பருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா?

பருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா? பாகம்-1

-அருண்குமார் ஐயப்பன்

 

அன்றொரு கனவு “ஊரெங்கும் அடைமழை வெள்ளத்தில் மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் பெண்கள் எனப் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகின்றனர். தன் விவசாய பயிர்கள் அழுகிப்போகிறதை அறிந்த ஒரு விவசாயி அங்கே புங்கை மரத்தின் நிழலிலே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார் ” “ஐயோ நான் போட்ட காசெல்லாம் போச்சே இனிமே நான் சாப்பாட்டுக்கும் வாழ்கிறதுக்கும் என்ன செய்வான் என்று??. இன்னொரு மூலையில் ஒருவர் தன் வீடு உடைமை, தன் மனைவி மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்வதை அறிந்து தன் மார்பிலே கை ரேகை பதியும் அளவு அடித்துக் கொள்கிறார். ஒருபக்கம் சில மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த துணி மணிகளைச் சுருட்டிக்கொண்டு வெள்ளம் பாதிக்கப்படாத இடங்களுக்கு வாழ்ந்த இடத்தை விட்டு புலம் பெயர்கின்றனர். காலம் காலமாக தங்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற நிலமும் வாழ்வும் இயற்கை சீற்றத்திடம் பறிகொடுத்து பலர் அங்கேயே செத்து மடிகின்றனர். இவை எல்லாம் கனவு இல்லை இந்தப் பூமியில் தினம் தினம் எங்கேயோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கும் பருவ நிலை மாற்றத்தால் நடக்கும் ஒரு உண்மை சம்பவமே! இனியும் நடக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! இது ஒரு கிராமத்தில் நடக்கிற விடயமல்ல ஒட்டுமொத்த சர்வதேச பிரச்சனை. மேற்கூறிய இந்தக் கதைக்கும் மூன்றாம் உலகப்போருக்கு நிச்சயம் சமந்தம் உண்டு என்றே கூறலாம்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்றும் நோக்கிலே நடந்திருந்தாலும், மூன்றாம் உலகப்போர் முற்றிலும் மாறுபட்ட நோக்கத்தால் நடக்கலாம். கண்டிப்பாக உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, காற்று, நிலம் போன்ற இயற்கை வளங்கள் மட்டுமே அதற்கு முக்கிய காரணமாக அமையும். ஆம்,  உலகமெங்கும் தற்போழுது நடக்கும் பருவநிலை மாற்றத்தின் ஒவ்வொரு நகர்வையும் சற்று சம்மந்தப்படுத்தினால் நம்மால் சில காரணங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் இந்தப் பூமியின் எதோ ஒரு மூலையில் அரங்கேறும் பருவநிலை மாற்றப் பாதிப்பின் அடிப்படையிலே மூன்றாம் உலகப்போரின் காரணம் பருவநிலை மாற்றமாகத்தான் இருக்க முடியும் என்ற வாதத்தை முன் வைக்கிறேன். இது பசியுடன் இருக்கும் ஒரு நாடு  அதிக உணவு உள்ள ஒரு நாட்டிடம் இருந்து உணவை பிடுங்கி தன் பசியை ஆற்றிக்கொள்ள நினைக்கும் கோட்பாடுதான்.

“பருவநிலை மாற்றம்” எப்படி மூன்றாம் உலகப்போருக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை அறிவதற்கு முன்பு நாம் சற்று பலகோடி வருடங்கள் பின்னோக்கி சென்று பால்வழி அண்டம், கோள்கள், பூமியின் தோற்றம் என்ற சூழ்நிலைக்கு செல்ல வேண்டும். முதலில் இந்தப் பூமி எப்படி உருவானது, “கருந்துளை” கோட்பாட்டின் படி அண்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவின் விளைவாகவே பல கோள்கள் உருவாகின அதில் தற்போது நாம் வசிக்கும் பூமியும் ஒன்று. முதலில் பூமியும் எந்த உயிரினமும் வாழ முடியாத சூரியனைப்போன்ற ஒரு நெருப்புக்கோளமாகவே இருந்துள்ளது. பின் படிப்படியாக அதன் அதிவெப்ப வீரியம் குறைந்து பனிப்பாறைகளைக் கொண்ட ஒரு கோள பனிப்பந்தாக உருவெடுத்தது. அதன் பிறகுதான் உயிரினங்கள் வாழ அனைத்தும் சாத்தியமானது. தற்போழுது இருக்கும் இயற்கை வளங்களான நீர், காற்று, இயற்கை என அனைத்தும் பூமி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது அதில் மனிதனுக்கு எந்தப் பங்கும் இல்லை. இப்படி படிப்படியாக பூமி தன் பரிணாமத்தை மாற்றிக்கொண்டது. மனிதர்கள் பூமியின் வளங்களைப் பயன்படுத்துவதும் மீண்டும் அவை சுழற்சி முறையில் பூமிக்கே வழங்கப்படுவதுமான வாழ்வைத்தான் கடைப்பிடித்து வந்தார்கள், இருவருக்கும் இடையிலான “சமநிலை” தொடர்ந்து காக்கப்பட்டது.

இப்படி இருக்கும் வேளையில்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலை உடைக்கப்படுகிறது. பூமியின் நிலப்பரப்பில் உள்ள மக்களின் எண்ணிக்கை கூடுகிறது, தேவைகள் அதிகமாகின்றன, மனிதனின் நுண்ணறிவும் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தன்னை வித்திடுகிறது. அதன் தொடர்ச்சியாக நீராவி இஞ்சின் முதல் பல்வேறு தொலைத்தொடர்பு, இயந்திரங்கள் கண்டுபிடிப்புகள் என மிகப்பெரிய தொழில் புரட்சியை பதினெட்டாம் நூற்றாண்டு சந்திக்கிறது. என்னதான் புதிய கண்டுபிடிப்புக்கள் மனிதக்குலத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனால் பின் வரும் விளைவுகளை அப்போதைய மனிதகுலம் யோசிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இப்படி படிப்படியாக முன்னேறிய மனிதக் குலத்துக்கு இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தன்னாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இயற்கை அழிவுகள் ஆரம்பமாகின. அவற்றில் கனமழை, வெள்ளம், வெப்பக்காற்று, வறட்சி,காட்டுத்தீ, புயல், சூறாவளி என அடுக்கடுக்கான இயற்கை சீற்றங்கள் இதனால் பலகோடிமக்கள் இறந்துள்ளனர். மேற்கூறிய காரணங்களால் நாட்டின்  பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் வாழ்வியல் சிதைந்துள்ளது, உணவு பற்றாக்குறை, அரசியல் மாற்றம் என பல்வேறு விளைவுகள், மேலும் பலர் தங்கள் வாழ்ந்த பூர்விக இடத்தை விட்டே இடம் பெயர்ந்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தின் விளைவாகக் கடந்த இருபது வருடங்களில் உலகெங்கிலும் பல்வேறு அழிவுகள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக வட மற்றும் தென் அமெரிக்கா மாகாணங்களில் காட்டுத்தீ, இந்தியாவில் கனமழை வெள்ளம் புயல்,பிரிட்டன் கொரிய பிராந்தியத்தில் வரலாறு காணாத வெப்பக்காற்று, என அடுக்கிகொன்டெ போகலாம். கொரிய வரலாற்றில் முதல் முறையாக கோடை வெப்பமானது 40 டிகிரியை தொட்டதோடு கிட்டத்தட்ட 42 பேர் வெப்பக்காற்றால் இறந்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஏப்பட்ட சூறாவளியின் காரணமா ஜப்பான் தீவு ஒன்று முற்றிலுமாக கடலில் மூழ்கியுள்ளது. அதோடு மட்டுமில்லாது உலகின் முதல் தண்ணீரற்ற நகரமாக ஆப்பிரிக்காவின் “கேப்” நகரம். உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் இறப்பு,ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில் மிகப்பெரிய பிளவுகள்,அமெரிக்கா ஹவாய் எரிமலையின் ஓய்வற்ற தீ குழம்பு, கிராமங்களில் “அரணை” என்றழைக்கப்படும் ஊர்வன வகை குறைவு , வருடத்தில் ஒரு முறை வெளிவரும் ஊசல் குறைவு, தொடர்ச்சியாகக் கோவில் யானைகள் மரணம் ,பல்வேறு  விலங்குகள் இறப்பு ,பல பூச்சிவகைகள் நமக்குத் தெரியாமலே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என்பதுதான் நாம் மறந்து கடந்து செல்லும் ஆபத்தான உண்மை. இப்படி ஒவ்வொன்றாக இழந்து கடைசியில் உணவுச் சங்கிலியே உடையும்  நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. அது என்ன உணவுச் சங்கிலி? அது இல்லை என்றால் மனிதர்களால் வாழ முடியாத? என்றால் கண்டிப்பாக வாழமுடியாது.ஒட்டுமொத்த மனித இனமும் பேரழிவைத்தான் சந்திக்கும். இந்தப் பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் உணவுச்சங்கிலி முறையிலேயே தொடர்கிறது இதில் ஒன்று தடைப்பட்டால் மற்றொரு உயிர் வாழக் கண்டிப்பாக சிரமப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பருவநிலை மாற்றம் காரணங்கள் என்ன அதை எப்படித் தடுப்பது என்ற நிலையை உலக நாடுகள் மிகத்தீவிரமாகக் கையிலெடுத்து. -To be continued

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *