நீலகிரி நிலச்சரிவும் நியூட்ரினோ திட்டமும்

0 Comments

    நம் நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களை பொதுவாக மூன்று காரணிகளை வைத்து ஆய்வு செய்து அந்த திட்டம் சாதகமா அல்லது பாதகமா என்கிற முடிவிற்கு வரலாம். குறிப்பிட்ட திட்டம் எந்த மாதிரியான திட்டம், அதன் அமைவிடம், அந்த திட்டத்தினால் ஏற்படப்போகும் சமூக பொருளாதார நன்மைகள் என்ன? மேற்சொன்ன மூன்று காரணிகளின் அடிப்படையில்தான், அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா என்கின்ற நிலைப்பாட்டிற்கு வரமுடியும். தேனிமாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் எந்த மாதிரியான […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ? 

0 Comments

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ?  இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி  அன்று டெல்லி அரசு அதிரடியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் தனது கொள்கை அறிக்கையை அறிவித்தது. அந்த அறிக்கையில் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை வசூலிக்கப் படாது எனவும், மின்சார மகிழுந்திற்க்கு (E-Car) ரூபாய் 1.5 லட்சம் வரையிலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Scooter, E-Bike) , மின்சாரத்தில் […]

மரபணு மாற்றத்துக்கெதிரான கையெழுத்து இயக்கம்…

0 Comments

மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை அனுமதிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தண்ணீர் அமைப்பு கையெழுத்து இயக்கத்தைத் தீவிரமாக நடத்தி முடித்திருக்கிறது. திருச்சியை மையமாகக் கொண்டு செயல் பட்டு வரும் இந்த அமைப்பு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தப் பணியைத் தொடங்கியது. சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ்மானூஷ் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில், 10, 18, 20, 23 மற்றும் 27 ஆகிய […]

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினரும், சித்த மருத்துவருமான கு.சிவராமன், கடந்த நவ. 11ஆம் தேதி தருமபுரி பத்திரிகையாளர் சங்கம் நடத்திய சிறப்புச் சந்திப்பில், “நலம் வாழ” என்ற தலைப்பில் பேசியதன் சுருக்கம்!

0 Comments

ஒரு காலத்தில் உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பிளேக் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு பலியாகினர். அன்று மருத்துவம் உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகள் உருவாகாத, பரவலடையாத காலம். மனித குலத்தின் தொடர் முயற்சியாலும், தேடலாலும் கண்டறியப்பட்ட அறிவியல் முடிவுகளும், மருத்துவமும் இந்த நோய்களில் இருந்து மனிதர்களைக் காப் பாற்றியது. மனிதர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கியது. இதுபோன்ற நோய்களில் இருந்து தப்பிய மனிதர்கள் இன்று வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். உணவுப் பழக்கம், வாழ்வியல் சூழல், பல்வேறு […]