சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

0 Comments

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்   சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை […]

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ? 

0 Comments

மின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா ?  இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி  அன்று டெல்லி அரசு அதிரடியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் தனது கொள்கை அறிக்கையை அறிவித்தது. அந்த அறிக்கையில் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை வசூலிக்கப் படாது எனவும், மின்சார மகிழுந்திற்க்கு (E-Car) ரூபாய் 1.5 லட்சம் வரையிலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Scooter, E-Bike) , மின்சாரத்தில் […]

தமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை: புதிய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே இந்த பிரச்சனைகளை தீர்க்கும் :- பூவுலகின் நண்பர்கள்

0 Comments

தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி மெட்ராஸ் உயர் நீதி மன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து கடந்த வியாழன், பிப்ரவரி 27 முதல் கேன் குடிநீர் நிறுவனங்கள் தடையை திரும்ப பெற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

தமிழகத்திலுள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களின் காலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பு

0 Comments

காலநிலை மாற்றம்; சமீப காலங்களில் இந்த வார்த்தையைத் தாங்கி வரும் செய்திகளை அதிகம் பார்த்திருப்போம். புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருதல், புவியின் நீண்டகால காலநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன, அதிக மழைப்பொழிவு, மிக அதிகமான வெப்பம், அதிகமான புயல்கள், பனிப்பொழிவு, காட்டுத்தீ, வறட்சி வெள்ளம் என பலவிதமான காலநிலையினுடைய மாற்றத்தை சுட்டிநிற்கும் நிகழ்வுகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் காலநிலை மாற்றத்தின் சான்றுகள் நம் கண்முன்னே நிகழத்தொடங்கியுள்ளன. […]

திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை

0 Comments

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது. இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் […]

ஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.

0 Comments

நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.  மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 2015ம் ஆண்டு Marginal Field Policy என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை பின்பு Small Division Field policy என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த கொள்கைப்படி அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களை […]

பற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:

0 Comments

கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல. கடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில், சுமார் 1,345 சதுர கிலோமீட்டர் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டன, அளவில் இது டோக்கியோ நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன. இப்போது, கடந்த இரண்டு வாரங்களாக […]

நீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்

0 Comments

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி காற்றின்றி ஆகாயமின்றி நிலம் மட்டும் போதுமா மனித வாழ்வியலுக்கு? ஐம்பூதங்களில் எதைச் சுரண்டினாலும் அது இன்னொரு தன்மைக்கு கேடு விளைவிக்கும். நம் கண் முன்னாலேயே பல உதாரணங்கள் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் அப்படியொரு உதாரணம். தண்ணீர் முற்றிலுமாக தீர்ந்து விட்ட நிலையில் அங்கு ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு […]

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

0 Comments

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் […]

ஆவ்னியைக் கொன்றது யார்?

0 Comments

பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர். டி1 என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த புலி, ஆவ்னி என பரவலாக அழைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் யாவாடாமல் மாவட்டத்திலுள்ள பந்தர்காவாடா காடுதான் ஆவ்னியின் வாழ்விடம். உள்ளூர் மக்களும் […]