ஒளியிலே தெரிவது?

நிவேதா

உலகை அடுத்த பரிமாணத்திற்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நூற்றாண்டு, தொழில்நுட்பத்தின் பிரகாசமான மண்டைகளைக் கொண்டு நம் அனைவரின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்துவிட்டு முடிந்துபோனது. ‘இருள் என்பது வெளிச்சத்தின் இன்மை’ என்ற பழமொழியை நாம் எல்லாரும் நன்கு உள்வாங்கிக்கொண்டோம். நம் கைகளில் இருந்த ஒன்று நம்மை புதிதாக ஈர்க்கத் தொடங்கியது. அன்றிலிருந்து நூற்றுமுப்பது ஆண்டுகளாக நம் வாழ்கையில் இருளே இல்லை. திரும்பிய திசையெல்லாம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண் டிருந்தது. இரவு என்பது வெறும் வார்த்தையாகச் சுருங்கிக் கொண்டது. நம் கையிலிருந்த அந்த ஒன்றைக் கொண்டு காணும் இடத்தில் எல்லாம் வெளிச்சத்தை உண்டாக்கி கொண்டிருந்தோம். அப்போது தான் நாம் காலத்தை நமதாக்கிக் கொள்ள முற்பட்டோம். சூரியனையும் நிலவையும் சற்று தள்ளிவைக்கும் ஆளுமையை பெற்றோம். இரவிலும் நடமாடத் துவங்கினோம். இரவிலும் படிக்கத் துவங்கினோம். இரவிலும் கண்டுபிடிக்கத் துவங்கினோம். மனித குலத்தின் கண்களுக்கு இனி எந்த நேரத்திலும் புலப்படாதது எதுவுமில்லை என்று நாம் கர்வத்தோடு சொல்லிக் கொள்ளவைத்த அந்த மாபெரும் புரட்சி இந்த உலகையே பிரகாசித்து மின்ன வைத்தது!

மின்சாரம், அதன் மூலம் செயற்கை வெளிச்சம், இவற்றைக் கொண்டு ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக நாம் நினைத்தே பார்க்காத அளவிற்கு நம் வாழ்வை மெருகேற்றிக் கொண்டோம். நமது ஒவ்வொரு அணுவும் செயற்கை வெளிச்சத்திற்கு பழகிவிட்ட பின், எந்தப் பழக்கம் அவற்றிலிருந்து தொலைந்து போனது? நம் மனம் தொழில்நுட்ப நவீனத்துவத்திற்கு மாறிவிட்டிருந்தாலும், உடல் இன்னும் கற்கால மனிதனுக்காக வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கிறது. circadian rhythm என்று சொல்லப்படும் நேரம் சார்ந்த சுழற்சியில்தான் நம் உடல் இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தை எதிர்கொள்கிறது. அதாவது, பாதி பகல், பாதி இரவு என்ற கால சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்றமாதிரி படைக்கப் பட்டதுதான் நம் உடல்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து பழகிய நம் மரபுக்கூறு கடந்த நூறு வருடங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நியூட்டனின் கோட்பாட்டின்படி, சக்தியை உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது, பரிமாற்ற மட்டுமே முடியும் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். ஆக, மின்சாரம் உண்மையில் எதனுடைய பரிமாற்றம்? நிலக்கரி, அனல்மின் சக்தி, அணுமின் சக்தி, என்று நம்மிடம் நிறைய பதில் இருக்கிறது. ஆனால், தயாரிக்கப்படும் மின்சாரத்தில் மிகப்பெரிய அளவு உயிர்களின் மரபுக்கூறுகளை பணயம் வைத்து தான் பயன்படுத்தப்படுகிறது (அதனால் உற்பத்தி செய்யப்படுகிறது) என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், ஒளிப் புரட்சி பல்லாயிரக்கணக்கான உயிர்களின் கோடி ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வந்த மரபணுக்களை அழிக்கும் பகடையை உருட்டி விட்டுத்தான் தோன்றியது. ஒரு நாள் முழுதும், அதாவது இருபத்து நான்கு மணி நேரமும் நம் உடல் ஒரே மாதிரி இயங்குவதில்லை. சூரியன் உதிப்பதையும் சூரியன் மறைவதையும் நம் உடல், தனது செயல் பாட்டிற்கான தகவல் சொல்லும் அலாரமாகவே எடுத்துக்கொள்கிறது. மூன்று வேலை பசிப்பதும், இரவானால் உறக்கம் வருவதும், நம் திசைகள் அவ்வப்போது இறுகிசுருங்குவதும் இதனால் தான். இந்த சுழற்சிக்குதான்  Circadian rhythm  என்று பெயர். வெளியிலிருக்கும் ஒளியையும் வெப்பத்தையும் பொருத்து இது இயங்குகிறது.

நட்சத்திரங்களைப் பார்க்கவேண்டும் என்று இயற்கை அமைத்துக் கொடுத்த கண்களை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவும் ஒருவகை உரிமை மீறல்தான். வானியல் ஆராய்ச்சி இந்த நிலையால் பெரும்பாதிப்பை அடைந்தது. அவர்கள் ஆராய்ந்து கண்டடைந்ததில் இந்தப் பிரச்சனை ‘ஒளி மாசுபாடு’ என்று அழைக்கப்பட்டது.

சித்திரை மாத மதியமொன்றின் உச்சி வெயிலில் காதல் உணர்வு பீரிட்டு எழாததற்கும், வெயிலே தெரியாத மலைப் பிரதேசத்திற்கு தேன்நிலவு செல்வதற்கும் இதுவே காரணம். ஆக, இரவும் பகலும் சேர்ந்து இயக்கும் நூல் பொம்மைகளே நம் உடல்கள்! ஆனால் இன்று இரவென்பது இரவைப்போல் உள்ளதா? ஒரு நள்ளிரவில் ஓரிடத்தில் நின்றுகொண்டு நீங்கள் வானைப்பர்த்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதே இடத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் பார்த்த நட்சத்திரங்களில் ஒரு சதவீதத்தைத்தான் உங்கள் கண்கள் கண்டு கொள்ளும். இதற்குக் காரணம், அத்தனை நட்சத்திரங்களை விடவும் நம் பூமியைப் பிரகாசிக்க வைத்துவிட்டோம் என்பதே. இந்த பிரகாசத்தை நினைத்து நாம் யாரும் புளங்காகிதம் அடையவேண்டியதில்லை. ஒளியை எல்லா நேரங்களிலும் சிலாகிப்பது நல்லதல்ல. உண்மையில் இது ஒரு பாதிப்பு. நட்சத்திரங்களை பார்க்கவேண்டும் என்று இயற்கை அமைத்துக் கொடுத்த கண்களை நாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒருவகை உரிமை மீறல் தான். வானியல் ஆராய்ச்சி இந்த நிலையால் பெரும் பாதிப்பை அடைந்தது. அவர்கள் ஆராய்ந்து கண்டடைந்ததில் இந்தப் பிரச்சனை ‘ஒளி மாசுப்பாடு’ என்று அழைக்கப் பட்டது.

நட்சத்திரங்களைப் பார்க்க முடியாதது மட்டுமே இதனால் ஏற்படும் பிரச்சனை என்று எண்ணவேண்டாம். செயற்கை வெளிச்சம் மனித உடலின் உறக்க சுழற்சியை பெருமளவில் பாதிக்கக்கூடியது. இதில் இரவு நேரத்தின் கணினி மற்றும் கைபேசி ஒளி, தெருவிளக்கு ஒளி, அறைகளின் குழல்விளக்கு ஒளி  என்று அனைத்தும் அடங்கும். பொதுவாக நாம் உறங்கச் செல்லும் போது, நம் உடல்  serotonin என்ற ஹார்மோனை சுரக்கும். இந்த serotonin Hø° melotonin என்ற இன்னொரு ஹார்மோன் ஆக மாறும். இந்த  melotonin தான் நம் உடலின் செயல்பாட்டைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, நம் உடல்களை உறங்கசெய்யும். இதில் என்ன சிக்கலென்றால், கருமையான இருளில் தான் இந்த melotonin உற்பத்தி நடக்கும். நம்மை சுற்றியிருக்கும் செயற்கை வெளிச்சம் இந்த உற்பத்தியை பெருமளவில் குறைத்துவிடும். ஆனால் நம் உடல் 6 இல் இருந்து 8 மணிவரை உறங்கவேண்டும், அதுவும் இருளில் என்றே பரிணமிக்கப்பட்டது. ஆக, செயற்கை வெளிச்சம் ‘இன்னும் இரவு வரவில்லை’ என்பது போல் நம் உடலை நடந்துகொள்ளச் செய்யும். அதாவது நாம் உறங்கியிருப்போம் அதேசமயம் உறங்கி யிருக்க மாட்டோம். இந்த உறக்க சுழற்சி கெட்டுப் போவதால் அதன் தொடர்புடைய அனைத்து சுழற்சிகளும் கெட்டுப்போகும். மேலும்,  melotonin என்பது வெறும் உறக்கத் திற்கான ஹார்மோன் இல்லை. புற்று அணுக்களைக் கண்டுபிடித்துக் களைவதில் இதற்கு பங்கு உண்டு. இதன் உற்பத்திக் குறைவதென்பது, புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகமாகிறதென்பதைக் குறிக்கும். செயற்கை வெளிச்சத்தால் மார்பகப் புற்றுநோய் (breast
cancer) வரும் வாய்ப்பு 73 சதவீதம் அதிகரித் துள்ளது என்று ஆராய்ச்சி சொல்கிறது. மேலும், தோல் புற்றுநோய் (skin carcinoma) மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்  (prostate cancer) ஆகியவையும் இதனால் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டுரை இதைப்பற்றினது அல்ல. செயற்கை ஒளியின் பயன்பாட்டைக் தனக்கு சாதகமானதாய் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அனுபவித்து மகிழ்ந்த ஓரினம், அதனால் வரும் பாதகத்தையும் அனுபவிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதுவே நியாயமும் கூட. செயற்கை ஒளியால் சூழலுக்கும் பிறவுயிர்களும் ஏற்பட்ட, ஏற்படும் பாதிப்புகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மனிதன் முதன்முதலில் தீ மூட்டியதே எல்லா அத்துமீறல்களின் தொடக்கம். முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கை வெளிச்சம் நெருப்பு. அதன் வெளிச்சத்தால் பெருமளவு பாதிப்பு நிகழ்ந்ததாக தெரியவில்லை. இன்னும் உறுதியாக சொல்வதென்றால், அதைப் பற்றின ஆராய்ச்சிகள் அப்போது நிகழ்த்தப்படவில்லை. ஆனால் வெளிச்சத்திற்காக மூட்டப்பட்ட நெருப்பினால் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. அதுவரையில் இயற்கை யிலிருந்து சற்று ஒதுங்கி வாழ்ந்த மனிதன், மின்சாரம் என்று கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றே இயற்கைக்கு எதிராக ஆயுதம் எடுத்து விட்டான். மின்சாரம் என்பது போர் ஆக மாறியது. அந்தப் போரில் சிதறிய முதல் ரத்தம் விலங்குகளுடையது. அந்த ஆயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு அதிகாரம் படைத்த அந்த நூற்றாண்டின் மனிதன் வேறுயாரும் இல்லை. நம் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், அறிவுரைகள், வசைகள் ஆகியவற்றின் மூலமாக மாபெரும் சாதனையாளராய், விடாமுயற்சியின் எடுத்துக் காட்டாய், அமெரிக்காவின் தலைசிறந்த விஞ் ஞானியாய் திரும்ப திரும்ப  அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் மாமனிதன் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களே. உலகத்திற்கு இவர் அளித்த மாபெரும் கொடையை எழுதாமல் இக்கட்டுரை முழுமை பெறாது.

இருபதாம் நூற்றாண்டை பரபரப்புடன் வைத் திருந்தது ‘War of currents’ என்னும் மின்சாரத்தின் போர். இந்தப் போரின் முக்கிய நாயகர்களாக விளங்கியவர்கள் இருவர். தாமஸ் ஆல்வா எடிசன் தனது நேர்திசை மின்னோட்டதையும் (direct current), நிக்கோலா டெஸ்லா தனது மாறுதிசை மின்னோட்டதையும் (alternating current) வெகு சிறப்பாக முன்னிறுத்தி போரின் லாபத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே எடிசன் தனது  direct current பயன்பாட்டைப் பிரபலப்படுத்த, டெஸ்லாவின் alternating current ஆபத்தானதென முன்னிறுத்தத் துவங்கினார். இதற்காக அவர் கைகளில் சிக்கிய பகடைகள் ‘ஆபத்தானவை’ என்று பெயர் குத்தப்பட்ட விலங்குகள். தெருக்களில் வாழும் நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளை மின் சாரத்திற்கு (AC) பலிகொடுத்து தன் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். இந்த முன்னேற்றப்பாதையின் ஒரு முக்கிய மைல்கல் ஒரு யானையின் மரணம்.

மீண்டும் ஒரு யானையின் கதையா என்று நீங்கள் அயர்ச்சி கொள்ள வேண்டாம். நாம் எழுதிக் கொண்டு வந்த வரலாற்றை, அதன் தனித்துவத்தை நம் மூலைகளில் பதிந்துகொள்வது மனித குலத்தின் மிகமுக்கிய பாரம்பரியம். 1875 இல் ஆசியாவில் பிறந்த ஒரு பெண் யானைக்குட்டி கடல்கடந்து பயணித்து அமெரிக்காவை அடைந்தது. தன் குடும்பத்திற்கு உழைத்து கொட்ட(?!) ஒரு சர்க்கஸில் வேலை செய்யத் துவங்கியது. பல ஆண்டுகால பயிற்சிகளுக்குப்பின் அந்த சர்க்கஸின் நாயகியானது டாப்சி என்ற அந்த யானை. அதன் வாழ்க்கை எப்படியோ ஓடிக்கொண்டிருக்க ஒரு நன்னாளில் மது அருந்திய நிலையிலிருந்த அதன் பயிற்சியாளன் அதையும் விஸ்கி குடிக்க வற்புறுத்தினான். அது மறுத்த நிலையில் அதன் மென்மையான தும்பிக்கையின் நுனியில் பற்றவைத்த சிகரட்

மின்சாரம் என்பது போர் ஆக மாறியது. அந்தப் போரில் சிதறிய முதல் ரத்தம் விலங்குகளுடையது. அந்த ஆயுதத்தை கையில் ஏந்திக்கொண்டு அதிகாரம் படைத்த அந்த நூற்றாண்டின் மனிதன் வேறுயாரும் இல்லை. நம் குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், அறிவுரைகள், வசைகள் ஆகியவற்றின் மூலமாக மாபெரும் சாதனையாளராய், விடாமுயற்சியின் எடுத்துக் காட்டாய், அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானியாய் திரும்ப திரும்ப  அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் மாமனிதன் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களே.

கொண்டு சூடுவைத்தான். தன் நிலையிழந்த டாப்சி அவனை தூக்கி எறிந்ததில் அவன் இறந்துவிட்டான். அதன் பிறகு வேறு ஒரு முதலாளியிடம் டாப்சி விற்கப்பட்டது. அங்கே சர்கஸ் -ஐ இடம் மாற்றும் பொருட்டு அது கட்டடங்களைத் தன் முதுகின்மேல் நகர்த்திக் கொடுத்தது. இந்தக் காலக்கட்டத்தில் அது கூர்மையான ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டு கடுமையாக வேலை வாங்கப்பட்டதால் அதன் பயிற்சியாளனை அந்த நகரத்தின் காவல்துறை கைது செய்துவிட்டது. பிறகு அந்த பயிற்சியாளன் வேலையை எடுத்துக்கொண்ட வேறொருவன் மது அறிந்துவிட்டு டாப்சி மீதமர்ந்து நகரத்தில் உலா வந்துகொண்டிருந்தான். அவனும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட, டாப்சியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றது. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் பொறுப்பாக குற்றம் சாட்டப்பட்ட டாப்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் எடிசனின் மாமனித மூளை தலைகாட்டியது.

டாப்சி ஒரு ஆபத்தான விலங்கு என்று விளம்பரப்படுத்திவிட்டு, தன்னை மனிதகுலத்தை காக்கவந்த தேவனாக சித்தரித்துக் கொண்ட எடிசன், தனக்குப் போட்டியாக இருந்த  alternating current கொண்டு டாப்சியை ‘மனிதநேயத்துடன்’ கொல்வதாக அறிவித்துவிட்டார். இதனால், alternating current வீட்டு உபயோகத்திற்கு ஆபத்தானது என்னும் கருத்தை மக்களிடையே பரப்பி, தனது  direct current ஐ அனைவரும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற தனது சூட்சமத்தை நிறைவேற்றிக் கொண்டார். கொலைக்களத்திற்குப் பார்வையாளராக வரும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின் கைவிடப் பட்டது. டாப்சியை கொலைசெய்யவிருந்த உபகரணங் களிலெல்லாம் முதலில் அது பொருந்த மறுத்தது. பின்பு, சயனைட் தடவப்பட்ட காரட்களை அதற்கு உண்ணக் கொடுத்தார்கள். நடக்கப் போவதை உணர்ந்துவிட்டது போல், அதையும் டாப்சி உட்கொள்ள மறுத்தது. அதன் அப்போதைய எண்ணவோட்டம் என்னவாக இருந்திருக்குமென யாரால் உறுதிப்படுத்த முடியும்? சில வினாடிகளில் மனம் மாறி காரட்களை முழுதாக உண்டு முடித்தது. செம்புப் பலகைகளுக்குள் தன் கால்களை நன்றாகப் பொருத்திக் கொண்டது. மேலும் சில உபகரணங்களை அணிந்துகொள்ள இசைந்து கொடுத்தது. ஒரு மாபெரும் விடுதலைக்குத் தயாராகிக் கொண்டது ஆசிய மனம் பொருந்திய ஒரு குட்டி பெண் யானை. பொத்தானை அழுத்தியவுடன் மாறுதிசை மின்னோட்டம் மூன்று டன் எடை முழுதும் அடர்ந்து பாய்ந்தது. மிகப்பெரிய ஆரவாரத்துடன் ஒரு நொடியில் உயிர் துறந்தது டாப்சி. கொலையை நிகழ்த்திக் காட்டி வெற்றியடைந்த எடிசன் சம்பவத்தை ஆவணப்படுத்தி மக்களுக்குத் திரையிட்டு சமூக சேவை செய்துகொண்டிருந்தார். சமூகம் இதை நல்லதொரு பொழுதுபோக்காய் கண்டுகளித்தது. டாப்சியின் நிறுத்தப்பட்ட ரத்தவோட்டத்தின் கிளைகளே நம்மை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக இன்று ஒளிர்கிறது! மின்சாரத்தையும் ஒளிமாசுப்பாட்டையும் இங்கே குழப்புவதுபோல் தோன்றலாம். மின் சாரத்தின் பெரும்பங்கு எதற்கு செலவழிக்கப் படுகிறது என்பது தெரிந்தால் இதில் ஒரு தெளிவு கிடைக்கும். அமெரிக்கா ஒரு வருடத்திற்கு 8 பில்லியன் டாலர்களை தேவையற்ற செயற்கை ஒளி ஏற்படுத்திக்கொள்ள செலவழிக்கிறது. இது அதன் மொத்த மின்சார பயன்பாட்டின் 15% ஆகும். இந்தியா இதையும் மிஞ்சி தனது ஒட்டு மொத்த மின்சாரப் பயன்பாட்டில்18%ல் இருந்து 38%வரை தெருவிளக்கிற்கே செலவழிக்கிறது என்று ‘Maps of India’  இணையதளம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் கட்டடங்களை ஒளிரச்செய்வதை மாபெரும் tக்ஷீமீஸீபீ ஆகக் கையாள்கிறது. அதையும் சேர்த்தே 15% என்றால் பிற வேலைகளில் அது இன்னும் அதிகமாக மின்சாரம் செலவழிக்கிறது. மின்சாரம் எதற்கு செலவிட்டாலும் அதில் சூழல் பாதிப்பு நிகழ்கிறதென நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொத்த கணக்கில் ஒரு மிகமுக்கிய பங்கு வகிக்கும் ஒளிமாசுப்பாட்டின் அடர்த்தியை உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நாம் கவனிக்கலாம்… டாப்சியின் மரணத்தின் அதிர்வலைகள், மரங்களில் இருந்து, மற்ற விலங்குகள் வரை திடுக்கிடலை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ளோரி டாவில் ஒருவர் தன்னுடைய கவனிப்பை தனது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். தன் வீட்டின் பக்கத்தில், தெருவோரத்தில்  இருக்கும் மாமரம் பருவம் தாண்டி நவம்பர் மாதத்தில் காய்த்ததாக எழுதியிருந்தார். அதுவும் தெருவிளக்கின் அருகிலிருக்கும் கிளைகள் பெருவாரியாக கனிகளைத் தந்திருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். தெருவிளக்கிற்கும், பருவம் கடந்தும் மாமரம் கனிந்ததற்கும் எதாவது தொடர்பிருக்கிறதா என்ற யோசனையை சில  காலநிலை உண்மைகளை கருத்தில் கொண்டு வலுப்படுத்துவோம்… பொதுவாக ஒளியின் அடிப்படையில் நிகழும் மாறுதல்கள் கொண்டு, தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகை தாவரங்கள் (long-day plants),  பகல் நேரம் (ஒளி) அதிகமாக இருக்கும் கோடையில் பூத்து, பின் வரும் பகல்நேரம் குறைந்த மழை மற்றும் குளிர் காலங்களில் தன்னை வளர்த்துக் கொள்ளும். இதற்கு அப்படியே முரணாக இருப்பவை இரண்டாம் வகைத் தாவரங்கள் (short-day plants). இவை பகல் குறைவாக இருக்கும் குளிர்காலங்களில் பூத்து, பகல் அதிகமாக இருக்கும் கோடைகாலத்தில் தன் உறுப்புகளை வளர்த்துக் கொள்ளும். மூன்றாம் வகை (day neutral plants)  தாவரங்களின் வளர்ச்சியை பகலின் அளவு பாதிக்காது. இதை வைத்து மேற்கூறிய மாமர சம்பவத்தை ஆய்ந்தால், ஒரு புரிதலை நாம் அடை யலாம். மாமரம் முதல் வகையை சேர்ந்தது.

பகல் நேரம் (ஒளி) அதிகமாக இருக்கும் கோடைகாலங்களில் பூத்து, காய்த்து தன் இனத்தை பெருக்கிக்கொள்ளும். ஆனால் நவம்பர் என்பது கோடையல்ல. அது பின்மழை, அல்லது குளிர்காலம். ஆக, குளிர்காலத்தில், தன் குணத்திற்கு மாறாக ஏன் அந்த மாமரம் பூத்துக் காய்த்தது ஏனென்றால் அது ஏமாந்து விட்டது. இரவு முழுக்க எரிந்துகொண்டே இருந்த தெருவிளக்கின் ஒளியை அந்த மரம் நீண்ட பகலாக (நீண்ட நேர ஒளி) உள்வாங்கிக் கொண்டது. ஆதலால் குளிர்காலத்தின் வருகையை அது புறக்கணித்துவிட்டு, தான் இன்னும் கோடைகாலத்தில் தான் இருக்கிறோம் என்று நினைத்து, காய்த்துக்கொண்டிருந்தது. அதிலும், ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் தங்களை வெவ்வேறு காலங்களில் பொருத்தி வாழ்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மரத்தின் மூல உடலியல் என்னவாக இருக்கும்? இந்த குழப்பத்தை அந்த மரம் என்னவாக எதிர்கொள்ளும்? வருடம் முழுக்க கோடையாகவே நினைத்துக் கொண்டு வாழும் அந்த மரம் எப்போது தான் வளரும்? எப்போது இலையுதிர்க்கும்? குளிர்காலத்தின் வருகைக்காக வானம் பார்த்து ஒற்றைக்காலில் காத்துக்கொண்டே இருக்கும் அந்த மரத்திற்கு நம்மிடம் என்ன பதில் உள்ளது?

அமெரிக்கா ஒரு வருடத்திற்கு 8 பில்லியன் டாலர்களை தேவையற்ற செயற்கை ஒளி ஏற்படுத்திக்கொள்ள செலவழிக்கிறது. இது அதன் மொத்த மின்சார பயன்பாட்டின் 15% ஆகும். இந்தியா இதையும் மிஞ்சி தனது ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டில்18%இல் இருந்து 38%வரை தெருவிளக்கிற்கே செலவழிக்கிறது என்று  ‘Maps of India’  இணையதளம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் கட்டடங்களை ஒளிரச்செய்வதை மாபெரும் trend ஆகக் கையாள்கிறது. அதையும் சேர்த்தே 15% என்றால் பிற வேலைகளில் அது இன்னும் அதிகமாக மின்சாரம் செலவழிக்கிறது.

குளிர்காலங்களில் பூத்து, கோடையில் வளரும் தாவரங்களும் இதைப் போன்று பாதிப்பை அனுபவிக்கின்றன. அதிக நேர ஒளியால் அவை தங்களை கோடைகாலநிலைக்கே பொருத்திக்கொண்டு, பூப்பதை வெகுவாக நிறுத்திக்கொண்டன என்று ஒரு ஆய்வு சொல்கின்றது. அப்போது அதன் இனத்தை அது எவ்வாறு பெருக்கிக்கொள்ளும்? மகரந்தச் சேர்க்கை எப்போது தான் நிகழும்? அந்தப் பூக்களை நம்பி வாழும் பூசிகளின் கதி? இப்போது நாம் இரண்டாம் நிலைக்குச் செல்கிறோம். ஏற்கனவே ஒளிமாசுபாட்டால்  பாதிக்கப்பட்ட தாவரங்களால் தங்கள் உணவுச் சுழற்சியைப் பறிகொடுத்துவிட்ட பூச்சி யினங்கள், நேரடியாகவும் செயற்கை ஒளியால் பாதிப்பு அடைகின்றன. பொதுவாகவே இரவு நேரங்களில் விளக்குகளால் ஈர்க்கப்படும் பூச்சிகள். பெரும்பாலும் இன்றிரவு உங்கள் விளக்கின் அருகில் நீங்கள் பார்க்கும் பூச்சியை நாளை உங்களால் பார்க்க முடியாது. செயற்கை விளக்கு அதற்கு மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கிறது. முதல் வாய்ப்பு, வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு, அதனால் அவைகளை உண்ணும் பிராணிகளின் கண்களுக்குத் தென்பட்டு இறந்து போவது.  இரண்டாம் வாய்ப்பு, விளக்கை நிலவென நினைத்துக் கொண்டு, அதையே சுற்றிசுற்றி சோர்ந்து மடிந்துபோவது. மூன்றாம் வாய்ப்பு, விளக்கைப் பார்த்து பயந்து, அதனருகில் நெருங்காமல் இருக்க தன் போக்குவரத்தை முடக்கிக்கொண்டு உணவு தேடாமல், இனம் பெருக்காமல் பட்டினியில் மடிவது. ஆக, மூன்று வாய்ப்புகளும் இரவு நேரப் பூச்சிகளுக்கு அளிப்பது ஒரே விதியைத்தான். மரணம்! பகல்நேரங்களில் செயல்படும் பட்டாம் பூச்சி போன்ற பூச்சிகளையும் நாம் விட்டு வைக்கவில்லை. அவைகளும் இரவையும் பகலென நினைத்து, இரவுகளில் செயல்பட்டு வேட்டையாடிகளிடம் சிக்கி மடிகின்றன. மேலும், பட்டம்பூச்சிகளாக மாறும் முன், புழுக்களாக இருக்கும் நிலையில் இரவு என்பது வளர்ச்சிக்கு இன்றியமையாமை. அங்கிருந்தே அவை இழக்கத் தொடங்கிவிடுன்றன!

‘Burrowing Mayfly’  என்ற பெயருடைய ஒரு பூச்சியினம் ஒளிமாசுபாட்டால் அதிக அளவு பாதிப்பை அடைந்திருக்கிறது. இந்தப் பூச்சி பொதுவாக நீரில் தான் வளரும். மீன்களுக்கு இவை ரொம்பவும் விருப்பமான உணவு. அதனால் அதை மீன்பிடிக்கும் தூண்டில்  முனைகளிலும் பயன்படுத்துவர். நீருக்குள்ளேயே தனது முக்கால்வாசி வாழ்நாளைக் கழித்துவிடும் இந்த பூச்சி, இனப்பெருக்கத்திற்கு மட்டுமே நிலத்திற்கு வரும். அது நிலத்தில் வாழும் காலம், 30 நிமிடங்களில் இருந்து இரண்டு நாட்கள் வரை தான். புணர்ச்சிக்குப் பின், பெண் பூச்சிகள் தான் முதன்முதலில் எதிர்ப்படும் மேற்பரப்பில் தன் முட்டைகளை ஈனும். இது இந்த பூச்சியினத்திற்கு உரிய ஒரு தனித்துவம். ஆனால், நதிக்கரையோரங்கள் இருக்கும் செயற்கை ஒளியால் ஈர்க்கப்பட்டு விளக்கின் மேற்பரப்பில் மோதி, வெப்பத்தில் பொசுங்கி இறந்து விடும். அப்படி ஒரு மேம்பாலத்தின் விளக்கடியில், ஒரே இரவில் 1.5 பில்லியன் பூச்சிகள் இறந்து கிடந்தாக ஓர் பதிவு சொல்கின்றது. இதில் இருபாலினத்தைச் சேர்ந்த பூச்சிகளும் அடங்கும். முட்டைகளை ஈனும் நோக்கத் தோடு தஞ்சமடையும் பெண் பூச்சிகளின் பிரசவ அவசரத்திற்கு நிகழ்ந்த ஏமாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளையும் சேர்த்து காவு வாங்கிவிடுகிறது. இந்தப் பூச்சிகளை நம்பி வாழும் மீன்களின் பசியில் ஒரு வலிமையிழந்த தலைமுறை தலையெடுக்கிறது. நதிகளில் விழுந்து பிரதிபலிக்கும் செயற்கை ஒளி அத்தனை அழகானதில்லைதான்! இதே போன்று பிரசவிக்க மட்டுமே நிலத்திற்கு வரும் ஓர் நீர்நில உயிரினத்தின்250 மில்லியன் ஆண்டுகால பாரம்பரியத்தை நிற்கதியாக்கிய நமது பிரகாசமான வாழ்க்கையின் இன்னும்பல ‘நற்செயல்கள்’ அடுத்த இதழில்…