“The Public Trust Doctrine: The concept of public trusteeship may be accepted as a basic principle for the protection of natural resources of the land and sea. The Public Trust Doctrine (which, found its way in the ancient Roman Empire) primarily rests on the principle that certain resources like air, sea, water and the forests have such a great importance to the people as a whole that it would be wholly unjustified to make them a subject of private ownership. The said resources being a gift of nature should be made freely available to everyone irrespective of their status in life. The doctrine enjoins upon the Government and its instrumentalities to protect the resources for the enjoyment of the general public.”
- Justice Dalveer Bhandari (Karnataka Industrial Area Development Board vs Sri C.Kenchappa)
1948ம் ஆண்டு இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவினால் இறுதியாக்கப்பட்ட இந்திய அரசமைப்பின் முன்வரைவை அரசியல் நிர்ணய சபையின் தலைவருக்கு குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் வழங்கினார். இந்த முன்வரைவு அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டுத் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அரசமைப்புக்கான முன்வரைவில் இயற்கைவளம் மீதான உரிமை குறித்தான பிரிவுகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக முன்வரைவில் உள்ள பிரிவு 31, இயற்கை வளம் மீதான மக்களின் உரிமை குறித்துப் பேசுகிறது.
பிரிவு 31 “அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் வழிமுறைகள்” பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்தப் பிரிவில் உள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சி நெறிக்கு அடிப்படையாக அமையும், மேலும், சட்டங்கள் இயற்றுகையில் இந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது அரசின் கடமையாகும். இதனைப் பிரிவு 29 உறுதி செய்கிறது.
பிரிவு 31 கூறுவது:
“31. குறிப்பாக, பின்வருவனவற்றை எய்திடுமாறு அரசு தன் கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும் –
(ii) சமூகத்தின் முக்கிய மூலவளங்களின் உடைமையும் மற்றும் கட்டுப்பாடும், பொது நன்மையைச் சார்ந்து சிறந்த முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் (that the ownership and control of the material resources of the community are so distributed as best to sub serve the common good);
(iii) பொருளியல் முறைமையின் செயற்பாட்டினால் செல்வ வளமும் உற்பத்திச்சாதனங்களும், பொதுநலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்துவிடாது இருத்தல் (that the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment)”
இந்தப் பிரிவு மீது அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டது. சில திருத்தங்களும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாகப் பேராசியர் ஷா, இயற்கை வளங்கள் ஏகபோகமாக யாரிடமும் முடங்கி விடக் கூடாது என்னும் அடிப்படையில் இரண்டு திருத்தங்களை முன்வைத்தார். மேலும், சோசலிச கொள்கையின் அடிப்படையில் இயற்கை வளம் குறித்த உரிமைகள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்னும் வகையில் அந்தத் திருத்தங்கள் இருந்தன. அவர் முன்வைத்த திருத்தங்கள்:
“(ii) that the ownership, control and management of the natural resources of the country in the shape of mines and mineral wealth, forests, rivers and flowing waters as well as in the shape of the seas along the coast of the country shall be vested in and belong to the country collectively and shall be exploited and developed on behalf of the community by the State as represented by the Central or Provincial Governments or local governing authority or statutory corporation as may be provided for in each case by Act of Parliament;
(iii) that there shall be no private monopolies in any form of production of material wealth, social service, or public utilities nor shall there be any concentration of means of production and distribution in private hands and the State shall adopt every means to prevent such concentration or accumulation.”
அம்பேத்கர், இந்த திருத்தங்களுக்கு, 22 நவம்பர் 1948ம் ஆண்டு அரசமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் இவ்வாறு பதில் அளித்தார்:
“அவருடைய இதர திருத்தங்களைப் பொறுத்த வரையில், அதாவது 31 வது விதியின் உபவிதிகள் (ii) மற்றும் (iii) ஆகியவைகளுக்குப் பதிலாக அவருடைய உபபிரிவுகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரையில் நான் கூறுவது எல்லாம் இதுதான்: பேராசியர் ஷா தம்முடைய சொந்த உப விதிகளைப் பயன்படுத்தி அடைய விரும்புவதை இப்போதுள்ள வாசகத்தால் அடைய முடியாது என்பதை நிரூபிப்பாரேயானால் அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொள்ள நான் முற்றிலும் தயாராக உள்ளேன். என்னுடைய பார்வையில், அரசியல் சாசன வரைவில் பயன்படுத்தப்பட்ட வாசகம் பேராசிரியர் ஷா கூறியுள்ள குறிப்பிட்ட நோக்கங்களைப் பெருமளவில் பிரிதிபலிக்கும் விரிவான வாசகமாகும். ஒரு குறிப்பிட்ட கருத்துப்பாங்கு நோக்கத்திற்காக பொதுவான வாசகமாக வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட உபவிதிகளை மாற்றாகப் பயன்படுத்துவதற்குத் தேவை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது திருத்தங்களை நான் எதிர்க்கிறேன்.”
அதாவது, இயற்கை வளங்கள் மீதான உரிமைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவும், இயற்கை வளங்கள் மீதான ஏகபோக உரிமையை தடுக்கவும் ஏற்கனவே உள்ள பிரிவுகள் போதுமானது என்று அம்பேத்கர் கூறுகிறார். பேராசியர் ஷாவின் அனைத்து கருத்துகளையும் ஏற்கவும் செய்கிறார்.
“நெறிமுறைக் கோட்பாடுகளில் சோசலிச நோக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது” என்று கூறும் அம்பேத்கர், “இந்த நெறிமுறைகள் மூலம் தான் சட்டமன்றமும், நிருவாகமும் அவற்றின் கொள்கையை வகுத்துக் கொள்ள” வேண்டும் என்றும் கூறுகிறார். (CAD Part VII, Nov 15, 1948, p:403)
மேலும், “இப்பத்தியில் இக்கொள்கைகளை உண்மையிலேயே, சிலர் கூறியதுபோல் மேலெழுந்த வாரியான அறிவிப்புகளாக புகுத்துவது நோக்கமல்ல. வருங்காலத்தில் சட்டமன்றமும், நிருவாகத் துறையும் இப்பகுதியில் சட்டமாக்கப்பட்ட இக்கொள்கைகளுக்கு உதட்டளவில் மட்டும் மரியாதை செலுத்தக்கூடாது என்பது அரசியல் நிர்ணய சபையின் நோக்கமாகும். ஆனால் இந்நாட்டின் நிருவாகத்திற்காக இப்போதிருந்து மேற்கொள்ளப்படும் சட்டமியற்றுதல், நிருவாகம் ஆகிய அனைத்து செயல்களுக்கும் இவை அஸ்திவாரமாக அமைய வேண்டும் என்பதுதான் அவையின் நோக்கமாகும்” என்று கூறுகிறார். (CAD Part VII, Nov 19, 1948, p:476)
“எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டமும் சர்வாதிகாரத்தை எவ்வித வழிமுறையிலும் நிறுவுவதை நாங்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகத்தான் இந்த அரசியலமைப்பில் ஒரு அரசியல் ஜனநாயக முறையை அமைத்திருக்கிறோம். அரசியல் ஜனநாயகத்தை நாம் அமைத்திடும்போது, நமது இலட்சியமாக பொருளாதார ஜனநாயகத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு சில மக்கள் பிரிவினர் அதிகார ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவக்கூடிய சாதனமாக இதனை அமைக்க நாம் விரும்பவில்லை. அரசமைப்போருக்கு முன் ஓர் இலட்சியப் பார்வையினை அளித்திடவும் அரசயலமைப்புச் சட்டம் விரும்புகிறது. அந்த இலட்சியம், பொருளாதார இலட்சியமாகும்” என்று கூறும் அம்பேத்கர், இந்த இலட்சியத்தை “நெறிமுறைக் கோட்பாடுகள்” மூலம் அடையலாம் என்று கூறுகிறார்: “நம்முடைய பொருளாதார இலட்சியத்திற்கு முறை என்ன?, நம்முடைய சமுதாய அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது பற்றி சிந்தித்திடாது, அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படும் பலவகை சாதனங்கள் மூலம் ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் சாதாரணமாக அமையப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவேதான் நெறிமுறைக் கோட்பாடுகளை வேண்டுமென்றே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துள்ளோம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் நமக்கு இரண்டு இலக்குகள் உண்டு. முதலாவதாக, அரசியல் ஜனநாயகத்தை அமைப்பது. இரண்டாவதாக, பொருளாதார ஜனநாயகமே நமது இலட்சியம் என்பதற்கு ஏற்பாடு செய்வது, அதாவது ஆட்சியை ஏற்கும் எந்த அரசும் பொருளாதார ஜனநாயகம் அமைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று நிர்ணயம் செய்வது.” (CAD Part VII, Nov 19, 1948, p:493)
இதில் பொருளாதார ஜனநாயகம் என்பது, இயற்கை வளம் மீதான மக்கள் உரிமையையும் உள்ளடங்கியதே. அதேபோல இயற்கை வளம் மீது யாரும் ஏகபோக உரிமை கொண்டாடாமல் தடுப்பதையும் உள்ளடக்கியதே.
அரசியல் ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் உள்ளடங்கிய ஜனநாயக குடியரசையே அம்பேத்கர் விரும்பினார். அரசமைப்பு முன்வரைவில் இருந்த “சுதந்திரக் குடியரசு” என்பதை “ஜனநாயகக் குடியராக” மாற்றினார். ஜனநாயகக் குடியரசு என்பது அரசியல் ஜனநாயகம், பொருளாதார ஜனநாயகத்தை உள்ளடங்கியது என்று கூறுகிறார் அம்பேத்கர்.
உலகமயக் கொள்கையின் மூலம் பொருளாதார ஜனநாயக விரோதப் போக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளம், மண்வளம், மீன்வளம், கனிமவளம், எண்ணெய்வளம், பெட்ரோலியவளம் என அனைத்து வளங்களும் இன்று ஏகபோக உரிமையாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது. இது அரசமைப்பு விரோதப் போக்காகும்.
- மு.வெற்றிச்செல்வன்
ஆதார நூல்கள்: டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, பகுதி : 26, 27.
Sir.,
There is small Typographical error in the above article..,
U mentioned article 31 in DPSP but it starts with 36
It is 39 (b) distribution of wealth
39(c) prevention of concentration of wealth
Thanks for your comments sir!!. In the draft Constitution, it was Article 31 in which material resources are mentioned. Thereafter, in the final version, which was accepted by the Constitution Assembly, it was renumbered as Article 39.
I have mentioned about the debate happened on the draft constitution. Wherein it was Article 31.