தொழிற்சாலை மாசு கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் தென் மாநிலங்களுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

0 Comments

OCEMS எனப்படும் மாசு கண்காணிப்பு அமைப்பை தென் மாநிலங்கள் முறையாக பயன்படுத்தக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   Paryavaran Suraksha Samiti v. Union of India 2017 வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “ஒவ்வொரு மாநில மாசு கட்டுப்பாடு வாரியமும் தங்கள் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு/கழிவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் OCEMS-Online Continuous Emission/Effluent Monitoring Sensors ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தது.OCEMS என்பது இணையம் வாயிலாக மாநிலத்தில் […]

விடுதலையை சமைக்கும் உணவு   லியா பென்னிமேன் – கறுப்பின விவசாய களப் போராளி

0 Comments

துலிப் மலர்களின் கதை   வருடம் 80,000 டாலர்கள் தரக்கூடிய, பணி ஓய்வுக்கு பிறகு பென்ஷன் தரக்குடிய பள்ளி ஆசிரியர் வேலையை உதறிவிட்டு லியா பென்னிமேன் விவசாயம் செய்ய போவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர், விவசாயத்தின் மீதான அபூர்வமான ஆர்வம் பதின் வயதுகளிலேயே இருந்தாலும் அதை கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிராக, சமத்துவத்துக்கான ஒரு களமாக மாற்றியதுதான் லியாவின் மிக முக்கியமான பங்களிப்பு. நியூயார்க்கில் 72 ஏக்கரில் அவரது வயல் (soul fire farm) உணவில் பாகுபாட்டை, இனவெறியை, அநீதியை எதிர்த்து 2011ல் உருவானது. இயற்கை மற்றும் […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ? 

0 Comments

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ?  இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி  அன்று டெல்லி அரசு அதிரடியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் தனது கொள்கை அறிக்கையை அறிவித்தது. அந்த அறிக்கையில் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை வசூலிக்கப் படாது எனவும், மின்சார மகிழுந்திற்க்கு (E-Car) ரூபாய் 1.5 லட்சம் வரையிலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Scooter, E-Bike) , மின்சாரத்தில் […]

விலங்குகளிடமிருந்து  மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவமும்

0 Comments

சர்வதேச நாடுகளில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவும் நோய்த் தொற்றுகளில் (Zoonotic diseases) கவனம் செலுத்த வைத்திருக்கிறது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்த் தொற்றுவது இது முதல்முறை அல்ல. 1920களில் சிம்பன்சி குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றியபோது உலகெங்கிலும் சிம்பன்சிக் குரங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டன. வருடம் 2020, நூறு ஆண்டுகளாக இந்த ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மனித இனத்துக்கே சவாலாக இருந்துவருகிறது. 2018ல் கேரளாவில் நிபா வைரஸ் வௌவால்களிடமிருந்து பரவியபோது வௌவால்களை அழிக்கவேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. வருடம் 2009, மெக்ஸிகோவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்றான். விளையாடச் சென்ற சிறுவனுக்கு சில நாள்களில் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தென்பட்டன. மருத்துவசிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாமல் அவன் இறந்துவிட்டான். அந்தச் சிறுவனை அடுத்து அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவனின் பெற்றோர்கள் என அனைவருக்கும் இதே அறிகுறிகள் தென்பட்டபோதுதான் அது தொற்றுநோய் என்று விழித்துக்கொண்டது தென் அமெரிக்க நாடான மெக்ஸிகோ. ஆனால், நோய்த்தொற்று அதற்குள் அமெரிக்கத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. 2009-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2010-ம் ஆண்டின் இறுதிவரை உலகம் முழுவதும் இருந்த அனைத்து மக்களையும் அந்தத் தொற்றுநோய் உலுக்கியது. அதைப் பறவைகள், பன்றிகள் மற்றும் மனிதர்களிலிருந்து உருவாகும் ஒருவித வைரஸ்களின் கூட்டுக்கலவை என்று கண்டுபிடித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். H1N1 இன்ப்ளுயன்ஸா வைரஸ் (ஸ்வைன் ஃப்ளூ) என்று அதற்குப் பெயர் வைக்கப்பட்டது.அமெரிக்காவில் மட்டும் 12,469 ஸ்வைன் ஃப்ளு இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. […]

காலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை ‘கொரோனா’

0 Comments

             ஆண்டாண்டு காலமாக, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தொற்று நோய் தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள் விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சூழலியல் கூறுகளுக்கும், ஏந்திகளின் வளர்ச்சி (vector growth), இறப்பு விகிதம், இனப்பெருக்கம் போன்ற சுகாதார விழுமியங்களுக்கும், வலிமையான தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. கிருமிகள் குறித்தான தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்யும் போது, ஒவ்வொரு தீவிர வானிலை நிகழ்வுக்குப் (extreme weather event) பின், தொற்று […]

அலேட்டா பான்: ஒரு நிஜமான அம்மா

0 Comments

    அலேட்டா பான் என்பது அவர் பெயர். ஆனால் மக்கள் அவரை மம்மா (அம்மா) அலேட்டா என்றே அழைக்கிறார்கள். இந்தோனேஷியாவில் மொல்லோ பழங்குடியின பிரிவைச் சேர்ந்த அலேட்டா போராடியது, மிகப்பெரிய சுரங்க நிறுவனங்களை எதிர்த்து. அலேட்டா வாழும் திமோர் தீவு காடுகளும் மலைகளும் வளங்களும் நிறைந்த பகுதி. எண்ணை, தங்கம், மாக்கல் ஆகிய வளங்கள் அந்த பகுதியில் நிறைந்திருந்தன. பல வருடங்களாக சுரங்க நிறுவனங்கள் அனுமதியில்லாமல் மாக்கல்லை எடுத்து வந்த நிலையில், காடுகளும் நதிகளும் அழியத் […]

அம்பேத்கரியமும் சூழலியல் அரசியலும்

0 Comments

    நகரம், கிராமம் இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருளாக உள்ளது. கிராமிய வாழ்வு முறை மீதான காதல் பரவலாக காணப்படுகிறது. நகர வாழ்வியல் மீது ஒருவித நரக பிம்பமும் பரவலாக கட்டமைக்கப்படுகின்றன. இவைதான் சரியான சூழலியல் பார்வை என்றும் சிலரால் கருத்தப்படுகிறது. எந்த ஒரு வாழ்முறையையும் அதன் இயல்தன்மையோடும், இயக்கதன்மையோடும் ஆராய வேண்டும். அதன் மூலம் மட்டுமே இயற்கை சூழல் மீதான தாக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும். நகர வாழ்வு என்பது இயற்கையை சீர்கெடுக்கும் […]

தமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை: புதிய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே இந்த பிரச்சனைகளை தீர்க்கும் :- பூவுலகின் நண்பர்கள்

0 Comments

தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி மெட்ராஸ் உயர் நீதி மன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து கடந்த வியாழன், பிப்ரவரி 27 முதல் கேன் குடிநீர் நிறுவனங்கள் தடையை திரும்ப பெற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் […]