மண்ணின் மரங்கள்

வர்தா புயல் நமக்கு அறிவுறுத்திய பாடம் ஒன்றும் புதிதல்ல. தானே புயல் அடித்து சொன்னதைத்தான் வர்தா புயல் நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி இருக்கிறது. புதிதிதாக புயல்களுக்கு நாம் பெயரிட்டு கொண்டாலும், அவை நமக்குச் சொல்லுகிற அறிவுரை புதிதல்ல. 2011 ஆண்டின் இறுதியில் தானே புயலின் தாக்கத்தை ஆய்வு செய்த மெட்ராஸ் கிருஸ்துவ கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்கள் ‘இம்மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட அயல்தாவரங்களுக்கு புயலைத் தாங்கும் தன்மை இல்லை. இயல்தாவரங்கள் பெரும்பாலும் புயலை எதிர்கொண்டுவிட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மரங்களில் அயல்மரங்கள்தான் அதிகம்’ என்றார். இதன் வழியாக புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அயல் மரங்கள்தான் காரணம் என்ற புரிதலுக்கு நாம் வந்தடைவது அரசியல் போதாமையே. குறுகிய கால வளர்ச்சி, பொருள் மதிப்பு, மருத்துவ பயன், உணவு, அழகுணர்ச்சி, நறுமணம் என்று மனிதனின் அல்லது சமூகத்தின் சுயவிருப்பத்தின் ஊடாகவே அயல் தாவரங்கள் இம்மண்ணில் வரவேற்கப்பட்டன. இக்கற்பிதத்திற்குப் பின்னிருக்கும் முதலாளிய வர்க்க நோக்கத்தை அல்லது அரசின் செயலை கேள்விக்குள்ளாக்காமல், எல்லாவற்றும் மரங்கள்தான் காரணம் என்ற முடிவுக்கு வருவது பார்வைக் கோளாறுதான். இந்தியாவில் உள்ள தாவரங்களில் 40% அயல் தாவரங்களே என்கிறது தாவர மரபியல் வள தேசிய ஆணையம். எந்த அயல்தாவரங்களும் தானாக வானூர்தியில் ஏறி இந்தியாவுக்குள் வந்துவிடவில்லை. இன்றைக்கும் தோட்டக்கலைதுறை மற்றும் வனத்துறையின் அலுவலகங்களில் அயல் தாவர நாற்றுகள்தான் பெரும்பான்மையாக உற்பத்தி செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை களில் நடப்படுகிற மரங்கள் ஏறக்குறைய அனைத்தும் அயல் தாவரங்கள்தான்.

தமிழ்தாசன்

அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக எந்தவித ஆய்வுமின்றி அயல்தாவரத்தை இம்மண்ணில் அறிமுகப்படுத்தி, பேரழிப்பிற்குக் காரணமாக இருந்த, இருக்கின்ற அரசின் நடவடிக்கையை கேள்வி கேட்பதும், எதிர்ப்பதும், அதன் வழி மக்களை விழிப்படைய செய்வதும்தான் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாகும். மண்ணின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு எந்தெந்த உயிர்கள் இந்த புவியில் எங்கெங்கு வளர வேண்டும் என்று இயற்கை முடிவு செய்கிறது. இது இயற்கையின் விதி. பொதுவாக ஓரிடத்தில் தோன்றி பன்னெடுங்கால இயற்கை யான படிமலர்ச்சிக்கு உட்பட்டு, இயல்பாகவே வளர்ந்து, வளரியல்பு தன்மை பெரும் தாவரங்கள் இயல்தாவரங்கள ஆகும். அதாவது மனிதர்கள் தோன்றும் முன் புவியியல் தன்மை மற்றும் தட்பவெப்பச் சூழலுக்குத் தக்கவாறு இயற்கையாக படிமலர்ச்சி அடைந்து
பரவிய தாவரங்கள் இயல்தாவரங்கள். இயல் தாவரங்களில் மரங்கள்பற்றி மட்டும் நாம் பேசுவதால் அதை மண்ணின் மரங்கள் என்கிறோம். மனிதனின் முயற்சியின்றி அல்லது மனித வரவுக்குப் பிறகு, மனிதனின் நேரடி அல்லது மறைமுக முயற்சிகளால் புதிய தட்பவெப்ப சூழலுக்குள் அல்லது தன்னியல்பிற்கு மாறான சூழலுக்குள் புகும் அல்லது புகுத்தப்படும் தாவரம் அயல்தாவரம். தேசிய எல்லைகளை மனிதர்கள் கொண்டிருப்பதால் அதை அயல் நாட்டுத் தாவரம் என்று அழைக்கிறோம். இயற்கை பல்லுயிரிய வளமும் நமது பண்பாட்டு தொடர்பும் இணையும் புள்ளிதான் மண்ணின் மரங்கள் என்று சொல்லுகிறோம். மரக்கன்றுகளை நடும் பல்வேறு தன்னார்வ, சமூக மற்றும் சூழலியல் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விசயமாக இருக்கிறது. காரணம் அறிவியல் தளத்தில் பேசப்பட்ட அளவிற்கு பண்பாட்டுத் தளத்தில் நின்று தாவரங்கள் பற்றிய உரையாடலை விரிவுபடுத்தவில்லை. தாவரங்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பு விரிவாகப் பேசப்பட வேண்டும். ஏன் அயல் தாவரங்களைத் த ¬ ட ª ச ய் ய « வ ண் டு ம் ? தானாகவோ அல்லது பூச்சிகள் பறவைகள் வழியாகவோ அயல் தாவரங்கள் இந்த மண்ணில் பரவி, முற்றுகைத் தாவரமாகிவிடும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கப்படும், அது மக்களுக்கும், இங்குள்ள உ யி ரி ன ங் க ளு க் கு ம் ª ப ரி ய அச்சுறுத்தலாக மாறும். இயல் தாவரங் களால் கிடைக்கப்பெற்ற பொருளாதார பயன், மருத்துவ பயன், வாழ்வியல் சூழல் அழிந்து போகும். மேலும் அரசுக்கு அது பொருளாதார சுமையை ஏற்படுத்தும். சீமைக் கருவேலம், பார்த்தீனியம், ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் ஒரு சான்று. 1993ஆம் ஆண்டில் நீராதாரங்களில் உள்ள முற்றுகைத் தாவரங்களை அழிக்கும் நடவடிக்கைக்காக 100 மில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டுள்ளது என அதன் தொழில்நுட்ப மதிப்பீடுக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. அயல் தாவரங்களை ஒழிப்பதற்காக ஆண்டுக்கு 137 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க அரசு தனது பட்ஜெட்டில் ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அயல்தாவரங்களைத் தடுக்கவும், கட்டுப் படுத்தவும் பல்வேறு சட்டங்களை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி அமெரிக் காவிற்குள் அயல்தாவரங்களை, உயிரினங்களை, கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஏதேனும் அயல்தாவரத்தைக் கண்டால், அதனை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மூன்றாம் நாடுகளை சுரண்டி வல்லரசாக விளங்கும் ஒரு நாட்டுக்கே இந்த நிலைமையென்றால் மூன்றாம்தர நாடக இருக்கும் இந்தியாவின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவிற்குள் அணு உலையே கொண்டு வர இயலுமென்றபோது அயல்தாவரத்தைக் கொண்டுவருவதெல்லாம் ஒரு விஷயமா? நெய்வேலி காட்டாமணக்கு, சீமைக் கருவேலம், முள்முருங்கை, சூபா புள், தூங்குமூஞ்சி வாகை, பார்த்தினியம், குல்முகர், தைல மரம், ஆகாயத்தாமரை, பாகோடா, பெல்டோபார்ம், தீக்குச்சி, சிகப்பரளி போன்றவை நம் மண்ணிலுள்ள அயல்தாவரங்கள் ஆகும்.

அதனால் நாம் அனைவரும் நம் மண்ணில் உள்ள உயிர்கள் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும், அயல் தாவரங்கள், அயல் உயிரினங்கள் மீது வெறுப்பை சுரக்க வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரினங்களுக்கும் நாடு, சாதி, மதம் போன்ற கற்பிதங்கள் எதுவும் கிடையாது. இயற்கைக்கு எல்லா உயிர்களும் சமம்தான். சூழலை பாதுகாக்க முனையும் நாம் முதலில் நம் மண்ணின் மரங்கள் எவை? அயல் தாவரங்கள் எவை? என்று அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பிதான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்துவந்து இருக்கின்றன. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச் சாய்த்துவிட்டு, அதற்குப் பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்குப் பழக்கப்படாத தூங்கு மூஞ்சி வாகை, குல்மோகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகின்றன. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்து போகின்றன. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கபட்டு, பல்வேறு வித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். நாம் நடுகிற மரக்கன்றுகளிலிருந்து நாளை பூக்கிற பூக்களின் மகரந்தத்தை தேனீக்கள் நுகரவேண்டும். பழத்தைத் தின்று அதன் விதைகளை பறவைகளும் அணில்களும் பரப்ப வேண்டும். பூச்சி, பறவை, விலங்கு, நாம் என அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுறவாக வனம் செய்யும் ஆதிகால பாரம்பரிய இயற்கை நடைமுறைக்கு திரும்புவோம். இருப்பதை காப்போம். எப்படி குருவிகளால் தன் குஞ்சுகளுக்கு பாலூட்ட முடியாதோ, எப்படி முயல்களால் இரையை வாயில் கவ்விக் கொண்டு வந்து தன் குட்டிகளுக்கு ஊட்ட முடியாதோ, அவ்வாறே அயல் தாவரங்களால் இங்குள்ள உயிர்களுக்கு வாழ்வளிக்க முடியாது. இயல்தாவரங்களே ஒவ்வொரு திணை மண்டலத்தில் நிகழும் இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ளும் தகவமைப்பை பெற்று இருக்கிறது. இயல்தாவரங்களே இம்மண்ணி னுள்ள உயிர்களுக்கு தாயாக இருக்கிறது. இது இயற்கையின் விதி. இவ்விதியை மரவழிபாடு, கோவில்காடு, படையல், மூலிகை, உணவுக் கலாச்சாரம், வேளாண்மை உள்ளிட்ட பல பண்பாட்டுத் தொடர்புகளின் வழியாக, பொருளுற்பத்தியின் வழியாக மானுட சமூகம் அதனைப் பராமரித்து வந்து இருக்கிறது. அப்பண்பாட்டுத் தொடர்புகளை உலகமயம், அயல் தாவர பரவலின் வழியாக அறுத்தெறிந்து விட்டது. அயல்தாவரம் எது இயல் தாவரம் (மண்ணின் மரங்கள்) எது என்பது பற்றிய புரிதலின்மையே நம் மண்ணை இந்நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அத்தி, இச்சி, பனை, புரசு, மருதம், கடம்பம், தில்லை, இலவு, முள்ளிலவு, நாவல், ஈச்சம், தான்றி, குமிழ், சந்தனம், நாட்டுக் கருவேலம், இலுப்பை, ஆலம், அரசு, வேப்பம், அகில், நெல்லி, அழிஞ்சில், வெள்வேலம், ஆச்சா, ஆசினி பலா, ஆத்தி, இலந்தை, புங்கம், உசில், ஒதியன், காஞ்சரை, கிளுவை, கொன்றை, கொன்னை, கோங்கம், செண்பகம், சரக்கொன்றை, தணக்கு, தேற்றா, மஞ் சநத்தி, பன்னீர், வெப்பாலை, ஏழிலைப்பாலை, தோதகத்தி, புன்னை, பூவரசு, பூவந்தி, மகிழம், மந்தாரை, மா, கருங்காலி, மூங்கில், வலம்புரி, வாகை, வாழை, வன்னி, வேங்கை உள்ளிட்ட நம் மண்சார்ந்த மரக்கன்றுகளை நடுவோம். மண்ணின் மரங்களை நட வேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல இயற்கைவாதம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments