நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

பூச்சத்தம் கேளுங்கள்

0 Comments

நான் சொல்ல விரும்புவதை, வால்டர் ஹேகன் என்பவர் அழகாக, சுருக்கமாக, நறுக்கெனச் சொல்லிவிட்டார்: “ஒரு சிறு வருகைக்காகத்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே துரிதப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள். போகும் வழியில் பூக்களை முகர்ந்திட மறக்காதீர்கள்.” நம்மில் பெரும்பாலானோர் பணம், பதவி, புகழ், காமம், கவுரவம், காலாதீதம் என ஏதேதோ இலக்குகளை நோக்கி வேகமாக நடப்பதால், முண்டியடித்துக்கொண்டு ஓடுவதால், பூக்களை முகர்வதற்கான தேவையோ, விருப்பமோ, நேரமோ இருப்பதில்லை. இந்த (அதிக பட்சம்) 36,500 நாட்கள் நீடிக்கும் பூவுலகு வருகையின்போது, இரண்டு […]

ஒளியிலே தெரிவது?

0 Comments

நிவேதா உலகை அடுத்த பரிமாணத்திற்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நூற்றாண்டு, தொழில்நுட்பத்தின் பிரகாசமான மண்டைகளைக் கொண்டு நம் அனைவரின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்துவிட்டு முடிந்துபோனது. ‘இருள் என்பது வெளிச்சத்தின் இன்மை’ என்ற பழமொழியை நாம் எல்லாரும் நன்கு உள்வாங்கிக்கொண்டோம். நம் கைகளில் இருந்த ஒன்று நம்மை புதிதாக ஈர்க்கத் தொடங்கியது. அன்றிலிருந்து நூற்றுமுப்பது ஆண்டுகளாக நம் வாழ்கையில் இருளே இல்லை. திரும்பிய திசையெல்லாம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண் டிருந்தது. இரவு என்பது வெறும் […]

வாங்க உரமாக்க கற்றுக் கொள்வோம்!

0 Comments

தாரிணி பத்மநாபன் வணக்கம் நண்பர்களே, உரமாக்கல் தொடரின் மூன்றாம் பகுதி இது! முதல் இரு பகுதியிலும் ஏரோபிக் ணீமீக்ஷீஷீதீவீநீ உரமாக்கல், அதாவது உயிர்வளி துணை கொண்டு, காற்றின் உதவியால் நிகழும் உர மாக்கல் முறைகளை பார்த்தோம். இந்த பகுதியில் அனிரோபிக் ணீஸீமீக்ஷீஷீதீவீநீ, அதாவது உயிர் வளியற்ற வகையில் நிகழும் உரமாக்கல் முறையைக் காண்போம். மேற்கூறியவாறு, அனிரோபிக் முறையென்பது காற்று புகாமல் நிகழும் உரமாக்கல் முறையாகும். இவ்வகையான முறைகளில் ஙிஷீளீணீsலீவீ எனப்படும் ஜப்பானிய உரப்படுத்தல் வழிமுறை சிறிய வீடுகளில் […]

தங்க சுனாமியும் நெய்தலின் ஆன்மாவும் – சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்

0 Comments

       என் விடலைப் பருவம் மீனவ கிராமத்தின் வாசனைஅடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற் கரை வாழ்க்கையில் வருடத்தை மீன் வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளைமீன், அயிலை, நெத்திலி, கூனி, இரால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளாத்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின் போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் […]

தாதுமணல் கொள்ளை

0 Comments

உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு சுரண்டக்கொடுப் பதும் அவர்களைப் பாதுகாத்து அரவணைப்பதும் இன்றைய யதார்த்தத்தில் நாம் கண்டுவருகிறோம். குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் ஆட்சியாளர்கள் சொந்த நாட்டு மக்கள் நலன் மற்றும் இயற்கை நலன்குறித்து கடுகளவும் கரிசனம் கொள்ளாமல் உள்நாட்டு/பன்னாட்டு நிறுவனங் களின் லாப நலன்களுக்காக நாட்டின் அடிப்படை ஆதாரமாகிய இயற்கை வளங்களை தாரைவார்க்கின்றன. இன்று இந்தியாவின் கனிம வளமிக்க மாநிலங்களான ஒடிஸா, சட்டீஸ்கர், […]