தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

0 Comments

தில்லிப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை ஏன் மறுக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் கடந்த இதழில் பார்த்தோம். மேலும் சில காரணங்கள் இதோ. • மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆண் மலட்டுத் தன்மை விவசாயிகளை அழித்துவிடும். மரபணு மாற்றத்தின் மூலம் பார்னேஸ் என்ற ஆண் மலட்டுத் தன்மை உருவாக்கும் மரபணு புகுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண் மலட்டுத் தன்மைக்கான மரபணு, இந்த டி.எச்.எம் – 11 கடுகோடு நிற்காது பிற […]

கியூபாவில் இயற்கை வேளாண்மை

0 Comments

1959ல் ஏற்பட்ட கியூபப் புரட்சியிலிருந்து 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் கூடிய வணிக உறவுகள் முறிவடையும் வரை, கியூபாவில் வேளாண்மையானது மூலதனம் அதிகமான, அதிகளவில் ஓரின பயிர் வளர்க்கும் விதமாக இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக கியூபா வியாபாரத்தில் பெட்ரோலியப் பொருட்கள், தொழிற் கருவிகள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி போன்ற இடு பொருட்களுக்காக சோசலீச நாடுகளை சார்ந்து இருந்தது. 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் […]

விவசாயிகளின் பிரச்னை விவசாயிகளுக்கு மட்டுமானதா?

0 Comments

சாயிநாத் சந்திப்பு : கவிதா முரளிதரன் விவசாயிகள் பிரச்சனையை இருவிதமாகப் பார்க்கலாம். Farm crisis  மற்றும் Agrarian crisis. நீக்ஷீவீsவீs. இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் பிரச்னை என்பது ஒன்று. விவசாயத்தோடு தொடர்புடைய ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் பிரச்னை என்பது மற்றொன்று. இரண்டாவது பிரச்சனை, விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல. உதாரணத்துக்கு தச்சு வேலை செய்பவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரே சாதியினராக இருப்பார்கள். ஒரு கிராமத்தில் தச்சு வேலை செய்யும் இரண்டு குடும்பங்கள் இருக்கும். அவர்கள் […]

வாங்க;உரமாக்க கற்றுக் கொள்வோம்!

0 Comments

உரமாக்கல் முறைகளில் அடுத்து நாம் காண இருப்பது மண்புழு உரமாக்கல். மண்புழு துணையுடன் செய்யும் இந்த உரமாக்கல் முறை 3-4 வாரங்களில் சமையலறைக் கழிவு குப்பைகளை உரமாக மாற்றும். விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு, குப்பைக் கழிவுகளை உரமாக்கும் வழிகளைக் காண்போம். தேவையான பொருட்கள் 1) குப்பைக் கழிவுகளை உரமாக்கப் பானை அல்லது மரத்தாலான கலன் – குறைந்த பட்சம் 2/4 அடிகள். இதன் பக்கவாட்டில் துளைகள் இட்டிருக்க வேண்டும். வெளிச்சம் வெப்பம் இதன்மூலம் உள் […]

தமிழக விவசாயிகள் கொலைச் சதி!

0 Comments

ஒரு சுருக்கமான வரலாறு தமிழ்நாட்டில் விவசாயிகளின் அகால மரணம் முன் எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்து வருவதே தேசத்தின் அவமானம் என்றுதான் சொல்லவேண்டும். தேசம் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் அரசு மட்டுமல்ல, நாமும் தான்! விவசாயிகளின் இந்தப் பேரவலம் குறிப்பிட்ட காலத்தில் திடீரென நிகழ்ந்துவிடவில்லை. அரசின் தவறான கொள்கைகளாலும், குடிமக்களின் பொறுப் பின்மையாலும் நீண்டகாலமாக இதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சிசெய்த பிரிட்டிஷார் இந்தியாவின் இயற்கை வளங்களை, தங்களுக்குப் பொருளீட்டும் மூலப்பொருளாக, அடிப்படை ஆதாரமாக பார்த்தனர். […]

மரணிக்கும் விவசாயிகள்!

0 Comments

தடைப்படாத ஃபுல் மீல்ஸ்! மகா.தமிழ்ப்பிரபாகரன் ஒரு கிண்ணச் சோற்றுக்கு 100 ரூபாய் என்ன 500 ரூபாய் கூட தருமளவிற்குத் தயாராக இருக்கிறோம். சென்னை மட்டுமல்ல; பெருமளவிலான சிறு நகரங்களில் கூட சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வேளை சாப்பிட்டிற்கு 2000 ரூபாய் கொடுப்பது சர்வசாதாரணமான செலவு. அப்படிக் கொடுப்பது லைப்-ஸ்டைலின் ஓர் அங்கமாகவும் உருவாகிவிட்டது. நகர பொருளாதாரத்தின் வளர்ச்சியாகப் பேசப்படும் இந்த அம்சம், காவிரி நீர் கடைசியாக வந்து சேருமிடமான நாகப்பட்டினத்திலும் கூட உள்ளது. […]

தமிழகத்தில் பனைமரம் – நேற்று இன்று நாளை

0 Comments

அருட்பணி. காட்சன் சாமுவேல் நமது மண், இலக்கியம், கலாச்சாரம், சமயம் வணிகம் உணவு மற்றும் வரலாறு இவைகள் அனைத்திலும் நீங்கா நெடிய இடம் பிடித்திருக்கும் ஒரே மரம் பனைமரம் தான். அனைத்து இலக்கியங்களும் பனைமரத்தினை தவறாது குறிப்பிடுகின்றன, அனைத்து சமயங்களும் பனைசார்ந்த விழா மற்றும் சடங்குகளில் பனைசார்ந்த பொருட்களை நேரடியாகவும் குறியீட்டு ரீதியாகவும் பயன்படுத்துகின்றன, வரலாறு நெடுக பனை மனிதனுக்கு வழித்துணையாக வருகின்றது, வெண்கொற்றக் குடையும் பன பூமாலையணிந்த சேரனும், கள்ளைக் கொண்டாடும் சமூகமும் என பனை […]