எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!

0 Comments

      2050 ஆம் ஆண்டின் ஏப்ரல் 21 ஆம் நாள், இரவு பதினோரு மணி. மேஜையில் வெற்றுக் காகிதங்களுடனும் கையில் பேனாவுடனும் இனம்புரியாத உணர்வுகளுடன் அமர்ந்திருக்கிறேன். 2020 தொடங்கிக் கடந்த 30 வருடங்களின் கொந்தளிப்பான நினைவுகள் எனக்குள் என்னன்னவோ செய்துகொண்டிருக்கின்றன. நாளை புவிநாள். ஆறாம் பேரழிவிற்கு முன்னான ‘ஆந்திரோபோசீன்’ காலகட்டத்தின் பிற்பகுதியிலேயே புவிநாள் அறிமுகமானதெனினும் அப்போது அது பெரிதாய் எங்கும் கவனம் பெறவில்லை. ஆனால், தொடர்ந்து நீடித்த காலநிலை பேரழிவுகள் மனிதர்கள் கோலோச்சிய ஆந்திரோபோசீன் […]

ட்ராஜன் குதிரையும் கேரளத்து வாத்தும்! – ஃப்ளூ வைரஸ்கள் எனும் 85 வருட மர்மம்!

0 Comments

”விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களை விவாதிப்பது போல நான் சளிக்காய்ச்சல் (Influenza) வைரஸ்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை. காரணம், அவை முக்கியமற்றவை என்பதால் அல்ல.மாறாக அவை மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதீத சிக்கலானவை, 1918-1919ல் ஏற்பட்ட சளிக்காய்ச்சல் தொற்றால் 50 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள். ஆனால் அது வைரஸ்தான் என்று கண்டறிய அப்போது போதுமான அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு முறை இந்த வைரஸ்கள் மனிதச்சமூகத்தின் மீது படையெடுத்துவிட்டன. 1957ல் 2 மில்லியன் […]

கோவை – பாலக்காடு இடையே கடந்த 5 ஆண்டுகளில் 8 யானைகள் ரயில் மோதி இறப்பு

0 Comments

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை – பாலக்காடு வழிதடத்தில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது குறித்து தென்னக ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் அளித்த பதிலில், கடந்த 2016 முதல் 2021 வரை 8 யானைகள் ரயிலில் அடிபட்டு பலியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ‘பி’ லைனை ‘ஏ’ […]

கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினாராக சென்னை உயர்நீதிமன்றம் தடை

0 Comments

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக  தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற  கிரிஜா வைத்தியநாதனை நியமித்த மத்திய அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வருமா ஆகிய மூவரை நியமித்து அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. […]

CRZ விதி மீறிய Radisson கடற்கரை சொகுசு விடுதிக்கு 10கோடி அபராதம்.

0 Comments

மாமல்லபுரத்தில் கடற்கரை ஒழுங்காற்று  விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட், கடற்கரை ஒழுங்காற்று மண்டல  விதிகளுக்கு முரணாக எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன்  என்பவர், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி  இல்லாமலும், கடற்கரையில் […]

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும்

0 Comments

  “TamilNadu Environmental Report Card 2021″ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் கால நிலை மாற்றம் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. உலகளவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்கள் இடத்தில் பெரும் அளவு உள்ளது. வளர்ந்த நாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு சூழலியல் சார்ந்த பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சமீபகாலமாக […]

உலகம் வியந்து போற்றும் , மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்

0 Comments

    சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம்  செய்து , வியக்கத்தக்க வகையில் அதில் வெற்றியும் கண்ட மரங்களின் தாய் என நம் எல்லோராலும் போற்றப்படுகிற , அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்த […]

சூழலியல் பார்வையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

0 Comments

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய  சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  குறித்துத் தங்களுடைய  நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு,  சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த  நிலையான  வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சூழலியல் சார்ந்து கட்சிகள்     தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டிய  பல்வேறுகோரிக்கைகளை “சுற்றுச்சூழல் தேர்தல்அறிக்கை 2021” யை தயார் செய்து      தமிழ்நாட்டின் அநேக கட்சிகளுக்குப்  பூவுலகின்  நண்பர்கள் குழு வழங்கியிருந்தது. தற்போது  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது  தேர்தல்  அறிக்கையை  வெளியிட்டுள்ளனர்.  நான்கு கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் அறிக்கையில் சுற்றுச்சூழல் குறித்து இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்த எங்கள் விமர்சனத்தை இங்கு முன்வைத்துள்ளோம். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுகவின் 49 பக்கம் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கையைச் சுற்றுச்சூழல் அடிப்படையில் பார்த்தோமானால் இதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு அறிக்கை என்றுதான் குறிப்பிட முடியும். இந்த அறிக்கையில் உள்ள மிக  முக்கியமான சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு அறிவிப்பு என்னவென்றால் “தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பாசன  வசதி பெற வழிவகைச் செய்யப்படும்” என்று கூறப்பட்டிருப்பதே ஆகும். நதிநீர்  இணைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர அறிவிப்பு மட்டுமே என்று நாம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறோம். நதிகளை இணைப்பதால் ஏற்படும் பல்லுயிர்  பாதிப்புகள்  குறித்துப்பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகள் வந்துவிட்ட நிலையில் தொடர்ந்துஎவ்வித    தரவுகளும் ஆய்வுகளும் இல்லாமல் வெள்ளநீரை உபரிநீராகக் கருதி  நதிகளை இணைப்பது பெரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். உரிய ஆய்வுகளின்றி ஏற்கனவே தொடங்கப்பட்ட கருமேனியாறு – நம்பியாறு – தாமிரபரணி ஆறுகள் இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் அடிப்படையில் பல  எதிர்ப்புகளைச்          […]

இந்திய கடற்கரைக்கு வந்த பேராபத்து. CRZ விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு.

0 Comments

  உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்படும் திட்டங்களை இழப்பீடு மட்டும் செலுத்தி விட்டு தொடரலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவு. கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு Coastal Regulatory Zone Notification 2011ன் கீழ் உரிய முன் அனுமதி பெறுவது அவசியமாகும். இதன் மூலம் கடற்கரையை ஒட்டிய மணல்மேடுகள், நதிகள், முகத்துவாரங்கள், கழிமுகங்கள், ஊற்றுகள், அலையாத்திக் காடுகள் போன்றவற்றின் பல்லுயிர்த்தன்மை பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவில் உள்ள சட்டங்களில் அதிக […]

தொழிற்சாலை மாசு கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் தென் மாநிலங்களுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

0 Comments

OCEMS எனப்படும் மாசு கண்காணிப்பு அமைப்பை தென் மாநிலங்கள் முறையாக பயன்படுத்தக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   Paryavaran Suraksha Samiti v. Union of India 2017 வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “ஒவ்வொரு மாநில மாசு கட்டுப்பாடு வாரியமும் தங்கள் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு/கழிவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் OCEMS-Online Continuous Emission/Effluent Monitoring Sensors ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தது.OCEMS என்பது இணையம் வாயிலாக மாநிலத்தில் […]