CRZ விதி மீறிய Radisson கடற்கரை சொகுசு விடுதிக்கு 10கோடி அபராதம்.

மாமல்லபுரத்தில் கடற்கரை ஒழுங்காற்று  விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட், கடற்கரை ஒழுங்காற்று மண்டல  விதிகளுக்கு முரணாக எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன்  என்பவர், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி  இல்லாமலும், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, கடற்கரை ஒழுங்காற்று மண்டல  அனுமதி பெறாமல், மாமல்லபுரம் கடற்கரையில் ராடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100.37 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட்ட கட்டிடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் எனவும். இல்லையென்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதுப்புக்கு 10 கோடி ரூபாயை இழப்பீடாக, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையிலிருந்து 200-500 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக ரிசார்ட் நிர்வாகத்துக்கு அனுமதியளித்த தீர்ப்பாயம், அதுவரை அந்த கட்டுமானங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவில்  தெளிவுபடுத்தியுள்ளது.

Judgement

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments