம் காத்திருக்கும் அதேவேளையில், அசாதாரணமான மற்றும் அதிதீவிரமான வானிலை நிகழ்வுகள் அதற்குள் நடந்துவிடலாம் எனக் கூறுவது பாதுகாப்பானது.

பல்லுயிர் தன்மையின் நண்பன்:

வாழ்விடங்கள் மற்றும் பல்லுயிர்தன்மையை விவரித்தலில் உள்ள பிரச்சனைகளால், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தீவிரமாக தடுக்கப்படுகிறது. ஆனால், மேகங்களின் வழியாக நிகழும் நீர்சுழற்சியின் வழியை நாம் கண்டறிந்தால், விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்விடங்களை நாம் அடையாளம் காணலாம். அமெரிக்காவில் உள்ள  Yale and Buffalo Universities மேகப்பரப்பு குறித்த தகவல்களின் மூலம் சில முக்கியமான பல்லுயிர் வாழ்விடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேகங்களானது மழைப்பொழிவு, சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றுடன் பிரிக்க முடியாத அளவுக்கு தொடர்புள்ளது. இவற்றுள் எதிலாவது மாற்றம் நிகழ்ந்தாலும், அது மேகங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுற்றுச்சூழல காரணிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களை தீர்மானிப்பதில் மைய இடத்தை வகிக்கிறது. அதனால், விஞ் ஞானிகள் மேகப்பரப்பு தரவுகளின் மூலம் வாழ்விடங்களை அறிந்துகொள்ள முயற்சி மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வுக்காக, நாசாவின்  Aqua and Terra Satellites மூலம், மேகங்களை 15 ஆண்டுகள் ஆராய்ந்தனர். இதில் கிடைத்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், மேக பரப்புகளுக்கிடையேயான வேறுபாடுகள், தனித்துவம் வாய்ந்த பல உயிரினங்களின் வாழ்விடங்களுடன் ஒத்துப்போகின்றன. மேகபரப்பு போர்வையின் வேறுபாடுகள் மற்றும் வடிவங்களை உற்றுநோக்குவதன் மூலம், அரிய வகை மரங்கொத்தி இனம் (தென்னாப்பிரிக்கா), கிங் ப்ரோட்டியா (King Protea)  எனும் தாவரம் உள்ளிட்டவை குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவற்றின் வாழ்விடங்களை விஞ்ஞானிகள் கணிக்க முடியும். இதுகுறித்த ஆராய்ச்சி  PLOS Biology  எனும் ஆராய்ச்சி இதழில் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.

யாருமறியா உலகினிலே:

காலநிலை குறித்த அறிவியலில் வளர்ந்துவரும் பாடப்பிரிவான பூகோள அறிவியல்  துறையின் மூலம், இப்புவியை நமது நன்மைக்கானதாக மாற்ற முடியும். அப்படி புவியில் மாற்றுவதற்கு ஏற்றதாக, நாம் கையாளக்கூடியதாக இருப்பது மேகங்கள். ஏனென்றால், வளிமக்கரைசல்கள், மேகங்களின் பண்புகளில் தாக்கத்தை விளை விக்க உள்ளன. வளிமக்கரைசல்கள் சூரிய கதிரியக்கத்தை அதிகளவில் பிரதிபலிக்கின்றன அல்லது மழையைப் பொழிகின்றன.  மேக விதைப்பு முறை என்பது வளிமக் கரைசல்கள் மூலம் மேகங்களைக் கையாண்டு மழைப்பொழிவை அதிகரிக்கும் தொழில் நுட்பமாகும். அதாவது, வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழைபெய்ய வேண்டும் என்ற இடத்திற்கு வரும்போது வேதிப் பொருட்களை(பெரும்பாலும் சில்வர் அயோடைடு) விமானம் மூலம் தூவி மழையை உருவாக்குவது. (ஏரோசால்கள் அதிகரிப்பதன் மூலம் நீராவியைச் சுற்றியுள்ள நீர்த்திவலைகள் அதிகரித்து அவை உறைவு நிலையை அடையும். சூழ்நிலை பொருந்தி வரும்போது அவை மழையாக பொழியும்). மேகங்கள் மற்றுமொரு நெருக்கடியான இடத்தையும் வகிக்கிறது. புவியை அடையும் சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பத்தின் அளவை மேகங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரண்டையும் வளிமக் கரைசல்கள் மூலம் கையாள்வதன் மூலம் மனிதர்களால் உருவாகும் வெப்பத்தைக் குறைக்க முடியும். சூரிய ஒளியை அதிகரிக்கும் வகையில் மேகங்களில், ஜெட் விமானங்கள் மூலம் கடல் நீரை தெளிப்பதன் மூலம் வெண்மை நிறத்தை அதிகரிக்க முடியும். இதிலிருந்து, அதிக பிரதிபலிப்புத் தன்மைகொண்ட மேகப் போர்வையை உருவாக்கலாம். மேலடுக்கான  ட் ரோ ப் போ ஸ் ஃ பி ய ரி ல் ஏரோசால்களை விதைப்பது மற்றுமொரு பேராவலான திட்டம். இந்த அடுக்கில்தான் பூமியிலிருந்து பிரதிபலிக்கப்படும் அகச்சிவப்பு கதிர்கள் தேக்கி வைக்கப்படுகின்றன. இந்த அடுக்கை மெல்லியதாக மாற்றவேண்டும் என்பதுதான் திட்டம். அதன்மூலம், விண் வெளிக்கு தப்பிச் செல்லும் அகச்சிவப்பு கதிர்களை அப்போதுதான் அந்த அடுக்கில் அதிகளவு அனுமதிக்கமுடியும். கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில் மேகவிதைப்புச் சோதனைகள் பல கலவையான முடிவுகளை வழங்கியுள்ளன. ஆனால், இந்த தொழில்நுட்பம் சீனா போன்ற நாடுகளில் மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கின்றது. பில்லியன் டாலர் கணக்கில் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. ஏனென்றால், 2008-ஆம் ஆண்டு வரை குடிநீருக்கான பற்றாக்குறையை போக்க இந்த தொழில்நுட்பத்தை சீனாவில் பயன்படுத்தினர். பூகோள அறிவியல் பல ஆய்வுகளை மட்டுப் படுத்துகின்றன என விமர்சனம் எழுந்தாலும், அதனால் காலப் போக்கில் கற்பனைக்கு அப்பாற்பட்ட தர்க்கங் களை கட்டவிழ்த்துவிட முடியும். வளிமண்டலம் மற்றும் கடல் விஞ்ஞானம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.

காலங்கள் கடந்த தொடர்பு:

‘‘ஹோலி பண்டிகையன்று வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் காற்று வீசினால், அந்த ஆண்டு நல்ல மழை இருக்கும். ஆனால், கிழக்கு திசையில் காற்று வீசினால் அந்த ஆண்டு மழை பொய்த்து வறட்சி ஏற்படும்”, எனப் படாலியின் பாடல் ஒன்று கூறுகிறது. அதேபோல், அக் ஷயதிரிதியை தினத்துக்கு ஏற்படும் காற்றுக்கும் மழைப் பொழிவுக்கும் தொடர்புள்ளதாக அவரின் பாடலில் உள்ளது. சௌராஷ்டிராவில் இன்றும் இப்பாடலின் மூலம் வானிலையைக் கணிக்கின்றனர். அதுவும் சரியாக 1990-ஆம் ஆண்டு இந்திய வானிலை மையம் நாடு முழுமைக்கும் மழையை கணித்தது. ஆனால், சௌராஷ்டிராவில் ஆகஸ்டுவரை மழைப் பொழியவில்லை. படாலியின் பாடலொன்றில் ஜெயாஸ்தா பண்டிகையின் மறுநாளில் மின்னலுடன் கூடிய மழைபெய்தால் அடுத்துவரும் நாட்களுக்கு மழை இருக்காது என்று உள்ளது. அதுதான் சௌராஷ்டிராவுக்கு அந்தாண்டு நடந்தது. அந்த ஆண்டு சௌராஷ்டிராவில் ஜூன்21-ஆம் தேதி மழைபெய்தது. அதன்பின், 72 நாட்கள் மழை இல்லாமல், ஆகஸ்டு 15-ஆம் தேதி மழைபெய்தது. அதாவது மிகச்சரியாக படாலி கணித்ததுபடி.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments