சூழல் விரோதியா டிரம்ப்?

பெண்ணியவாதிகளைப் போல அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல்வாதிகளும் டோனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டதில் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான பிற்போக்குக் கருத்துகளை கொண்டவர் டிரம்ப். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கூட பெண்களை மிகக் கேவலமாக அவர் பேசிய 2005ஆம் வருட ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. சுற்றுச் சூழல் விஷயங்களிலும் மிகமோசமான பிற்போக்குக் கருத்துகளையே டிரம்ப் கொண்டிருக்கிறார். அதிபராக அவரது தேர்வு, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை இன்னமும் தீவிரமாக்கும் என்று நம்புகிறார்கள் சர்வதேசச் சூழலியல்வாதிகள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போதே கூட சூழல் குறித்த மிக மோசமான கருத்துகளை வெளியிட்டதுடன் சிலவற்றை தேர்தல் வாக்குறுதி களாகவும் அளித்தார் டிரம்ப். அதில் மிக அதிர்ச்சிகரமான ஒன்று, பருவநிலை மாற்றம் என்றொரு பிரச்னையையே அவர் முற்றிலும் மறுக்கிறார். அமெரிக்க உற்பத்தியை நிறுத்த சீனர்களால் உருவாக்கப்பட்ட மாயைதான் பருவநிலை மாற்றம் என்ற கருத்தை இரு வருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். அப்போதிலிருந்தே பருவநிலை மாற்றம் என்பது வரி வசூலிக்க ஒரு ஏமாற்று நடவடிக்கை, பருவநிலை மாற்றம் என்ற ஒன்று இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் டொனால்ட் டிரம்ப். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பாரிஸ் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி வைத்திருக்கும் கருத்துகள் ஆபத்தானவை.

நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவர் சொல்லி வந்தார். பருவநிலை மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது எனவும் அமெரிக்காவுக்கு எதிராக இருந்தது எனவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். பருவ நிலை மாற்றத்தை நிராகரித்து எதுவும் பேசவில்லை என்று டிரம்ப் பின்னர் பிரச்சாரத்தின் போது சொன்னாலும் அவர் அளித்த பேட்டிகளும் டிவிட்டரில் அவர் பதிவிட்ட கருத்துகளும் அப்படியேதான் இருக்கின்றன. பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமான புதைபடிம எரிபொருள் (Fossil fuel) தொழிலில் டிரம்பிற்கு இருக்கும் அக்கறை பற்றியும் கவலையோடு பேசுகிறார்கள் சூழலியல்வாதிகள். டகோடா எண்ணெய்க் குழாய் திட்டத்தில் டிரம்ப் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். 1800 கி.மீக்கு மேலும் நீளும் இந்த திட்டத்தால் பல சூழல் கேடுகள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டால் மிசூரி நதி மாசுப்படும் என்று அந்த பகுதியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். குடிநீர் உள்ளிட்ட பல தேவைகளுக்காக அந்த நதியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அது மிகப்பெரிய பிரச்னையாக உருவாகும். அது போல இந்த எண்ணெய்க் குழாய் பதிப்பதன் மூலம் நிலமும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் பயப்படுகிறார்கள். குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் வெள்ள அச்சுறுத்தல் பகுதிகளை அது கடுமையாக பாதித்து மிகப்பெரிய சூழல் சீர்கேடுக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க் கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்களை நிர்வாகத்தின் பாதுகாப்புத்துறையினர் நாய்களை ஏவி விரட்டிய சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் தனது பிரச் சாரத்தின் போது கூட இந்த திட்டம் பற்றியும் அதில் தனக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் வாய் திறக்கவில்லை டிரம்ப். மரபணு மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்யும் மண்சோட்டா நிறுவனத்துக்கு ஆதரவான வராகவும் டிரம்ப் சித்தரிக்கப்படுகிறார். டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடனேயே மண் சோட்டாவின் பங்கு மதிப்பு 4 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. டிரம்ப் தேர்வு செய்து வைத்திருக்கும் அட்டர்னி ஜெனரலால் மண்சோட்டாவின் திட்டங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விவசாயிகளின் நலன்களிலோ இயற்கை உணவிலோ டிரம்புக்கு அக்கறை இல்லை என்கிறார்கள் விவசாய அமைப்பினர்.

மரபணு மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்யும் மண்சோட்டா நிறுவனத்துக்கு ஆதரவான வராகவும் டிரம்ப் சித்தரிக்கப்படுகிறார். டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடனேயே மண் சோட்டாவின் பங்கு மதிப்பு 4 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

திட்டங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விவசாயிகளின் நலன்களிலோ இயற்கை உணவிலோ டிரம்புக்கு அக்கறை இல்லை என்கிறார்கள் விவசாய அமைப்பினர். பருவநிலை மாற்றம் பற்றிய நாசாவின் ஆய்வை முழுமையாக நிறுத்தவும் டிரம்ப் திட்ட மிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதைவிட முட்டாள்தனமான முடிவு இருக்காது என்று கருதுகிறார்கள் பருவநிலை மாற்ற நிபுணர்கள். ஆனால் டிரம்பிடமிருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கலாம். அமெரிக்காவின் சூழல் கொள்கையையே அவர் புரட்டிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். ஆனால் பருவநிலை மாற்றத்தை நிராகரிப் பதன் மூலம், மண்சோட்டாவிற்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் சூழல் பிரச்னைகளில் ஏற்பட்டிருந்த சிறிய முன்னேற்றங்களையும் சிதைத்து மீண்டும் பூமியை இருண்ட காலத்துக்கு டிரம்ப் தள்ளிவிடுவார் என்கிற அவர்களது அச்சங்களில் நியாயம் இருக்கவே செய்கிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் பூமியின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்வது போல சூழலுக்கான போராட்டத்தை இன்னமும் தீவிரப்படுத்தவேண்டிய காலகட்டம் இது. “புதிய ஆற்றலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றாக செயல்பட வேண்டும். வெறுப் புக்கும், பேராசைக்கும், சூழல் நாசத்திற்கும் எதிரான எல்லா முயற்சிகளையும் திரட்டி போராட வேண்டும். நம் முன்பு வேறு விதமான போராட்டம் இருந்திருக்கலாம்தான். ஆனால் இப்போது நம் முன் இருக்கும் இந்த சவாலையும் நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். நமது தேசத்தின், பூமியின் எதிர்காலம் இந்த போராட்டத்தில்தான் இருக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

கவிதா முரளிதரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments