உலகளவில் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. உலகின் மாம்பழ உற்பத்தியில் 54% இந்தியாவில் உற்பத்தி செய்யபடுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தினால் இந்த மாம்பழ உற்பத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவமழை முன்புபோல் தொடர்ச்சியாகவும் சீராகவும் இல்லாமல் கணிக்கமுடியாததாக மாறியுள்ளது.
இயல்பு வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக மாம்பழ உற்பத்தியானது பாதிப்படைந்து வருவதாக மாம்பழ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் காபர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் மாமரங்கள் பூக்கும் காலத்திலேயே வானிலையின் திடீர் மாற்றங்களால் பூக்கள் பாதிப்படைவதாக் குறிப்பிட்டார்.
இராஜேந்திர பிரசாத் மத்திய வேளான் பல்கழைக்கலகத்தை சேர்ந்த வேளான் வானிலை நிபுணர் அப்டுஸ் சட்டார் மாம்பழ உற்பத்தி பாதிப்படைந்தது குறித்து கூறுகையில் அதீத வெப்பம், அதீத மழை ஆகியவை கோடைகால பழங்களான மாம்பழம் மற்றும் லிச்சி போன்றவற்றின் உற்பத்தியைப் பாதிக்கின்றது. மேலும், அதிதீவிர மழை, எதிர்பாராத வெப்பம் மற்றும் வெப்பஅலைகள் ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பழங்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
பீகார் மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அசோக் மாமரத்தின் பூக்கள் வெப்பநிலை உயர்வை தாங்கமுடியாமல் உதிர்ந்துவிடுகிறன அல்லது வாடி விடுகின்றன என்கிறார். மாம்பழ உற்பத்தி மட்டுமல்ல அனைத்து விவசாய பயிர்களின் உற்பத்தியும் கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றத்தின் காரணமாக நடந்து வருகிறது. திடீர் இயற்கைப் பேரழிவுகளும் பருவகாலங்கலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் காலநிலை மாற்றமே காரணம். எனவே அதன் தொடர்ச்சியாகவே பயிர் உற்பத்தியும் பாதிக்கபடுகிறது.
பஞ்சாப், ஹரியானாவில் வெப்ப அலையின் காரணமாக கோதுமை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இந்தியாவின் எண்ணை வித்துகளில் முக்கியமான கடுகு வழக்கமாக வடஇந்தியாவில் ஹோலி பண்டிகை சமயத்தில் அறுவடை செய்யப்படும். ஆனால், இந்தமுறை பிப்ரவரி மாதத்திலேயே அறுவடை நடந்துள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தின் இடைபகுதியிலேயே வெப்ப அதிகரிப்பின் காரணமாக அறுவடை செய்யப்பட்டதால் கடுகு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறாக இந்தியா முழுவதிலுமே அதீத வானிலை மாற்றத்தால் பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் உணவு உற்பத்தி குறைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.
-செய்திப் பிரிவு