சூழலியல்

சூழலியல் - அடிப்படைக் கொள்கைகள்

20ம் நூற்றாண்டு ஈன்றெடுத்த குழந்தைகளில் சுற்றுச்சூழல் சீர்கேடும், சூழலியல் சிதைவும் தவறான சூழலில் வளர்க்கப்பட்டவை. சூழலியலை வலியுறுத்துபவர்கள் வளர்ச்சிக்கு எதிரிகள், நாட்டை முன்னேற விடாமல் தடுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த முத்திரை குத்தும் வேலையை முதலாளிகள்தான் வழக்கத்துக்குக் கொண்டு வந்தார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் முன்வைக்கப்படும் கொள்கைகளை, சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்துபவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? வளர்ச்சி என்பது யாருக்கான வளர்ச்சி? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அவசியம். அந்த வகையில் அடிப்படை சூழலியல் கொள்கைகள் இந்தப் பகுதியில் அறிமுகம் செய்யப்படும்.

நகர்ப்புற விரிவாக்கம்

நகர்ப்புற விரிவாக்கம் என்பது நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே போவது. நகர்ப் பகுதி எல்லை அருகே உள்ள கிராமப்புற பகுதிகளை நகர்ப்பகுதிகள் விழுங்கி விடுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் உள்ள வயல்கள், திறந்தவெளிப் பகுதிகள் காலப்போக்கில் கட்டடங்களாக, அடிப்படை கட்டுமான வசதிகளாக உருமாற்றப்பட்டு விடுகின்றன.

எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களை விழுங்கி ஏப்பம்விட்டுவிட்டு, எல்லா காலத்திலும் நகரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வேளாண் நிலங்கள், பண்ணைகள் அல்லது வேறு பயன்பாட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலப்பகுதிகளை நகரங்கள் சாப்பிட்டுவிடுகின்றன. கிராமப்புறம் மற்றும் ஒரு நிலப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க நிலங்கள், புல்வெளிகள், பண்ணைகள், காடுகள், நீர்நிலைகள் தேவை.

நகர்ப்புறம் எத்தனை சதுர கிலோமீட்டருக்கு விரிவடைந்துள்ளது என்பதை புரிந்துகொள்வதன் முலம், இயற்கையாக இருக்கும் சுற்றுச்சூழலை எவ்வளவு மோசமாக சீர்கெட்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம். நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக வேளாண் உற்பத்தி குறைவு, அளவுக்கு அதிகமாக இயற்கை சீரழிக்கப்பட்டுவிட்டதால் நகரங்கள், சிற்று£ர்கள், அவற்றை ஒட்டியுள்ள பயிர்நிலங்கள் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி குறைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நகர்ப்புற விரிவாக்கம் அதிகரிக்க அதிகரிக்க நகரவாசிகளின் வாழ்க்கைத்தரம் குறையும் என்பது மிகப்பெரிய உண்மை. ஒரு நகரம் மிகப் பெரிதாக ஆகஆக, அங்கு வாழும் மக்கள் திறந்தவெளிப் பகுதிகளை அடைய நீண்டது£ரம் செல்ல வேண்டியிருக்கிறது. (இங்கே திறந்தவெளிப் பகுதிகள் என்றால் வெற்றுநிலம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. திறந்தவெளிப் பகுதியில்தான் புதிய வீடு கட்ட முடியும். புதிய வீடு கட்டினால்தான், நகரங்களில் புதிதாக வாழவருபவர் தங்க முடியும்.)

விரிவடைந்த நகரங்களில் வாழும் மக்கள் பணியிடம், பிற தேவைகளுக்காக அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதன்காரணமாக நேரம் வீணாகிறது. பணம் செலவாகிறது. பயணம் செய்வது கடினமாக இருக்கிறது. இதன்காரணமாக ஒரு நகர்ப்புறவாசி, அடிக்கடி 'கூண்டுக்குள் அடைபட்ட எலி' போல நகரங்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒருவராக உணர்கிறார்.

ஒரு நபருக்குத் தேவையான நகர்ப்புற நிலத்தேவை என்பது அவரது தங்குமிடம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றுடன் முடிந்து விடுவதில்லை. நகரங்களில் வாழும், வாழ வரும் மக்களுக்காக பணியிடம், பொழுதுபோக்கு, கேளிக்கை, கடைகள், வண்டி நிறுத்துமிடம், போக்குவரத்துக்கு சாலைகள், சேமிப்பிடங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாடு மற்றும் பண்பாட்டு மையங்கள், குப்பை கொட்டுமிடம், கல்வி மையங்கள் என அவர்களது தொடர்ச்சியான பல தேவைகளுக்காக கிராமப்புற நிலங்கள் நகர்ப்புறமாக மாற்றப்பட்டு விடுகின்றன. பெருமளவு நிலப் பகுதியில் வளர்ச்சியை பரப்பும்தன்மை கொண்டது விரிவாக்கம். இதன்காரணமாக வீடுகள், கடைகள், பணியிடங்கள் இடையே பெரும் தொலைவு ஏற்படும். இந்தத் தொலைவை கடக்க மக்கள் தினசரி மிக அதிகம் பயணம் செய்ய வேண்டி வரும்.

இயற்கை வளங்கள் மீது நகர்ப்புற விரிவாக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் இதைவிட பயங்கரமானவை. வேளாண் நிலங்களை விரிவாக்கம் விழுங்கிவிடுவதால், பயிர் உற்பத்தி செய்யும் நிலத்தின் அளவு குறையும். மற்றொருபுறம் அதே நிலங்களை ஆக்கிரமிக்கும் மக்களின் உணவுத்தேவை அதிகரித்துக் கொண்டே போகும். இந்த விரிவாக்கம் காற்றையும், நீரையும் மாசுபடுத்துகிறது. அதைத்தாண்டியும் பல பாதிப்புகள் இருக்கின்றன. சாலைகள் அதிகரிக்க அதிகரிக்க, கார் போன்ற பெரிய வாகனங்களை சார்ந்திருக்கும் தன்மையும், நடைபாதைகளும் அதிகரிக்கும். கார்கள் அதிகரித்தால் து£சுப்புகை, மாசுபாடு அதிகரிக்கும். போக்குவரத்து நெருக்கடி வழக்கமான ஒன்றாகிவிடும்.

நகர்ப்புற விரிவாக்கம் என்பது, கோடிக்கணக்கான மக்கள் சம்பாதித்து அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை வீணடிக்கிறது. மக்கள் நலனுக்காக என்ற பெயரில் வசூலிக்கப்படும் வரியில் பெரும் பகுதி புதிய சாலைகள் அமைக்க, குடிநீர் விநியோக குழாய்கள், கழிவுநீர் கால்வாய், குழாய்களை பதிக்க, புதிய பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட, பிற அடிப்படை தேவைகளை உருவாக்க பயன்படுத்தப்படும். (ஆனால் இந்த வசதிகள் நகரத்தில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதில்லை. எந்தப் பகுதி மக்களுக்கு அதிகம் கிடைத்துள்ளது என்பதும் சிந்திக்க வேண்டிய கேள்வி. மேட்டுக்குடியினர், தொழிற்சாலைப் பகுதிகளில்தான் வசதிகள் வழக்கமாக உருவாக்கப்படுகின்றன) இந்த வசதிகள் அனைத்தும், பாரம்பரியமாக கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பறித்துவிட்டுத்தான் ஏற்படுத்தப்படுகிறது. அவை தரிசுநிலங்களோ, பயன்படுத்த முடியாத நிலங்களோ அல்ல. மக்கள் பயன்படுத்தி வந்த நிலங்கள். அந்த மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படுவதில்லை. இதன்காரணமாக நமது பண்டைய ஊர்கள், நகரங்கள் அழிகின்றன. பாரம்பரியத் தொழில்கள் நசிகின்றன. கிராமங்களில் இருந்து பிழைப்பு தேடி இடம்பெயரும் நகர்ப்புற ஏழைகள் அதிகரிக்கிறார்கள்.

நகர்ப்புற விரிவாக்கத்தின் காரணமாக,ஒரு காலத்தில் செழிப்பான வளர்ச்சிக்கு உதவிய நிலங்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளாகவும், மாசுபட்ட நிலப்பகுதிகளாகவும் மாற்றப்பட்டு விடுகின்றன. இங்கே விவரித்திருக்கிற அனைத்தும் உண்மையா என்ற கேள்வி தோன்றினால், பதிலுக்கு பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். முதல் எடுத்துக்காட்டு நமது தலைநகரம் சென்னை. சென்னை எப்படிப்பட்டது என்பதை அறிய, பகல் நேரத்தில் 5 கி.மீ. பயணம் செய்து பாருங்கள்.

நகர்ப்புறம் எத்தனை சதுர கிலோமீட்டருக்கு விரிவடைந்துள்ளது என்பதை புரிந்துகொள்வதன் முலம், இயற்கையாக இருக்கும் சுற்றுச்சூழலை எவ்வளவு மோசமாக சீர்கெட்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம். நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக வேளாண் உற்பத்தி குறைவு, அளவுக்கு அதிகமாக இயற்கை சீரழிக்கப்பட்டுவிட்டதால் நகரங்கள், சிற்று£ர்கள், அவற்றை ஒட்டியுள்ள பயிர்நிலங்கள் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி குறைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தீர்வு - சில யோசனைகள்:

நம் மீது பேரழிவுகளை சுமத்தும் இந்த நகர்ப்புற விரிவாக்கத்தை தடுப்பது, கட்டுப்படுத்துவது எப்படி?

  • பணியிடங்களுக்கு அருகே உகந்த வாடகையில் வீடுகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • நகரங்களிலேயும், அருகேயும் வாழும் மக்களுக்கு உகந்த போக்குவரத்து வசதிகள், நிலத்தை பயன்படுத்துவதற்கான திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
  • புதிய சாலைகள், பள்ளிகள், தண்ணீர், கழிவுஅகற்றும் குழாய்கள் அமைக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அவற்றால் நகரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • தூய்மையான பொது போக்குவரத்து வசதிகள், நவீன-திறன்மிக்க பேருந்து சேவை, தூய்மையான எரிபொருளைக் கொண்ட வாகனங்கள் போன்றவற்றில் அதிக முதலீடு செய்ய வேண்டும். (கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதை ஒட்டி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மாசுபாட்டை குறைக்க, வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.)
  • பாதசாரிகளுக்கு உகந்த வளர்ச்சிகள் உட்பட, மக்கள் பயணம் செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்க வேண்டும். (பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகள், பாதசாரிகளுக்கு வசதியான நடைபாதைகள், சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை போன்றவை)
  • கடைகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகே அதிக நடைபாதைகள், சைக்கிளுக்கு தனிப்பாதைகளை அதிகரிக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முறைகளை மேற்கொள்ள வேண்டும்.