உங்களின் மரணம் எப்படி நேரப்போகிறது?

0 Comments

ஒரு சின்ன விஷயம். உங்களின் மரணம் எப்படி நேரப்போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது. காலநிலை மாற்றம்! வேடிக்கையாக இருக்கலாம். நமக்கு இருக்கும் பிரச்சினைகளில் காலநிலை மாற்றம் ஒரு பிரச்சினையாக தெரியாமலும் இருக்கலாம். உண்மையும் அப்படித்தான். கண் முன்னே பட்டவர்த்தனமாக நின்றிருக்கும். சாவகாசமாக வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கையில் சடாரென வீழ்த்தி கிடத்தும். சமீபகாலமாக உலகச் செய்திகளென பார்த்தால் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள், Climate Change! தமிழில் ’காலநிலை மாற்றம்’ என மொழிபெயர்க்கலாம். ஆனால் தமிழக […]

சட்டத்திற்கு புறம்பானமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை 

0 Comments

சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கை கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays principle), ஒருங்கிணைவு கோட்பாடு (Integration principle), மக்கள் பங்கேற்பு கோட்பாடு (Public participation principle), நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு (Sustainable development principle) ஆகியவை முக்கியமானவை. ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுத்த இந்த கோட்பாடுகள் உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய கடமை படைத்தவை. இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தியாவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், […]

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

0 Comments

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் […]

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்

0 Comments

65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க […]

EIA 2020 வரைவின் சிக்கல்கள்

0 Comments

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது? 1.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன? இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் […]

தமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை: புதிய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே இந்த பிரச்சனைகளை தீர்க்கும் :- பூவுலகின் நண்பர்கள்

0 Comments

தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி மெட்ராஸ் உயர் நீதி மன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து கடந்த வியாழன், பிப்ரவரி 27 முதல் கேன் குடிநீர் நிறுவனங்கள் தடையை திரும்ப பெற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்

0 Comments

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள்.  எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது,  மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் […]

திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

ஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.

0 Comments

நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.  மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 2015ம் ஆண்டு Marginal Field Policy என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை பின்பு Small Division Field policy என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த கொள்கைப்படி அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களை […]