நன்றியற்ற சமூகம் !

இந்தியாவின் பல மாநிலங்களில் உழவர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் அப்படி ஒன்றும் நடத்து விடாது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்த்து, இன்று காவிரிப் படுகையில் ஒவ்வொரு நாளும் உழவர்களின் சவங்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. ஏதோ அன்றாடச் செய்தியாக வானிலை அறிக்கை போல உழவரின் மரணங்கள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்திய உழவர்களின் வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகள் மிகக் கொடிய காலகட்டமாகும். கிட்டத்தட்ட மூன்று லட்சம் உழவர்கள் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். இதை வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு உழவர்கள் உயிர் விடுகின்றனர். இதை வெறும் தற்கொலை என்ற கோணத்தில் பார்ப்பது மிகவும் இழிவானது. தற்கொலைக்கு தனது சொந்த மக்களைத் தள்ளியது யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுவாக இந்த உயிரிழப்புகளின் அளவு மராட்டிய மாநிலத்தில் உச்சமாகவும்
ஆந்திரம், உத்திர பிரதேசம், கர்நாடகம், குஜராத் என்பதோடு நமது தமிழ்நாடு அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகம் இந்த எண்ணிக்கையில் முந்திடும்போல் இருக்கிறது. மரண எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது. வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் நிலை, வளர்ச்சி பற்றி வாய் கிழியப் பேசும் நமது அறிவாளர்கள் மனச்£ன்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எது வளர்ச்சி? யாருக்கு வளர்ச்சி ‘நமக்கு சோறு போடுபவர்களும், நமது தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளை விளைவித்துக் கொடுக்கும் கூட்டமும் கொத்துக்கொத்தாகச் செத்துக் கொண்டிருக்கும்போது அவர்களைப் பார்த்து சற்றும் உறுத்தல் இல்லாமல் ‘இவர்கள் கோழைகள்’ என்று அன்று ஒரு அமைச்சர் பேசினார். இன்று எதுவும் பேசாமல் தமிழக அரசு உள்ளது. உழவர்களை மெல்ல மெல்ல சந்தைச் சூறையாடலுக்கு இட்டுச் சென்று அவர்களை ஓட்டாண்டியாக மாற்றிய நமது கொள்கை வகுப்பாளர்கள்தான் இதற்குக் காரணம். கிரோசி மாவில் அணுகுண்டை வீசியபின் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டான் கிளாடு இயதர்லி என்ற பாமயன்சமூகம்! நன்றியற்ற
7பூவுலகு | ஜனவரி 2017
விமான ஓட்டி. தான் போட்ட குண்டு எண்ணற்ற மக்களைக் கொன்றுபோட்டதே என்று வெதும்பி மடிந்தான் அவன். ஆனால் இன்று இந்த உழவர்களின் உயிரிழப்புகளைக் கண்ட பின்னும் அதற்கு தாமும் காரணம் என்ற ஈரம் சற்றும் இல்லாமல் அவர்களைக் கோழைகள் என்று ஏசும் இவர்களை என்னவென்று சொல்வது. உழவர்களின் சாவுக்குப் பல காரணங்கள் இருந் தாலும், அடிப்படையான காரணம் அவர்கள் தமது தற்சார்பை இழந்ததுதான். விதைக்கும் உரத்திற்கும் கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கும் அவலத்தை உண்டாக்கியது யார்? நாட்டின் பஞ் சத்தை விரட்டுவதற்கு ‘உழவர்களே! தியாகம் செய்யுங்கள்’ என்று நேரு பெருமகன் கூறினார். அதை மனதார ஏற்றுக் கொண்ட உழவர்கள் பஞ்சத்தைப் போக்கிவிட்டு தமது உயிரையும் போக்கிக் கொண்டார்கள். நமது பசியைத் தீர்த்த இந்த மக்களுக்கு நமது அரசு கொடுத்த பரிசு என்ன? நிலத்தைப் பிடுங்குவது, மானியத்தை வெட்டுவது, கொஞ்ச நஞ்ச கடனுக்கான வட்டியை உயர்த்துவது… என்ன நீதி. இந்த உழவர்கள் மட்டும் கொஞ்சம் சிந்தித்து, தனக்கானதை மட்டும் உற்பத்தி செய்து கொள்வேன் என்று முடிவு செய்துவிட்டால் எப்படி நகரத்தில் வாழ்பவர்களுக்கு சோறு கிடைக்கும், பால் கிடைக்கும், இறைச்சி கிடைக்கும்? ‘வளர்ச்சி வேண்டுமென்றால் பழங்குடிகளும், உழவர்களும் தங்களது நிலங்களைத் தர வேண்டும்‘ என்று நமது தலைமை அமைச்சர் மோடி கூறுகிறார். ஏன் பணக்கார பெருமுதலாளிகளைப் பார்த்து நமது ஆட்சியாளர்கள் யாரும் ‘தியாகம் செய்யுங்கள்’ என்று கேட்பதில்லை. ‘‘வளர்ச்சிக்காகத் தியாகம் செய்ய உழவர்கள் போன்ற அடித்தட்டு மக்கள்தான் கிடைத்தார்களா’’ என்று தேவிந்தர் சர்மா கேள்வி எழுப்புகிறார். சந்தைச் சூறையாடலில் நாட்டை, நகரை மட்டுமல்லாது தனது மனைவியையும் இழந்த தருமனைப் போல் எமது உழவர்கள் கண்கலங்கி, கைபிசைந்து நிற்கின்றனர். ஆற்றுவாரும் இன்றித் தேற்றுவாரும் இன்றி அல்லல்படும் அவர்களை நோக்கி எந்தக் கைகளும் நீளவில்லை. ஆழிப் பேரலை வந்தாலும், நிலநடுக்கம் வந்தாலும் ஏன், எய்ட்ஸ் வந்தாலும் ஓடி வந்து உதவும் உலக நாடுகள் கூட வருவதில்லை. இது ஒரு அமைதியான இனப்படுகொலை. உழவர்கள் என்ற இனக் குழுவை நாட்டில் இருந்த விரட்டச் செய்யும் தந்திரம். நமது உழவர்களின் வாழ்நிலை மிகவும் தனித் தன்மை வாய்ந்தது, தொழிலாளிகளைப் போல உடல் உழைப்புச் செய்ய வேண்டும்,
அதேசமயம் ஒரு முதலாளியைப் போல தனது சாகுபடிக்கான மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள வேண்டும். வங்கிகளின் பட்டியலில் வேளாண்மைக்கான கடன் கடைசி இடத்தில் இருக்கும். ஏழே நிமிடங்களில் 0% வட்டிக்கு கார் வாங்கக் கடன் கிடைக்கும் (பார்க்க. இணைய தளங்கள்) ஆனால் வேளாண்மைக் கடன் 8 இல் இருந்து 11 ஆக உயருகிறது! அதுவும் கிடைக்காமல் கந்துவட்டிக்குக் கையேந்த வேண்டும். சாகு படிக்கான அனைத்து இடுபொருள்களை வாங்கவேண்டும், அதை வளர்த்துப் பயிராக்கிக் களை எடுப்பது முதலான அறுவடை வரைக்கு மான செலவுகள் செய்ய வேண்டும். அதைச் சந்தையில் கொண்டு விற்கும்போது அதை அடி மாட்டு விலைக்குக் கேட்கும் தரகர்களிடம் விற்கவேண்டும். விற்ற பின்னர் கந்து வட்டிக் காரர்களுக்கு பத்து வட்டிக்கு மேல் அழ வேண்டும். பின் எப்படிப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது; இதர தேவைகளை நிறைவு செய்வது? வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்க முடியாத ‘சோதா’ விதைகள். நிலத்தைக் கொல்லும் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள். இவ்வளவு கொடுமையையும் தாங்கிக் கொண்டு உழவர்கள் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் திடீர் என்று ஏற்படும் எதிர்பாராத மழை, கடும் வறட்சி போன்றவற்றில் இருந்து காப்பதற்காக காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் அரதப் பழைய முறையையே நமது அரசுகள் பின்பற்றுகின்றன. எல்லாவற்றிலும் நவீனம் பேசும் நமது ஆட்சியாளர்கள், இன்னும் ‘ஊர் பூராவும் பயிர் அழிந்து போனால்தான் இன்சூரன்ஸ் தருவேன்’ என்று அடம் பிடிக்கும் காட்சிளைக் காணமுடிகிறது. தனித்தனியாக நிலத்திற்கு காப்பீட்டுக்குப் பிரீமியம் கட்டும் விவசாயிக்கு தனித்தனியாக இழப்பீடு தருவதில்லை. ஆனால் ஒரு கார் வாங்கினால் அதற்குத் தனியாக இழப்பீடு தரப்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் உழவர்களை அழித்து வேடிக்கை பார்க்கிறோம்.

சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல்கண்டும்

சிந்தை இரங்கா ரடீ -கிளியே

செம்மை மறந்தா ரடீ. 

என்பார் பாரதி.

பொதுவாக பூச்சிக்கொல்லிகள் பயிர்களில் தெளிக்கப் பயன்படுகிறதோ இல்லையோ, உயிர்களைக் கொல்லப் பயன்படுகிறது. உலகம் முழுமையும் இந்தக் கொடுமை அதிகமாகி வருவதை உலக உடல்நல நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டிற்கு மூன்று லட்சம் உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக  (Gunnell & Eddleston- Bulletin of the World Health Organization- Suicide, suicide attempts and pesticides: a major hidden public health problem) ஆகியோரின் ஆய்வு குறிப்பிடுகிறது. அத்துடன் ஆசிய, தென்னமெரிக்க நாடுகளில் தற்கொலைகளின் அளவு மிக அதிகமாக உள்ளதையும் அந்த ஆய்வு வெளிக் கொணர்கிறது. பூச்சிக் கொல்லிகளை உட்கொண்டால் சாவு உறுதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பூச்சிக் கொல்லிகளோடு உறவாடினாலும் ஆபத்து என்பது நமக்கெல்லாம் புதிய செய்தி. அதாவது பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து தெளிப்பதாலும், அதை நுகர்வதாலும் நமக்கு ஒரு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சூழலியல் உடல்நலச் செய்தி என்ற செய்தியேடு ஹார்வர்டு மருத்துப் பள்ளியின்  (Harvard Medical School report) அறிக்கையை அடிப்டையாகக் கொண்டு பீட்டர் என்ற உழவரின் தற்கொலையைப் பற்றி ஆய்வுசெய்து எழுதியுள்ளது. இதே போன்று கேரளத்தில் உள்ள காசர்கோடில் முந்திரித் தோட்டங்களில் தெளித்த ‘எண்டோசல்பான்’ என்ற கொடிய பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட பின்விளைவுகளில் ஒன்றாக தற்கொலைத் தூண்டல் கூறப்பட்டது. ஆனால் அது குறித்த விரிவான ஆய்வுகள் செய்யப்பட்வில்லை. இந்த ‘ஆர்கனோபோஸ்பேட்’ வகைக் கொல்லிகள் குளோரோபைரிபாஸ், மித்தைல் பாரத்தியான், மாலத்தியான் போன்ற பல வணிகப் பெயர்களில் விற்பனையாகின்றன. ஆர்கனோ பாஸ்பேட் வகைப் பூச்சிக் கொல்லிகள் நரம்பு மண்டலத்தைப் போய்த் தாக்குகின்றன. இதனால் மனத்தில் ஒரு வகை யான அழுத்தம் ஏற்படுகிறது. தொடர்ந்து பூச்சிக்கொல்லித் தெளிப்புகளுக்கு உள்ளாகும்போது இந்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த வகை ‘பூச்சிக்கொல்லிகளை குடிப்பதால் மட்டும் தீங்கு செய்பவை என்று எண்ணிவிடக் கூடாது, தொடர்ந்து மனித வாழ்வில் அச்சுறுத் தும் நஞ்சு’ என்று புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான தேசிய உடல்நல பயிற்றகம்  (US National Library of Medicine National Institutes of Health) தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது, வேளாண் சமூகத்தில் மட்டுமே அதிகமாக தற்கொலைகள் நடப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இந்தக் கொல்லிகளை நுகர்ந்தால் மட்டுமல்ல, அவை தோலின்மீது பட்டாலும் ஆபத்து என்று தயாரிப்பாளர்களே குறிப்பிடுகிறார்கள். நமது நாட்டில் யாரும் முகமூடி அணிந்துகொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பது கிடையாது, அது மட்டுமல்ல: கையால் பூச்சிச்கொல்லிகளை நீருடன் சேர்ந்து கலக்குகின்றனர். இதைவிடக் கொடுமை ஒரு தொழிலாளி, இவர் பூச்சிக்கொல்லி தெளிக்கும் வேலையை மட்டும் செய்து தருபவர். ஒருமுறை அவர் கூறும்போது நன்றாக நீரில் கலக்கி பின்னர் நாக்கில் வைக்கும்போது ‘சுர்ர்’ என்று எரிந்தால் அது சிறப்பு என்றார். இப்படி எத்தனை விவசாயிகள் உள்ளனரோ தெரியாது. இப்படி கொல்லிகள் பற்றி விழிப்புணர்வே இல்லாமல் நமது சூழலில் தெளிக்கப்படும் இந்த நஞ்சுகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் கொல்லும் ஆலகாலமாகும் என்பதை மறுப்பதற்கில்லை. முதன் முதலில் கண்டறியப்பட்ட தீவிரமான டி.டி.ட்டி என்பது ஒருவகையான நின்றுறும் (ஜீமீக்ஷீsவீstமீஸீநீமீ) கொல்லி வகையைச் சார்ந்தது. இது தெளித்த பின்னரும் நீண்ட நாட்கள் சூழலில் நின்று நிலவும். இதனால் நஞ்சு நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதை ரெய்ச்சல் கார்சன் போன்றவர்கள் உயிரைக் கொடுத்து எதிர்த்தார்கள். பின்னர் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படாத கொல்லி இதுவாகும். இவ்வாறு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பல கொல்லிகள் இந்தியச் சூழலில் உலா வருகின்றன. தஞ்சை மட்டுமல்ல; இந்தியா மட்டுமல்ல; உழவர் களின் தற்கொலைகள் தொடர்கதை யாவதற்குக் காரணம், இந்தப் பூச்சிக் கொல்லிகள் எனும் உயிர்க்கொல்லிகளே.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments