பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தும் திட்டத்திற்கெதிரான வழக்கில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சூழலியல் செழிப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எவ்வித அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தூர்வாருவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள் இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படுவது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்தான்.

இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் வனத்துறையின் முதன்மை செயலாளரால் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசாணை எண் 103 வாயிலாக “பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்” ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த ஆணையமானது சுதந்திரமாக செயல்படவும் மத்திய/மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதியும் ஆணையத்தின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுவதற்கான அதிகாரத்தையும் இந்த அரசாணை வழங்கியது. இருப்பினும் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அரசாணை ஒன்றின் வாயிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்காக வனத்துறைக்கு 20.30 கோடியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணை குறித்தும், பள்ளிக்கரணை சீரமைப்பு பணிகள் குறித்தும் எவ்வித தகவலும் பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்திடம் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு தெரியாமலேயே இப்படி ஒரு திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது சட்டவிரோதமாகும்.

 

மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தயாரிக்கபப்ட்ட “Comprehensive Management Plan”ல் சதுப்பு நிலத்தை தூர்வாருவது குறித்து எந்த விபரமும் இல்லாத நிலையில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சதுப்பு நிலத்தை தூர்வாருவது அதன் இயல்பான தன்மையை பெரிதும் பாதிக்கும் மேலும் இத்திட்டத்திற்கன வழங்கபப்ட்ட அரசாணையும் சட்டவிரோதம் எனபதால் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர். கோ.சுந்தர்ராஜன் பெயரில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவில் குறிப்பிடப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதிபதி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments