இயற்கை பாதுகாப்பு

உங்களைச் சுற்றி 80 காட்டுயிர்கள்

காட்டுயிர்கள் அடர்ந்த காடுகளில் மட்டும் வாழ்வதில்லை. மனிதர்கள் உணவு கொடுத்து வளர்க்காத, தாங்களே உணவு தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிர்கள்தான்.

வீட்டு விலங்குகளாக நாம் பழக்காத எத்தனையோ காட்டுயிர்கள், தகவமைத்துக் கொண்டு நம்மைச் சுற்றி வாழ்ந்து வருகின்றன. வீடுகள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று எங்கெல்லாம் இயற்கை செழிக்க வாய்ப்புள்ளதோ, அங்கெல்லாம் காட்டுயிர்களை பார்க்க முடியும்.

வாய்ப்புள்ள பகுதிகளில் கீழ்க்காணும் காட்டுயிர்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள்.அவற்றின் செயல்பாடுகளை கண்காணியுங்கள். சுவாரசியமாகவும், புதிதாகவும் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

பறவைகள்

சிட்டுக்குருவி, மாடப்புறா, காக்கை, கதிர்க்குருவி, தையல் சிட்டு, பச்சைக்கிளி, சின்ன குக்குறுவான், நாகணவாய், கரிச்சான், ஊதா தேன்சிட்டு, புள்ளி ஆந்தை, கூகை, கள்ள பருந்து, செம்பருந்து, நாட்டு உழவாரன், பனை உழவாரன், தகைவிலான், சிவப்புமூக்கு ஆள்காட்டி, உண்ணிக் கொக்கு, குருகு, சிறிய நீர்க்காகம், சின்ன கொக்கு, நாமக்கோழி, கோகிலம் (குயில்)

ஊர்வன, நீர்நில வாழ்விகள்

சாரைப் பாம்பு, செவிட்டுப்பாம்பு, மண்ணுளிப் பாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், பச்சைப் பாம்பு, நல்ல பாம்பு, கண்ணாடிவிரியன், சிறிய வீட்டுப்பல்லி, அரணை, ஓணான், உடும்பு, தவளை, கிரிக்கெட் தவளை, தேரை

பூச்சிகள்

எறும்புகள், கரையான்கள், வண்ணத்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஈக்கள், குயவர் குளவி, தேனீக்கள், தயிர்க்கடைபூச்சி, குச்சிப்பூச்சி, கரப்பான்பூச்சி, வண்டுகள், மூட்டைப்பூச்சிகள், கொசுக்கள், தெள்ளுப்பூச்சிகள், பேன், தட்டாம்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், கிரிக்கெட் பூச்சிகள், அந்துப்பூச்சி, ஈசல்

பாலு£ட்டிகள்

மூன்று வரி அணில், குரங்கு, மந்தி, தேவாங்கு, கீரிப் பிள்ளை, மரநாய், மூஞ்சூறு, பெருச்சாளி, எலி, பறக்கும் நரி, பிப்பெஸ்டிரெல் வௌவால், சிறுத்தை, காட்டுப்பூனை, குள்ளநரி, கரும்பிடரி முயல்.