அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு – NOAA எச்சரிக்கை

வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வின் அளவு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் NOAA (National Ocean and Atmosphere Administration)  தெரிவித்துள்ளது. மாதந்தோறும் வளிமண்டலத்தில் கார்பனின் அளவை NOAA மையம் கணக்கிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளாக அம்மையம் செயல்பட்டு வருகிறது.  மே மாதம் கார்பனின் அளவு சுமார் 419 ppm ஆக பதிவாகியிருந்தது, அம்மையம் தொடங்கிய 63 ஆண்டுகளில் இஅதிக அளவிலான கார்பன் பதிவாவது இதுவே முதல் முறை என NOAA ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் மற்றும் ‘லா-நினா’ (La-Nina) எனும் வானிலை நிகழ்வின் காரணமாக கார்பன் அளவு 7% கடந்த ஆண்டு குறைந்த போதிலும், 2019ஆம் ஆண்டின் சராசரி கார்பன் உமிழ்வின் அளவை விட 2020ஆம் ஆண்டு டிசம்பரில் கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் முடக்கிவிட்டது என நாம் எண்ணிக்கொண்டு இருக்கையில், கொரோனாவை  விட பேராபத்தாக கார்பன் உமிழ்வு உருப்பெற்றுக் வருவதை நாம் கவனிக்க தவறுகிறோம்.

 

 

கார்பனின் அளவு அதிகரிக்க, புதை படிம எரிபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதே முக்கிய காரணியாக, உள்ளதென NOAA  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள்,  காடழிப்பு, தொழிற்சாலைகளில் வெளியேறும் உமிழ்வுகளும்  காரணமாக  உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தொழிற்புரட்சி காலக்கட்டத்தில் இருந்து புதைமடிம எரிபொருட்கள் பயன்ப்படுத்தப்படுகிறது. அப்போது தொடங்கி சுமார் 200 ஆண்டுகள் வரை கார்பன் அளவு வளிமண்டலத்தில் 25% சதவிகிதமாகவும், அடுத்த 35 ஆண்டுகளில் 50% சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், தொடர்ந்து நாம் புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவோமானால் அடுத்த பத்து ஆண்டிகளிலோ அல்லது பதினைந்து ஆண்டுகளிலோ 75% சதவிகிதத்தை அடைந்திடுவோம்.

2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திட்டு முழுமையாக ஐந்தரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசுகள் கார்பன் உமிழ்வையோ அல்ல பிற பசுமை இல்ல வாயு உமிழ்வுகளையோ குறைக்க பெரிதும் திணறிக்கொண்டு வருகிறது. உலகில்  அதிக அளவு கார்பனை வெளியேற்றும் நாடான சீனா 2060 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வின் அளவை கட்டுக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்திருக்கின்றது. இரண்டாவது அதிக அளவு கார்பன் வெளியேற்றும் அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து, ஒப்பந்தத்தின் இலக்கை 2050க்குள் அடைவோம் என உறுதி ஏற்றுள்ளது. உமிழ்வின் அளவை குறைக்க அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்துவரும் நிலையில் கார்பனை வெளிவேற்றுவதில் மூன்றாம் பெரிய நாடான இந்தியா கொண்டுவரும் செயல் திட்டங்கள் பாரிஸ் ஒப்பந்தத்திற்கு முரணாக இருப்பது கவலையளிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தி செலவு குறைவு என்றாலும் புதைபடிம அளவிற்கே செயல்படும் திறன் கொண்டவை. சரியான திட்டங்களோடு, செயல்படுவோமானால் பெரும் பேரழிவை தடுக்க முடியும் என NOAAவின் மூத்தஆராய்ச்சியாளர் பீட்டர் டான்ஸ் தெரிவித்துள்ளார்.

  • லோகேஷ் பார்த்திபன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments