சூழலியல் அரசியல் பேசுவோம் – 2

“System” சரியில்லை என நமது “சூப்பர் ஸ்டார்” ரஜினி காந்த் அவர்கள் அறிவித்ததை நாம் மறந்திருப்போம். சிஸ்ட்டம் என்றால் என்னவென்று அவரிடம் கேட்டியிருந்தால் ஒருவேளை அவருக்கு தலை சுற்றி போயிருக்கலாம்.

சிரி, சிஸ்ட்டம் என்றால் என்ன?

அமைப்பாக இயங்க கூடியவை அனைத்தும் சிஸ்ட்டம் தான்!

அதாவது இயக்க தன்மை உடைய அமைப்பு என்று கூறலாம்!!

அமைப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம். இயற்கையாக இருக்க கூடிய அமைப்புகள். செயற்கையாக மனித சமூகம் உண்டாக்கிய அமைப்புகள்.

பூமியை உள்ளடங்கிய சூரியக் குடும்பம் ஒரு அமைப்பு முறை.  நீர் நீராவியாகி, மேகமாக மாறி, மழையாக பொழிவது ஒரு அமைப்பு முறை. மரங்கள் கார்பன் டை ஆக்ஸ்டை ஆக்சிஜனாக மாற்றுவது ஒரு அமைப்பு முறை. பூமியின் இயக்க போக்கு ஒரு அமைப்பு முறை. டாஸ்மாக் தமிழனை போல சாய்வாக ஒரே பாதையில் சூரியனை சுற்றி வரும் பூமியின் நீள்வட்ட பாதை ஒரு அமைப்பு முறை. இப்படி பல இயற்கை அமைப்புகள் உள்ளன.

இது எல்லாம் இயற்கையாக உள்ள அமைப்புகள்.

மனித சமூகம் உண்டாக்கிய அமைப்புகளும் இங்கு உண்டு. அதில் முதன்மையானது குடும்பம் என்னும் அமைப்பு முறை. சொத்து என்னும் அமைப்பு முறை. சாதி என்னும் அமைப்பு முறை. என்பது ஒரு சிஸ்ட்டம். ஜனநாயகம், தேசம், கல்வி முறை, வணிகம், மருத்துவம், நகரம், கிராமம், ஆகிய அனைத்தும் தனித்த அமைப்பு முறைகள் தான்.

இவை எல்லாவற்றையும் மீறிய பெரிய அமைப்பு ஒன்றுள்ளது. அது தான் அரசு என்னும் அமைப்பு முறை.

அரசு, எண்ணையும் உங்களையும் கட்டுப்படுத்துகிறது. நாம் கொடுத்த அதிகாரத்திலேயே. நம் பெயரிலேயே.

இதனை விட முக்கியமானது. இயற்கையின் அமைப்புகளை இடையூறு செய்கிறது அரசு என்கிற அமைப்பு.

“அப்ப தனி மனிதர்கள் இயற்கையை மாசு படுத்த வில்லையா சகோ” என்னும் உங்கள் கேள்வி கேட்கிறது. செய்கிறார்கள் தோழா. ஆனால் அது செர்ப்பம் தான்.

சரி இயற்கை என்னும் பிரமாண்ட இயக்கத்தை எப்படி தோழா மனித சமூகம் உண்டாக்கிய அரசு இடையூறு செய்ய முடியும்.

இதற்கான விடைக்கானும் முன், நம்முடைய அறிவயல் மனபான்மையை சற்றே ஆராய வேண்டியுள்ளது. காரணம், அறிவியல் பார்வையில் மட்டுமே எந்த ஒரு அமைப்பு முறையையும், அதன் இயற்கை தம்மையோடு புரிந்துக் கொள்ள முடியும்.

நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சிலபல கருத்துக்களின் கூட்டு எண்ணிக்கையில் வழி நடப்படுகிறோம்.

பாலினம், மதம், சாதி, மொழி, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, குடும்பம், ஆசிரியர்கள், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கல்வி, அரசியல் கட்சிகள், இயக்கங்கள், இன்னும் பல, என எல்லாமும் இனைந்து நம்முடைய சிந்தனைகளை வளர்தெடுள்ளன.

இவற்றுக்குள்ளே அறிவியல் அறிவை கண்டெடுப்பதே நமது முதல் தேவை.

அதற்கான அறிவியல் மணபான்மையை வளர்தெடுக்க வேண்டும். எதனையும் அதன் இயற்கையை தன்மையில் புரிந்துக் கொள்ள வேண்டும். அறிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு அறிவயலை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அறிவியல் என்றால் என்ன! இயற்கையை அறிதலே அறிவியல்.

எதனையும் ஆராய்ந்து விளக்கும் முறையே அறிவயலாகும். நீங்களும், நானும் ஆரய வாய்ப்புள்ள முறையே அறிவியல். நம் இருவருக்குமான ஆராயச்சி முடிவு ஒன்றாக வரும் நிலையில் அது நிறுவப்பட்ட அறிவியல் உண்மையாக இருக்கலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் எதனையும் ஆய்வு செய்து விளக்கும் முறை அறிவியல். எதனையும் கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் முறை அஞ்ஞானம்.

அறிவியல் வழியில் நம் கேள்விக்கான விடைகளை தேடுவோம்.

சூழலியல் அரசியல் பேசுவோம் – 1

– வழ. வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *