வர்தா புயல் : ஓர் சோதனை

கடந்த ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு, ஒரு பயங்கரப் புயல் மறுபடியும் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்களைச் வேரோடு சாய்த்தும், மின் மற்றும் தண்ணீர் விநியோகத்தைப் பாதித்தும் இது நடந்திருக்கிறது. 2015 ஆண்டின் நவம்பர்-டிசம்பர் வெள்ளத்திற்குப் பிறகு, சென்னையில் அமைப்பு சாரா வானிலைத் தகவல் மையங்கள் பல தோன்றின. ஸி. பிரதீப்ஜான் எனும் தன்னார்வ வானிலை ஆய்வாளர் சென்னை வாசிகளின் வானிலை குறித்த செய்திகளுக்கு ஒரு முக்கியத் தகவல் மூலமாகத் திகழ்ந்தார். `தமிழகத்தின் வானிலையாளர்` என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவர், தனக்குக் கிடைத்த RADAR  தரவுகளின் மூலம், அதனை ஆராய்ந்து தக்க சமயத்தில் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தார். வர்தா புயல் நிலத்தைத் தாக்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே ஜான் தொடர்ந்து அதைப் பற்றி எழுதி வந்தார். ஆனால், புயல் நிலத்தை நெருங்கிய டிசம்பர் 12 மதியம் அவர் வார்த்தைகளில் மிரட்சி இருந்தது. “நான் என் வாழ்க்கையில் இதுவரை இப்படி எதையும் பார்த்ததில்லை” என பதிவிட்டிருந்த அவர், “1994-ஐ விட இது மோசம். படுபயங்கரமானது. வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். சென்னை இதைப் போன்ற ஒரு புயலைப் பார்த்ததில்லை. தயவுசெய்து இதை முக்கியமான அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி யிருந்தார். அவர் வார்த்தைகளில் அச்சுறுத்தும் தொனி இருந்தது. அடுத்த சில மணி நேரங்களுக்கு, சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் அதிவேகப் புயலாலும் மழையாலும் உருக்குலைந்தது. வர்தாவின் பாதையில் சின்ன மாற்றங்கள் இருந்தது. சென்னைக்குத் தெற்கே கரையைக் கடக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட புயல், வடக்கே புலிகட் ஏரி வழியே கடந்தது.  `Wind Tracking Website Windfinder` என்ற வலைத்தளத் தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் புயலின் சராசரி வேகம் 55 ளீஸீஷீts (மணிக்கு 101.86 கிமீ வேகம்), காற்றின் வேகம் 75 ளீஸீஷீts (மணிக்கு 138.9 கிமீ வேகம்) இருந்தது. வர்தா புயல் `மிகக் கடுமையானது` என்று வகைப்படுத்தப்பட்டது. புயலின்
கோபி வாரியர்சென்னையின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான சோதனை! வர்தா புயல் 30பூவுலகு | ஜனவரி 2017 முன்முகம் கடக்கும்போது அதீத மழையும் பலத்த காற்றும் வீசியது. மையப்பகுதி கடக்கையில் ஒரு சின்ன இடைவெளி – அமைதி. பிறகு, எதிர் திசையில் மழையும் காற்றும் வீசத் தொடங்கி மாலை வெகுநேரம் நீடித்தது. முடிவில் நகரம் முழுமையுமே போர்க்களக் காட்சிதான்.

சரியான முன்கணிப்பு:

வர்தா புயலின் தீவிரம் `தமிழ்நாடு பருவநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டம்` செய்த கணிப்பைச் சரியென்று உணர்த்தியுள்ளது. ஜூலை 2014ல் வெளியான இந்த ஆவணத்தில் “வருங்காலத்தில் தமிழ்நாடு உட்பட்ட கிழக்கு இந்தியக் கடற்கரையைத் தாக்கும் புயல்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி வரும் புயலின் வேகம் தீவிரமானதாக இருக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதை எதிர்கொள்ள புதுமையான செயல் திட்டங்கள் தேவை என்பதை இந்த அறிக்கை முன்பே சிந்திக்கவில்லை. வங்கக் கடற்கரையோரத்தில் இருப்பதால், சென்னையில் புயல் மழைக்கும் வெள்ளத்திற்கும் வாய்ப்பு இயல்பாகவே அதிகம். எனினும், 2015 ஆண்டு வெள்ளமும் 2016ல் வந்த வர்தா புயலும் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை, இனி வரவிருக்கும் இது போன்ற அதீத வானிலை அபாயங்களுக்கான முன்னோடமாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. சென்னையின் வேறு சில பலவீனங்களையும் வர்தா வெளிகாட்டியிருக்கிறது. கடற்கரையை ஒட்டிய சமவெளி நகரம் என்பதால் வெள்ளப் பாதிப்பும் நீர் சூழ்ந்துகொள்வதும் ஒரு பெரிய சிக்கல் சென்னைக்கு. போதாக்குறைக்கு சென்னை பூகம்ப மண்டலம் எண் 3-ன் வரையறைக்குள் வருகிறது. நகரத்தின் சில பகுதிகள் மண்டலம் 4-லும் வகைக்குள் வருபவை.

குடிநீர் பிரச்சனை

எல்லாவற்றுக்கும் மேலாக சென்னைக்கு நிலை யான தண்ணீர் ஆதாரம் கிடையாது. நிலத்தடி நீர், தொலைவிலிருக்கும் நீர்த்தேக்கங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு என எல்லாமும் சேர்ந்துதான் சென்னையின் நீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்த மூலங்களிலிருந்து வரத்து குறைந்தால் நகரவாசிகளுக்குத் திண்டாட்டம்தான். இது மாதிரியான பாதிப்பு, சென்ற 2015 வெள்ளத்தின் போதும் 2016 புயலின்போதும் நடந்தது.  இடையூறுக்குக் காரணம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுப் போனதனால். சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு மின் வாரியத்திற்கும் விழுந்த மரங்களை அகற்றி மின்கம்பங்கள் நட்டு இணைப்புகள் வழங்குவதே பெரும் சவாலாய் ஆனது. டிசம்பர் 2015ன் போதும் நகரின் சில பகுதிகளில் மின்சேவை கிடைக்க ஐந்து நாட்கள் பிடித்தது. இரண்டாண்டுகளாக நடந்த சம்பவங்கள் நமக் கிருக்கும் தகவல் போதாமையைக் காட்டுகிரது. 2015 வெள்ளத்தின்போது சென்னை வாசிகளை விட வெளியூர் மக்களுக்கு வெள்ளத்தின் காரணமும் அது ஏற்படுத்திய பாதிப்பும் புரிந்தது. வெள்ளத்தைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்  (IMD)  வெளியிட்டிருந்த குறிப் புகள் ஏராளம். ஆனால், அடுத்து வரவிருக்கும் மழை என்ன மாதிரியான பாதிப்பு களை ஏற்படுத்தும் போன்ற மக்களுக்குத் தேவையான தகவலென்று அதில் எதுவுமில்லை. வானிலை தகவல்சார் வலைத்தளமான ‘Skymet
Weather’ ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மிழிஷிகிஜி செயற்கைக் கோள் தரும் புகைப்படங்களை வெளியிட்டது. நகரத்தைச் சூழ்ந்திருந்த மேகக் கூட்டங்களின் அளவைப் பற்றிய ஒரு புரிதலை அது ஏற்படுத்தியது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments