சூழல் அக்கறையோடு விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

0 Comments

  நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன்,  ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி உள்ளிட்ட 67 நபர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை  வாழ்த்தி, சூழலியல் நீதிக்கான 14 கோரிக்கைகளை அவரின் அவசர கவனத்திற்க்கு கொண்டு வர கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு   பெறுநர்: திரு மு க ஸ்டாலின் மாண்புமிகு முதல் அமைச்சர் தமிழ் நாடு அரசு 5 மே, 2021 மதிப்பிற்குரிய முதல் அமைச்சர் அவர்களே, […]

உமிழ்வு இடைவெளி அறிக்கை-2020 – விரிவான பார்வை

0 Comments

    ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP)பதினோராம் பதிப்பான உமிழ்வு இடைவெளி அறிக்கை, நெருக்கடியான கோவிட்-19 சூழலிலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த கோவிட்-19 ஊரடங்கின் விளைவாக, உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் சமூக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. ஆயினும், இப்பொருளாதார சீர்குலைவை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் அந்தந்த அரசுகள் எடுத்துக்கொண்டு வருகிறது. ஆனால், இப்பூவுலகில் மனித இனத்தின் வளர்ச்சியின் பொருட்டு ஏற்பட்டுள்ள, தீராத பிரச்சனையாக இருந்து வரும் காலநிலை மாற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் […]

உலகம் வியந்து போற்றும் , மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்

0 Comments

    சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம்  செய்து , வியக்கத்தக்க வகையில் அதில் வெற்றியும் கண்ட மரங்களின் தாய் என நம் எல்லோராலும் போற்றப்படுகிற , அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்த […]

தேசிய நீர்வழிச்சாலை திட்டமும் கங்கையின் நன்நீர் டால்பின்களும்

0 Comments

பிரதமர் மோடியின் உள்நாட்டு நீர்வழிச்சாலை திட்டம் கங்கை நதிக்கு அதிகமான கெடுதலைதான் கொண்டுவரும்: நீர்வழிச்சாலை திட்டம் ஏற்கனவே மோசமாகவுள்ள ஆற்றின் சூழல் அமைப்புகளை மேலும் மோசமாக்கும்; அரசு சட்டப்படி செய்யவேண்டிய ஆய்வுகள் எதையும் செய்யாமல், சட்டத்தை வளைத்து திட்டங்களை நிறைவேற்றுகிறது வாரணாசியில் கட்டப்பட்டுள்ள “பலவகை போக்குவரத்து முனைய” (multi modal) திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. வாரணாசியில் உள்ள இந்த முனையம் மூன்று வகையான போக்குவரத்து வசதிகளை, அதாவது சாலை, ரயில்வே மற்றும் கங்கை நீர்வழிச்சாலை […]

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- IPCC

0 Comments

பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு பலகாலமாக சொல்லிவருகிறது.. பூமியின் வழிமண்டத்தை சுற்றியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்ப்பட்ட‌ 93 சவீத அதிகப்படியான வெப்பத்தை பெருங்கடல்களே உறிஞ்சிக் கொள்வதாக பருவநிலை மாற்றம் குறித்த ஐ.பி;சி.சியின் 2014 ஆம் ஆண்டறிக்கை தெரிவித்தது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, நாம் முன்பு நினைத்ததைப் போலல்லாமல், கடந்த 25 ஆண்டுகளில் உலகில் உள்ள பெருங்கடல்கள் யாவும் 60 சதவீத அதிக வெப்பத்தையே உறிஞ்சியிருக்கிறது. இந்தஆய்வறிக்கையை எழுதிய முதன்மையான ஆய்வாளர் […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ? 

0 Comments

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ?  இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி  அன்று டெல்லி அரசு அதிரடியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் தனது கொள்கை அறிக்கையை அறிவித்தது. அந்த அறிக்கையில் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை வசூலிக்கப் படாது எனவும், மின்சார மகிழுந்திற்க்கு (E-Car) ரூபாய் 1.5 லட்சம் வரையிலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Scooter, E-Bike) , மின்சாரத்தில் […]

EIA 2020 வரைவின் சிக்கல்கள்

0 Comments

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது? 1.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன? இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் […]