சிப்காட் தொழிற்பேட்டை மாசுவால் உயிரிழப்புகள் அதிகரிப்பா? ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

0 Comments

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆராய 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடலூரில் 1985ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இரசாயனத் தொழிற்சாலைகள் அங்கு செயல்படுகின்றன. சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக பல நோய்கள் வந்ததையடுத்து அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து RTI மூலம் 2014ல் பெற்ற தகவலில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள […]

சென்னை – பெங்களூர் விரைவுச்சாலை. பாதிக்கப்படப்போகும் 10 ஆயிரம் மரங்கள். மார்ச் மாதம் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு..

0 Comments

  சென்னை பெங்களூர் இடையே புதிய விரைவுச்சாலை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற மார்ச் 13 மற்றும் 16 தேதிகளில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சாலையானது, சென்னையின் எல்லைப்பகுதியாக இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருபாண்டியூரில் தொடங்கி கிழக்கு […]

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? – அறிக்கை

0 Comments

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? மித்திவிர்தியைப் போல கூடங்குளம் விரிவாக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி, குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இம்ரான் கடிவால் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தியில் அமைய திட்டமிடப்பட்டிருந்த 6 அலகுகளை கொண்ட அணு உலை பூங்கா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, “புகுஷிமா விபத்திற்கு பிறகு அணுவுலைகளால் […]

கடல் ஆமைகள் பாதுகாப்பிற்கான மத்திய அரசின் செயல் திட்டம் அதானியிடமிருந்து ஆமைகளை காக்குமா?

0 Comments

இந்திய கடல் ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் National Marine Turtle Action Plan (2021-2026) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய கடற்பகுதியில் சித்தாமை (அ) பங்குனி ஆமை Olive Ridley (Lepidochelys olivacea), பேராமை(Green Turtle), அழுங்கு ஆமை(Hawksbill), பெருந்தலை ஆமை( logger head), தோணியாமை (அ) ஏழு வரி ஆமை( Leatherback turtle) ஆகிய 5 வகையான ஆமைகள் காணப்படுகின்றன. இந்த 5 வகையான ஆமைகளும் வனவுயிர் பாதுகாப்புச் சட்டம் 1977 கீழ் ஒன்றாம் […]

”பிழைத்திருக்க யாசிக்கும் பேருயிர்கள்” ஓசை காளிதாசன் உரை

0 Comments

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் விடுதி உரிமையாளர்கள் காட்டு யானை ஒன்றிற்கு தீயிட்ட சம்பவம் 2021 ஜனவரி மாதம் நடந்தது. இந்த கொடூரம் குறித்து ஓசை அமைப்பின் காளிதாசன் ”பிழைத்திருக்க யாசிக்கும் பேருயிர்கள்” என்கிற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் முகநூல் பக்கத்தில் ஜனவரி 23ஆம் தேதி ஆற்றிய உரை வணக்கம்!  பூவுலகின்  நண்பர்களின்  இந்த முகநூல் பக்கத்தில் ஒரு பேருயிரைப்பற்றி பேசுகின்ற வாய்ப்பிற்காக, தோழர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மிகக் கொடூரமான நிகழ்வு நடந்த […]

அதிகரிக்கும் யானை – மனித மோதல்; 5 ஆண்டுகளில் 2,529 பேர் உயிரிழப்பு

0 Comments

  யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. அப்படி யானைகள் வெளியேறும்போது யானை – மனித மோதல் நடக்கிறது. இதில் யானைகளால் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் மனிதர்கள் யானைகளை துன்புறுத்தி துரத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கு வங்க எம்.பி. ராஜூ பிஸ்தா இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு […]

பற்றியெறிகிறது உலகத்தின் நுரையீரல்

0 Comments

கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல. கடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில், சுமார் 1,345 சதுர கிலோமீட்டர் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டன, அளவில் இது டோக்கியோ நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன.   இப்போது, கடந்த இரண்டு வாரங்களாக அமேசான் காடுகள் பற்றியெரிகின்றன, கடந்த 2018ஆம் ஆண்டு இதே மாதத்தில் […]

கொதிக்கும் பெருடங்கடல்கள்.. அதிகரிக்கும் பேரிடர்கள்… இந்தியாவின் முதல் காலநிலை அறிக்கை சொல்வது என்ன?

0 Comments

பூமியின் காலநிலை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றது. அதற்கான அடிப்படைக் காரணம், மனித இனம் மேற்கொள்கின்ற இயற்கைக்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகள்தாம். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. வளிமண்டலத்தில் தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களின் விகிதத்தை கூட்டிக் கொண்டேயிருக்கின்றோம். அதன் விளைவாக வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சியிலிருந்து அடி ஆழம் வரை வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படுகின்ற தாக்கத்தைக் கண்கூடாக நம்மால் காணமுடிகின்றது. உடல் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வியல் தரம், பொருளாதாரம் என்று அனைத்தையுமே […]

விவசாயச் சட்டங்கள் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

0 Comments

        ESSENTIAL COMMODITIES ACT (AMENDMENT) BILL 2020   “கார்ப்பரேட்டுகளுக்கான உணவு பதுக்கல் சுதந்திரம்”   அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.   அரசாங்கத்தால் சொல்லப்பட்ட காரணம்: விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும், அறுவடைக்குப் பிந்தைய விவசாய உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதுமே வெளிப்படையாகச் சொல்லப்பட்ட காரணங்கள்.   சட்டம் என்ன செய்கிறது? புதுச்சட்டம் “அசாதாரணச் சூழ்நிலைகளை”த் தவிர்த்து, அனைத்து உணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழங்கும் வாய்ப்பை நீக்கியுள்ளது. […]

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்

0 Comments

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேசம் முதல் தமிழ்நாடு வரை அதிகம் பேசப்பட்ட வேதிப்பொருள் அம்மோனியும் நைட்ரேட்..காரணம் லெபனான் விபத்து.. ஆகஸ்ட்4ம் தேதி லெபனான் தலைநகர் பீருட்டில் உள்ள துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த2750 டன்அமோனியம் நைட்ரேட்பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.  இந்த விபத்தில் 220 பேர் உயிரிழந்தும், 5000 பேர் காயமடைந்தும், சுமார்3லட்சம் பேர் வீடிழந்தும் நிர்கதியாக்கபட்டனர்.   உலகில்அம்மோனியம்நைட்ரேட் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. 1947 ம் ஆண்டு டெக்சாஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் […]