தமிழக விவசாயிகள் கொலைச் சதி!

ஒரு சுருக்கமான வரலாறு

தமிழ்நாட்டில் விவசாயிகளின் அகால மரணம் முன் எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்து வருவதே தேசத்தின் அவமானம் என்றுதான் சொல்லவேண்டும். தேசம் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் அரசு மட்டுமல்ல, நாமும் தான்! விவசாயிகளின் இந்தப் பேரவலம் குறிப்பிட்ட காலத்தில் திடீரென நிகழ்ந்துவிடவில்லை. அரசின் தவறான கொள்கைகளாலும், குடிமக்களின் பொறுப் பின்மையாலும் நீண்டகாலமாக இதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சிசெய்த பிரிட்டிஷார் இந்தியாவின் இயற்கை வளங்களை, தங்களுக்குப் பொருளீட்டும் மூலப்பொருளாக, அடிப்படை ஆதாரமாக பார்த்தனர். சூழல் குறித்த எந்தப் புரிதலுமற்று, பல தவறான கருத்துகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. மாற்றி அமைக்கப்பட்டன. மலை வளமும், வன வளமும் அழிக்கப்பட்டு காபி, தேயிலை போன்ற பணப் பயிர்கள் வளர்க்கப்பட்டன. நீர் வளத்தைப் பாதுகாக்கும் புல்வெளிகளின் முக்கியத்துவம் தெரியாமல் அவை பயனற்று இருப்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு மாற்றி அமைக்கப்பட்டன. நீர்நிலைகள் தூர்க்கப்பட்டுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. மழையை உருவாக்கும் சோலைக்காடுகளைக் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை பலவேறு வழிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டது.

வெளிநாட்டுக்காரனுக்கு இந்தியாவின் இயற்கை வளங்கள் குறித்து அறிவோ, ஆர்வமோ இருந்திருக்கவில்லை என்பதை உண்மை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பின் சுதந்திர நாட்டின் அரசுகளும் அதே பார்வையில்தான் தொடர்ந்து செயல்பட்டன என்பதுதான் கொடுமையான துன்பியல் சம்பவங்கள்.

வெளிநாட்டுக்காரனுக்கு இந்தியாவின் இயற்கை வளங்கள் குறித்து அறிவோ, ஆர்வமோ இருந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பின் சுதந்திர நாட்டின் அரசு களும் அதே பார்வையில்தான் தொடர்ந்து செயல்பட்டன என்பதுதான் கொடுமையான துன்பியல் சம்பவங்கள்.இந்தியா முழுவதும் இயற்கை வளங்களான மலைகள், காடுகள், நதிகள், நீர்நிலைகள் அனைத்தும் கட்டற்று சூறையாடப்பட்டு வருகின்றன. பன்னாட்டு வர்த்தகக் கழகங்களும், அவற்றின் உள்ளூர் பங்காளிகளும் இந்தியாவின் இயற்கை வளங்களை களவாடி வருகின்றனர். ஆட்சியில் இருப்போரும், அதிகார வர்க்கமும் இந்தக் கொள்ளையின் பங்காளிகளாக செயல் பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்திய வேளாண்மையின் அடிக்கட்டமைப்பாக விளங்கும் நில வளமும், நீர் வளமும் திட்டமிட்டு பாழடிக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய வேளாண்மையை மேம்படுத்துவதாகக் கூறியும் ஒரு பன்னாட்டு சதி இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது.

பசுமைப் புரட்சியின் வன்முறை

குறிப்பாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக கூறி “பசுமைப் புரட்சி” அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பசுமைப் புரட்சி இந்தியாவின் உணவு உற்பத்தி யில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக அதிகம். ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற பெயரில் சூழலியலாளர் வந்தனா சிவா ஒரு நூலையே எழுதி இருக்கிறார். (இந்நூலின் தமிழாக்கம் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது) இந்தியாவின் பாரம்பரிய விதை ரகங்களுக்குப் பதிலாக இறக்குமதி செய்யப் பட்ட விதை ரகங்களும், அவற்றை விளைவிப் பதற்காக அறிமுகம் செய்யப் பட்ட ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நமது விவசாயிகளின் வாழ்வை சீரழித்த சோக வரலாறு அந்த நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மண்ணுக்கும், பிற சூழ்நிலைகளுக்கும், மனிதர்களுக்கும் உகந்த பல வகையான நெல் ரகங்கள் இருந்தன. கடும் வறட்சியையும், அதிக வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய நெல்ரகங்கள் நம்மிடம் இருந்தன. இந்த நெல்ரகங்கள் பல்வேறு காலச்சூழல்களுக்கும், மனிதத் தேவைகளுக்கும் உரிய மருத்துவ குணங்களோடு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வேளாண்மை அறிவியலாளராக இருந்த முனைவர் ஆர். ஹெச். ரிச்சாரியா என்பவர் சேகரித்து வைத்திருந்த சுமார் 19,000 பாரம்பரிய அரிசி ரகங்களை அமெரிக்காவிற்குத் தாரை வார்த்துவிட்டு, தரம்குறைந்த நெல்ரகங்களை இறக்குமதி செய்த அன்றைய வேளாண்மைத்துறை அமைச்சர் சி. சுப்ரமணியமும், இந்திய வேளாண்
துறையின் நிரந்தர ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதனும்தான் தமிழ்நாடு உட்பட இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்யும் அரசுகளின் வேளாண்மை வழிகாட்டிகள். (முழு விவரங்கள் பூவுலகின் நண்பர்கள் வெளியீடான “மாபெரும் விதைக் கொள்ளை” என்ற குறுநூலில்) பசுமைப் புரட்சியை நியாயப்படுத்தும் சில கருத்துகள் சிலரிடம் உண்டு. அன்று நிலவிய பஞ்சத்திற்குத் தீர்வாகவே பசுமைப்புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது என்று நம்பிக்கை நிலவுகிறது. உண்மை வேறானது. தமிழ்நாட்டின் உணவுப் பழக்கம் முதன்மையாக நெல் அரிசியை அடிப்படையாக கொண்டது அல்ல. பல சிறு தானியங்களை அடிப்படையாக கொண்டதே தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பழக்கம். அரிசி உணவு என்பது விழாக்கால சிறப்பு உணவாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நமது முன்னோர்களின் உடல் வளத்திற்கும், நமது உடல்நல நலிவிற்கும் இந்த உணவுப் பழக்க மாறுபாட்டிற்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது. சிறுதானிய உணவுப் பழக்கத்தைப் புறக்கணித்து அரிசி உணவை மட்டுமே பிரதான உணவாக மாற்றியதில் பல்வேறு வர்க்கத்தினரின் சுயநலமும், வர்த்தக நலமும் அடங்கி இருந்தது. இன்று ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற தொற்றாத நோய்களின் பெருக்கத்திற்கு நமது இந்த உணவுப் பழக்கமே காரணம் என்று சமூக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அரிசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை, உணவுப்
பஞ்சமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதற்கு பசுமைப் புரட்சியே தீர்வு என்ற சதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பசுமைப் புரட்சியின் பெயரால் அறிமுகம் செய்யப்பட்ட நெல் ரகங்கள் அனைத்தும் பலவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. அதில் முக்கியமானது கால்நடை களுக்கான தீவனம் இல்லாமல் போனது. இந்த நெல் ரகங்கள் அனைத்தும் குட்டை வகையைச் சேர்ந்தவை. எனவே கால்நடைகளின் தீவனமான வைக்கோலின் உற்பத்தி மிகவும் குறைந்தது. இந்த ரகங்கள் அதிக நீர்வளத்தை சார்ந்திருப்பவை. மேலும் இயல்பான வளர்ச்சித் திறனும், நோய் எதிர்ப்புத் திறனும் குறைந்தவை. எனவே ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் இல்லாமல் இந்த ரகங்களில் விளைச்சல் காண முடியாது. இந்த ரசாயன உரங்கள் அனைத்தும், இரண்டாம் உலகப்போரில் ஆயுதம் தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட பொட்டாஷியம், பாஸ்பேட், நைட்ரேட் ஆகிய ஆபத்தான ரசாயனங்களால் உருவாக்கப்பட்டவை. இந்த ரசாயன உரங்கள் மண்ணின் தன்மையைக் குலைத்தன. மேலும் விலை அதிகமுள்ள இந்த ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் விவசாயிகளின் செலவை பலமடங்கு அதிகரித்தன.

பசுமைப் புரட்சி (Green Revolution) யின் தொடர்ச்சியாக இரண்டாம் பசுமைப் புரட்சி அல்லது என்றென்றும் பசுமைப் புரட்சி ((Evergreen Revolution) அறிமுகம் ஆனது. அறிமுகம் ஆனது. முதலாவது பசுமைப் புரட்சியின் அறிமுகங் களான ரசாயன உரங்களுக்கும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி அவர்களை கடன்பொறியில் சிக்க வைத்ததோடு, எதிர்பார்த்த விளைச்சலும் கிடைக்கவில்லை என்பதை விவசாய விஞ் ஞானிகள் தாமதமாக ஒப்புக் கொண்டனர். எனவே இவற்றுக்கு மாற்றாக மரபணு மாற்று விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம், அறிவுச் சொத்துரிமை சட்டம் என்ற பெயரில் விதை மீதான உரிமைகளையே விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதரவாளர்கள் வழங்கிய வாக்குறுதியில் கூறப்பட்ட எந்த நன்மையையும் விவசாயிகளுக்கோ, நுகர் வோருக்கோ கிடைக்கவில்லை. மாறாக இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், அந்த விதை மீதான அறிவுச் சொத்துரிமையை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கே கொள்ளை லாபத்தை அள்ளிக் குவிக்கிறது. பசுமைப் புரட்சியையும், இரண்டாம் பசுமைப் புரட்சியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாகனமாக மத்திய – மாநில வேளாண்மை அமைச் சகங்களும், வேளாண்மைப் பல்கலைக் கழகங்களும் செயல் பட்டன. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் தொடர்பால் பயனடைந்த அமைச்சரகங்கள் இந்தியாவின் வேளாண்மை தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தன. அந்த கொள்கை முடிவுகள் அனைத்தும் நமது பாரம் பரிய விவசாயிகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. வேளாண் துறைக்கான பணியாளர்களை உருவாக்கிய வேளாண்மைப் பல்கலைக் கழகங்களும் சுயசிந்தனை அற்ற – அறிவியலை மதம் போல விமரிசனமற்று வழிபடும் வேளாண்மை பட்டதாரிகளை உருவாக்கின. இந்த வேளாண்மைப் பட்டதாரிகள், நமது விவசாயி களின் பாரம்பரிய வேளாண்மை அறிவை புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட வேளாண்மை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் பரப்பினர். அரசும், அரசுத்துறைகளும் மக்களை காப்பதற்காகவே இருக்கின்றன என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த அப்பாவி விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்கள் – வேளாண் அமைச்சகம் – வேளாண்மை பல்கலைக் கழகங்கள் கூடிச் செய்த சதிக்குப் பலியானார்கள். இதற்கு இந்தியா கொடுத்த விலை மிக அதிகம். உதாரணமாக இந்திய மாநிலங்களிலேயே மிகவும் செழிப்பான மாநிலமான பஞ்சாப் மாநில விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மிகவும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

தமிழக விவசாயிகளின் அவலங்கள்

பசுமைப் புரட்சியின் மாயையிலிருந்து நமது அண்டை மாநிலங்கள் அனைத்தும் நம்மைவிட விரைவில் மீண்டுவிட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது வேளாண்மைக் கொள்கையாக இயற்கை வேளாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த மாநில அரசுகளின் ஆலோசகராக செயல் பட்டவர் நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை நிபுணர் கோ. நம்மாழ்வார். ஆனால் நம்மாழ்வார் பிறந்த தமிழ்நாட்டில் அவரது ஆலோசனையைக் கேட்க தமிழ்நாடு அரசு இன்றுவரை முன்வரவில்லை. தமிழக வேளாண்மை பல்கலைக் கழகமும், தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் பசுமைப் புரட்சியைத் தீவிரமாகப் பரப்பின. ஆங்கிலம் படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று தவறாக நம்பிய விவசாயிகள் மோசம் போனார்கள். இயற்கையை ஐந்து திணைகளாக பிரித்து வாழ்ந்த தமிழினம், தற்போது இயற்கை குறித்த புரிதலை முழுவதுமாக துறந்துவிட்டது. தமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான நீர்நிலைகளை ஆக்கிரமித்து அழிக்கும் விந்தையான இனமாகவே தமிழினத்தை வரலாறு பதிவு செய்யும். ஆறுகளை மணல் குவாரிகளாகவும், ஏரிகளை ஆக்கிரமிக்கத் தயாராக இருக்கும் புறம்போக்கு நிலமாகவும் பார்க்கும் விபரீதமான மனநிலை தனிநபர்களிடம் மட்டுமல்ல, அரசிடமும் இருக்கிறது. இதனால் தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டது. சிறு விவசாயிகளோ வேறுபல சிக்கல் களையும் கூடுதலாக சந்தித்தனர். குறிப்பாக அவர்களது நிலத்தை அருகிலுள்ள அரசியல் பெரும்புள்ளிக்கு மலிவு விலைக்கு விற்க மறுத்த காரணத்தால் பாசனத்திற்கான நீர் தடுக்கப்பட்டது. ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டிய மொத்த நீரையும் அப்பகுதியில் செல்வாக்காக இருந்த அரசியல்வாதிகளின் நிலத்திற்கு மடைமாற்றப்பட்டது. இத்தகைய கயமைத்தனத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த எந்தக் கட்சியும் விதிவிலக்காக இல்லை. இந்த அயோக்கியத்தனத்திற்கு அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் துணை நின்றனர். இதனால் மனம் வெறுத்த விவசாயிகளில் பலர் விவசாயத்திலிருந்தே வெளியேறினர். கோக், பெப்சி குளிர்பான நிறுவனங்களுக்கு கிடைத்த நீர் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விவசாய விளைபொருட்களுக்கான விலையை, அதை உற்பத்தி செய்த விவசாயி நிர்ணயிக்க இயலாத அரசின் கொள்கை, விவசாயிகளின் மீதான மிகப்பெரும் தாக்கு தலாகும். பொது விநியோக முறைக்காக விவசாயிகளிடம் பயிர்களை கொள்முதல் செய்த அரசு, அதற்கான நியாய விலையை வழங்காமல் அநீதி இழைத்தது. விவசாயிகளின் இயல்பான உரிமைகளை சுரண்டிய அரசு, அதை மீறியும் அவர்கள் உழைத்து உற்பத்தி செய்த விளைபொருட்களை அநீதியாக கொள்முதல் செய்தது. விவசாயிகளின் நிலம் கைமாறியது. நிலத்தைக் கைமாற்ற மறுத்தவர்களுக்கு நீர் மறுக்கப்பட்டது. இரண்டும் கிடைத்தவர்களுக்கு நம் பாரம்பரிய வேளாண்மை மறந்து போயிருந்தது. குறிப்பாக சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள் வழக்கொழிந்து போயிருந்தன. ஒரே பயிரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயிரிடும்முறை பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக மண்ணின் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்வதற்காக செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இது விவசாயிகளுக்கு கூடுதல் பொருட் செலவை ஏற்படுத்தின. விவசாய விளைபொருட்களை அறுவடைக்குப் பின் கையாளும் தொழில்நுட்பமும் தேவையான அளவில் வளர்ச்சி அடையவில்லை. எனவே உரிய விலை கிடைக்காத விளைபொருட்களை விவசாயிகள் அழிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. குறிப்பாக அழுகும் தன்மை வாய்ந்த காய்கள், கனிகள் போன்றவை விற்பனை செய்யப்படாமல் விவசாயிகளை பெரும் பொருள் இழப்பில் ஆழ்த்தியது. விளைபொருட்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்வதும், அறுவடையே செய்யாமல் நிலத்திலேயே காயவிட்டு விவசாயி துன்பம் அடைவதும் நகரவாசிகளின் கவனத்தைப் பெரும்பாலும் கவர்வதில்லை. ஆக மொத்தத்தில் வேளாண்மை என்பது மத்திய, மாநில அரசுகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. விவசாயிகளின் தரப்பிலும் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கரும்பு போன்ற பணப்பயிர்கள் மிக அதிக நீர்வளம் தேவைப்படும் பயிர்களாகும். இப்பயிர்கள் மீது நமது விவசாயிகள் தற்காலிக பொருளாதாரப் பலன்களை மட்டுமே எதிர்பார்க்கும் பொருளற்ற காதல் கொண்டுள்ளனர். மேலும் பொதுவான வேளாண்மைப் பிரச்சினைகளுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஒற்றுமையுடன் போராடுவதற்குப் பெரும் தடையாக இருப்பது அவர்களது மனதில் உட்கிடையாக இருக்கும் ஜாதிப்பற்றும், வெளிப்படையாகத் தெரியும் அரசியல்கட்சி சார்புத் தன்மையுமே.

நாட்டு மாடுகள்… உண்மை நிலை என்ன?

பாரம்பரிய வேளாண்மை முறையில் நாட்டு மாடுகளின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது. மாடுகளின் உழைப்பு மட்டுமல்ல, மாடுகளின் சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளும் மிகவும் முக்கியமான பங்களிப்பாகும். இயற்கையான உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் மாட்டின் கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்பட்டன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாடுகளின் அழிவு என்பது திடீரென ஏற்பட்டதல்ல. பசுமைப் புரட்சியின் விளைவாக அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான நெல்ரகங்கள் குட்டையானவையே. இவற்றில் வைக்கோல் மிகக்குறைந்த அளவே இருக்கும். இதன் காரணமாக கால்நடைகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. வைக்கோலின் அளவு குறைந்த அதே நேரத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் பயிரிடும் முறையும் முக்கியத்துவம் இழந்தது. கால்நடைகளுக்கு உணவளிக்கவும் வணிக நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய அவலம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அறிவியல் தொழில்நுட்பத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இயந்திரமான டிராக்டர், வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு மாட்டின் தேவையை இல்லாமல் ஆக்கியது. மாடுகளின் இழப்பு விவசாயிகளுக்கு பலவிதங்களிலும் இழப்புகளை ஏற்படுத்தினாலும், மாடுகளை வளர்ப்பதற்கு தேவையான அடிக்கட்டமைப்பு குலைக்கப்பட்டது. இவ்வாறு விவசாயிகளின் வாழ்க்கையிலிருந்து மாடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கான ஒரே வழியாக ஏறு தழுவுதலை மட்டுமே முன் நிறுத்துவது ஏற்க முடியாத வாதமாகும். வளமாக வாழும் ஒரு சமூகத்தில் மட்டுமே ஏறு தழுவுதல் போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற இயலும். விவசாயிகள் வாழ வழியின்றி மரணத்தை தழுவும் அவலமான நேரத்தில், ஏறு தழுவுதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆபாசமாகப் பார்க்கப்படலாம். நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அம்சங்களைக் கொண்ட திட்டங்கள் தேவை, அதன் ஒரு கட்டமாக ஏறு தழுவுதலும் இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

விவசாயிகளின் தொடர் அகால மரணத்தை தன்னிச்சையான அம்சமாகக் கருத இயலாது. உலகிற்கு உணவளிக்கும் இனத்தை, இந்த சமூகம் கைவிடுவதன் மூலம் படுகொலை செய்வதாகவே பொருள் கொள்ள வேண்டும். அரசின் தவறான கொள்கைகள், குடிமக்களின் பொறுப்பற்ற போக்கு ஆகிய அனைத்தும் விவசாயிகளின் இந்த படுகொலைக்குப் பொறுப் பேற்க வேண்டும். உணவுத் தேவைக்காக விவ சாயிகளைச் சார்ந்து வாழும் எவரொருவரும் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இயலாது. மற்ற துறைகளைப் போல வேளாண்மை என்பது சாதாரண தொழில் அல்ல. அது உலகு முழுவதுமுள்ள மனிதர்களுக்கு உணவளிக்கும் சமூக செயல்பாடு. ஒரு குடும்பத்தில் மூத்த வாரிசுக்கு இருக்கும் கூடுதல் பொறுப்பும், பணிச் சுமையும் வேளாண் சமூகத்திற்கு உள்ளது. அதே நேரம் மூத்த வாரிசின் பொறுப்பையும், பணிச் சுமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை மற்ற தரப்பினர் அனைவருக்கும் உள்ளது. இதை மறந்துவிட்டதன் பலனையே நாம் இப்போது அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம். உணவு உற்பத்தியில் விவசாயிகள் நேரடியாக களத்தில் இருந்தாலும் மற்ற துறை சார்ந்தவர் களும் வேளாண்மை குறித்து தேவையான அறிவோடும், அக்கறையோடும் இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கண்ணி அறுபட்டது. வேளாண் குடும்பத்தில் பிறந்த பலரும் ஆங்கிலக் கல்வியைப் பயின்ற பின்னர் வேளாண்மை யி லி ரு ந் து மு ற் றி லு ம £ க துண்டித்துக் கொண்டனர்.

நுகர்வோர்கள் தமக்குத் தேவைப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் விவசாயி களிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு முன்வரவேண்டும். உணவுப் பொருட்களை அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, பெரும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்க மாட்டோம் என்று நுகர்வோர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

வேளாண்மை என்பது மெல்ல, மெல்ல சமூகத் தால் புறக்கணிக்கப்படும் துறையாக மாறியது. இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மைக்கு எதிராக நிற்கும் உணவுப் பழக்கத்திற்கு, பொருட் களுக்கு ஆங்கிலக் கல்வி படித்த நடுத்தர வர்க்கம் உளவியல்ரீதியாக அடிமையாகிப் போனார்கள். விவசாயத்திற்கு வருவாய் அளிக்கக்கூடிய இளநீருக்கு, மோருக்குப் பதிலாக பெப்சி, கோக் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களாக மாறி தம் உழைப்பை அந்த நிறுவனங்களுக்கு லாபமாக அளித்தனர். அல்லது நமது விவசாயிகளை அழித் தனர். நம் பாரம்பரிய உணவுகளைப் புறக்கணித்து இறக்குமதி உணவுகளுக்கு ரசிகராயினர். விவசாயிகள் இல்லாத ஒரு சமூகம் வாழ முடியாது. இதை உணராமல் நாம் விவசாயிகளை ஏறக்குறைய அழிந்துவரும் இனமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை உடனடியாக மாற்றி அமைத்தாக வேண்டும். நம் சமூகத்தின் முக்கிய அங்கமாக வேளாண் குடிமக்களே இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் வேளாண்மையை முன்னிலைப்படுத்தும் சூழல் பார்வையோடு கட்டமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக அரசின் அனைத்துக் கொள்கை களும் வேளாண்மையை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே அமைய வேண்டும். வேளாண் துறையை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் நமது மண்ணில் இடமில்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். விளை நிலங்களை, நீர் நிலைகளை, சுற்றுச்சூழலை எதன் பொருட்டும் சீர்குலைக்க மாட்டோம் என்று அரசும், குடிமைச் சமூகமும் உறுதி ஏற்க வேண்டும். இதுவரை சீர்குலைக்கப்பட்ட விளைநிலங்களை, நீர்நிலைகளை, சுற்றுச்சூழலை மீட்பதற்கான வழி வகைகளை உருவாக்க வேண்டும். முழுவதும் சுய சார்பான வேளாண்மை முறைகளை உருவாக்க வேண்டும். வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கும், நில உரிமை இல்லாத விவசாயக் கூலிகளுக்கும் வருவாய் உத்தர வாதம் அளிக்கும் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் தமக்குத் தேவைப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் விவசாயி களிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு முன்வரவேண்டும். உணவுப் பொருட்களை அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, பெரும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்க மாட்டோம் என்று நுகர்வோர்கள் உறுதி ஏற்க வேண்டும். தொடக்கக் கல்வியில் வேளாண்மைப் பாடங்கள் கட்டாயமாக இடம் பெற வேண்டும். வேளாண் விளை பொருட்களை நேரடியாக உழவர்களிடம் வாங்கி பயன்படுத்தும் கலாசாரத்திற்கு அனைவரும் மாற வேண்டும். விவசாயிகளை உடனடியாக பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினையும், விவசாயம் சாராத மக்களை உரிய காலத்தில் பாதிக்கும். இதை உணர்தலும், விவசாயிகள் தொடர்பான பிரசினைகளில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்துதலும் மிகவும் இன்றியமையாத பணிகளாகும். இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே விவசாயிகளின் அகால மரணங்களை தடுக்க முடியும். இது விவசாயிகளின் அகால மரணத்தை மட்டும் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல. ஒரு சமூகமே அகால மரணம் அடைவதை தடுப்பதற்கான வழிமுறைகளாகும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments