சூழல் அக்கறையோடு விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

0 Comments

  நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன்,  ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி உள்ளிட்ட 67 நபர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை  வாழ்த்தி, சூழலியல் நீதிக்கான 14 கோரிக்கைகளை அவரின் அவசர கவனத்திற்க்கு கொண்டு வர கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு   பெறுநர்: திரு மு க ஸ்டாலின் மாண்புமிகு முதல் அமைச்சர் தமிழ் நாடு அரசு 5 மே, 2021 மதிப்பிற்குரிய முதல் அமைச்சர் அவர்களே, […]

உலகம் வியந்து போற்றும் , மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்

0 Comments

    சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம்  செய்து , வியக்கத்தக்க வகையில் அதில் வெற்றியும் கண்ட மரங்களின் தாய் என நம் எல்லோராலும் போற்றப்படுகிற , அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்த […]

இந்திய கடற்கரைக்கு வந்த பேராபத்து. CRZ விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு.

0 Comments

  உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்படும் திட்டங்களை இழப்பீடு மட்டும் செலுத்தி விட்டு தொடரலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவு. கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு Coastal Regulatory Zone Notification 2011ன் கீழ் உரிய முன் அனுமதி பெறுவது அவசியமாகும். இதன் மூலம் கடற்கரையை ஒட்டிய மணல்மேடுகள், நதிகள், முகத்துவாரங்கள், கழிமுகங்கள், ஊற்றுகள், அலையாத்திக் காடுகள் போன்றவற்றின் பல்லுயிர்த்தன்மை பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவில் உள்ள சட்டங்களில் அதிக […]

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? – அறிக்கை

0 Comments

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? மித்திவிர்தியைப் போல கூடங்குளம் விரிவாக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி, குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இம்ரான் கடிவால் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தியில் அமைய திட்டமிடப்பட்டிருந்த 6 அலகுகளை கொண்ட அணு உலை பூங்கா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, “புகுஷிமா விபத்திற்கு பிறகு அணுவுலைகளால் […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தும் திட்டத்திற்கெதிரான வழக்கில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0 Comments

சூழலியல் செழிப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எவ்வித அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தூர்வாருவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் […]

உத்தரகாண்ட் பேரிடர் கற்றுத்தரும் காலநிலை பாடங்கள்

0 Comments

உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த 7ம்தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்டிருக்கும் திடீர் பனிவெள்ளத்தில் சிக்கி இதுவரை 26பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் 171 நபர்களைக் காணவில்லை. இந்தப் பனிவெள்ளத்தின் காரணமாகத் தவுலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் என்டிபிசியின்(NTPC)தபோவன-விஷ்ணுகாட் நீர் மின்சாரத் திட்டம், ரிஷி கங்கா நீர்மின்சாரத் திட்டதிற்காகச் சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி […]

பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதன் மூலம் 35,000 கோடி பணம் TANGEDCO மிச்சப்படுத்தலாம்- CRH ஆய்வில் தகவல்

0 Comments

பழைய அனல் மின் நிலையங்களை மூடுதல் மற்றும் புதிய திட்டங்களை நிறுத்துதல் மூலமாக தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் – Climate Risk Horizons ஆய்வில் தகவல் 3.1 ஜிகாவாட்உற்பத்தி திறன் கொண்ட பழைய நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு எதிர்காலத் தேவைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]