இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்

0 Comments

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள்.  எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது,  மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் […]

திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

ஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.

0 Comments

நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.  மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 2015ம் ஆண்டு Marginal Field Policy என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை பின்பு Small Division Field policy என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த கொள்கைப்படி அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களை […]

பற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:

0 Comments

கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல. கடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில், சுமார் 1,345 சதுர கிலோமீட்டர் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டன, அளவில் இது டோக்கியோ நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன. இப்போது, கடந்த இரண்டு வாரங்களாக […]

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு.

0 Comments

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்-பூவுலகின் நண்பர்கள் கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் எல்லோரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற “உலகநாட்டு தலைவர்களின் மாநாட்டில்” (COP) உயர்ந்துவரும் வெப்பத்தை 1.5டிகிரி முதல் 2 டிகிரிக்குள் […]

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை

0 Comments

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதன் சாதக-பாதகங்களை உரிய துறைசார்ந்த நிபுணர்கள் உதவியுடன் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், இந்த திட்டம் குறித்து அரசுத் தரப்பில் அளிக்கப்படும் தகவல்கள் குறையுடையதாக இருப்பதும், இத்திட்டம் பெரும்பாலான மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக இருப்பதையும் கண்டறிந்தோம். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து ஒரு சட்டப்போராட்டத்தை துவக்கத் திட்டமிடப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக […]

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்

0 Comments

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் […]

உணர்வுப் பிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்…

0 Comments

110 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னான பரிணாம வளர்ச்சியில், நிறங்களின் உணர்திரனற்ற என் கண்களை எண்ணி முதல்முறை அழுகிறேன்! இன்று அதிகாலை இழுதுமீன் என நினைத்து நான் உண்ட நெகிழித் துண்டு என் சிறுகுடலை அடைத்துக் கொண்டிருக்கிறது! என்னால் நீந்த முடியவில்லை! நீந்துவதென்ன?அசையக்கூட முடியவில்லை! இந்த ராட்சத மூலக்கூற்றை எதிர்கொண்ட என் உடலின் நோயெதிர்ப்பு அணுக்கள் பயந்துபோய் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன! இந்த நெகிழியை வெளிக்கொணர பதினெட்டு மணிநேரமாக முயன்று கொண்டிருக்கிறேன்… அடிவயிற்றில் ஏதோ பலமாக அழுத்துவதுபோல் […]

தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

0 Comments

தில்லிப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை ஏன் மறுக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் கடந்த இதழில் பார்த்தோம். மேலும் சில காரணங்கள் இதோ. • மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆண் மலட்டுத் தன்மை விவசாயிகளை அழித்துவிடும். மரபணு மாற்றத்தின் மூலம் பார்னேஸ் என்ற ஆண் மலட்டுத் தன்மை உருவாக்கும் மரபணு புகுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண் மலட்டுத் தன்மைக்கான மரபணு, இந்த டி.எச்.எம் – 11 கடுகோடு நிற்காது பிற […]

சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்போம்! வாரீர்!!

0 Comments

சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படையாக இரு கோட்பாடுகள் உள்ளன. 1. முன்னெச்சரிக்கை கோட்பாடு, 2. சூழலை சீரழிப்பவரே அதனை சீர் செய்ய வேண்டும். ஆனால் இதை செயல் படுத்துவதில் அரசுகளும், பெரும் வணிக நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த சட்டக்கூறுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்று அரசு அமைப்புகள் கருதுகின்றன. அதேபோல சூழலை சீரழிப்பவருக்கு தண்டனை வழங்காமல் பாதுகாப்பது குறித்தும் அரசு அமைப்புகள் கவனம் […]