அதிகரிக்கும் யானை – மனித மோதல்; 5 ஆண்டுகளில் 2,529 பேர் உயிரிழப்பு

0 Comments

  யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. அப்படி யானைகள் வெளியேறும்போது யானை – மனித மோதல் நடக்கிறது. இதில் யானைகளால் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் மனிதர்கள் யானைகளை துன்புறுத்தி துரத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கு வங்க எம்.பி. ராஜூ பிஸ்தா இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு […]

காடழிப்பை அழிப்பதை நிறுத்தினால் கொள்ளை நோய்களைத் தடுக்கலாம்

0 Comments

சார்ஸ் (SARS), எபோலா, இப்போது SARS-CoV-2: இந்த மூன்று தீவிரத் தொற்றுநோய் வைரஸ்களுமே 2002ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் பீதியைக் கிளப்பியுள்ளன – இந்த மூன்றுமே அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளில் வாழும் காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவியவை.   மனிதர்களைத் தொற்றுகின்ற வளர்ந்துவரும் நோய்க்கிருமிகளில் நான்கிலொரு பங்கு, விலங்குகளிடமிருந்து தாவியவை. அந்த விலங்குகளில் பலவும் உயிர்எரிபொருள் (biofuel) செடிகள் உள்ளிட்ட பயிர்களுக்காகவும் சுரங்கம் தோண்டுதல், வீடுகள் கட்டுதல் ஆகியவற்றுக்காகவும் நிலத்தை ஒதுக்க வெட்டிக்கொண்டும் எரித்துக்கொண்டும் இருக்கும் காட்டு வாழ்விடங்களில் […]

ஆவ்னியைக் கொன்றது யார்?

0 Comments

பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர். டி1 என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த புலி, ஆவ்னி என பரவலாக அழைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் யாவாடாமல் மாவட்டத்திலுள்ள பந்தர்காவாடா காடுதான் ஆவ்னியின் வாழ்விடம். உள்ளூர் மக்களும் […]

தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறிய மத்திய அரசு.

0 Comments

  நாடாளுமன்றத்தில் இந்திய அளவில் பெரிய வன உயிரினங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக கேள்வி ஒன்றை திரினாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சொகட்டா ராய் எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ நாடு முழுவதும் உயிரிழந்த பெரிய வன உயிரினங்கள் குறித்த தகவல் தங்கள் அமைச்சகத்தில் இல்லை என்றும் இருப்பினும் புலிகள் மற்றும் யானைகள் மரணங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறினார். அவர் […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

ஆவ்னியைக் கொன்றது யார்?

0 Comments

பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர். டி1 என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த புலி, ஆவ்னி என பரவலாக அழைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் யாவாடாமல் மாவட்டத்திலுள்ள பந்தர்காவாடா காடுதான் ஆவ்னியின் வாழ்விடம். உள்ளூர் மக்களும் […]

நதிநீர் கடலின் உரிமை

0 Comments

குளிர்காலம் முடிய இருந்தது. பசிபிக் பெருங்கடலின் முதிர்ச்சியடைந்த சாலமன் மீன்கள் ஒரு பெரிய பயணத்துக்குத் தாயாராகிக் கொண்டிருக்கின்றன. தம்வாழ்வின் இறுதி கடமையாக தம்சந்ததிகளைப்பெருக்க அவை நெடுந்தொலைவு பயணிக்கவேண்டியிருந்தது. அதற்காக அமெரிக்காவின் மேற்காகப் பாய்ந்து கடலில் கலக்கும் எண்ணற்ற ஆறுகளில் ஒன்றான தம் தாய்நதியை அவை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். புவியின் காந்தப்புலத்தையும் சூரியனையும் வழிகாட்டியாகக்கொண்டு கடல்நீரோட்டத்தோடு பலநூறு கிலோமீட்டர்கள் பயணித்து கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக நகர்கின்றன சாலமன் மீன்கள். சரி, நூற்றுக்கணக்கான பெருநதிகளும் கிளைநதிகளும் கடலில் கலக்கும் […]

காட்டுயிர்கள் இழிவானவையா?

0 Comments

காட்டுப் பன்றிகள் (Wild Boar), நீலான் மான்கள் (Nilgai), விவசாயப் பயிர் களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்பது, ரீசஸ் குரங்குகள் ஷிம்லா போன்ற சுற்றுலாத் தளங்களில் பயணிகளைக் கடிப்பது போன்றவை அதிகரித்திருப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு தகவல்கள் அளித்திருந்தன. அவை மனித உயிருக்கும், விவசாய மற்றும் பொதுச் சொத்துகளுக்கும் ஏற்படுத்திய விளைவுகள், விவசாயிகளுக்கும் மற்ற சுற்றத் தாருக்கும் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்தும் மாநில அரசுகள் எடுத்துரைத்தன. தொடர் கோரிக்கைகளால், மத்திய அரசும் […]

கேரளாவில் கடல்நீரைத் தடுக்கச் சுவர்கள் போதாது

0 Comments

கோபி வாரியர் பருவநிலை மாற்றத்தால் வரும் புயல்கள் எல்லாம் தீவிரமானதாக மாறிக்கொண்டிருக்க, கேரளக் கடற்கரையில் போடப்பட்டிருக்கும் கற்சுவர்கள் மக்கள்தொகை அதிகம் கொண்ட அவ்விடங்களுக்கு போதுமானவை அல்ல. தென்மேற்கு பருவக்காற்று சுமந்து வரும் மேகங்கள் மழை கொட்டித் தீர்க்கும் கேரளக் கடற்கரை அதன் இயற்கையான அமைப்பை இழந்து கொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறை களாக குழந்தைகள் விளையாடிய கடற்கரை மணல்வெளியில் இப்போது கிரானைட் கற்களும் கான்க்ரீட் சுவர்களும் இடப்பட்டுள்ளன. இந்த செயற்கை அமைப்பு கேரளக் கடற்கரையை ஒட்டி 301.3 கி.மீ […]