அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy and Research மதிப்பாய்வு செய்துள்ளது.
வெப்பச் செயல் திட்டங்கள் (HAPs) எனப்படுவது, உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளை எதிர்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முக்கியக் கொள்கைகள் அடங்கிய செயல்திட்டம் ஆகும்.
இந்தச் செயல் திட்டமானது, வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைக்க மாநில, மாவட்டம் மற்றும் நகர அரசாங்கத்துறைகள் எடுக்க வேண்டிய ஆயத்த நடவடிக்கைகளையும், பேரிடர் நடவடிக்கைகளையும் மற்றும் வெப்ப அலைகளுக்குப் பிந்தைய செயல்பாட்டு நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
வெப்பச் செயல் திட்டங்கள் குறித்த CPRஇன் புதிய ஆராய்ச்சி இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள 37 HAPகளை மதிப்பிட்டுள்ளது. ‘வெப்ப அலைகள் பாதிப்பிலிருந்து இந்தியா எவ்வாறு தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? வெப்ப அலைகளைச் சமாளிக்க நாடு எவ்வளவு தயாராக உள்ளது என்பவை குறித்து இந்த ஆய்வறிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறது.
இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்
1.பெரும்பாலான HAPகள் உள்ளூர் சூழல்களுக்காக உருவாக்கப்படவில்லை:
நாடு முழுவதும் உள்ள வெப்ப செயல்திட்டங்கள் பொதுவாக வறண்ட தீவிர வெப்பத்தில் கவனம் செலுத்தி உள்ளது. ஈரப்பதமான வெப்பம் மற்றும் வெம்மையான இரவுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. பெரும்பாலான HAPகள் தேசிய வெப்ப அலை வரம்புகளை ஏற்றுக் கொண்டுள்ளன, அவை உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் அபாயங்களுக்குப் பொருந்தாது. 37 HAPகளில் 10 மட்டுமே உள்ளூரில் குறிப்பிடப்பட்ட வெப்பநிலை வரம்புகளைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் உதவும் காலநிலை கணிப்புகள், தற்போதைய HAP களில் ஒருங்கிணைக்கவில்லை.
2. ஏறக்குறைய அனைத்து HAPகளும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தைக் கண்டறிந்து கவனம் செலுத்தத் தவறிவிட்டன;
இரண்டு HAP களில் மட்டுமே பாதிப்பு மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. (ஒரு நகரம், மாவட்டம் அல்லது மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் முறையான ஆய்வு). பெரும்பாலான HAPகள் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தைப் (முதியவர்கள், வெளிப்புறப் பணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள்) பட்டியலிட்டுள்ளது. இதில் முன்மொழிந்துள்ள பாதிக்கப்பட்ட சமூகத்திற்கானதாக இல்லை.
- HAPகளுக்குக் நிதி குறைவாக அளிக்கப்படுகின்றன:
37 HAPகளில் 3 மட்டுமே நிதி ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளன. எட்டு HAPகள் செயல்படுத்தும் துறைகளை நிதி சுய- ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்தி உள்ளது, இது தீவிரமான நிதிநெருக்கடியைக் குறிக்கிறது.
- HAPகள் பலவீனமான சட்ட அடிப்படைகளைக் கொண்டுள்ளன:
மதிப்பாய்வு செய்யப்பட்ட HAPகள் எதுவும் அவற்றின் அதிகாரத்தின் சட்ட மூலங்களைக் குறிப்பிடவில்லை. இது HAPஇன் அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் இணங்குவதற்கும் அதிகாரத்துவ ஊக்கங்களைக் குறைக்கிறது.
5. HAPகள் போதியளவு வெளிப்படைத்தன்மையற்றவை:
HAPகளின் தேசியத் தரவுதளம் எதுவும் இல்லை, மேலும் சில HAPகள் மட்டுமே இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த HAPகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறதா? மேலும், இது மதிப்பீட்டுத் தரவை அடிப்படையாகக் கொண்டதா என்பதும் தெளிவாகவில்லை.
“கடந்த பத்து ஆண்டுகளில் பல வெப்பச் செயல் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால். எங்கள் மதிப்பீடு எதிர்காலத் திட்டங்களில் நிரப்பப்பட வேண்டிய பல இடைவெளிகளை அடையாளப்படுத்துகிறது. நாம் அவ்வாறு செய்யாவிட்டால், தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைதல். விவசாயத்தில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள் (கடந்த ஆண்டு நமக்கு நேர்ந்தது போல), வெப்ப அலைகள் மற்றும் வெப்பமான நகரங்கள் ஆகியவற்றால் இந்தியா பொருளாதார இழப்பை சந்திக்கும்” என்கிறார் CPRஇன் அசோசியேட் ஃபெலோ மற்றும் இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் ஆதித்ய வலியாதன். .
CPRஇன் அறிக்கை HAPகள் நிதி ஆதாரங்களை – புதிய நிதிகளில் இருந்து அல்லது தற்போதுள்ள தேசிய மற்றும் மாநில கொள்கைகளுடன் செயல்பாட்டு திட்டங்களை இணைப்பதன் மூலம் – மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான அடிப்படையாக சுயாதீன மதிப்பீடுகளை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
”செயல்படுத்தத்தக்க HAPகள் இல்லாவிட்டால், இந்தியாவின் ஏழைகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உடல்நலம் மற்றும் வருமானம் இரண்டும் பாதிக்கப்படும்”என்கிறார் ஆதித்ய வலியாதன்.
Heat-Report_Final_27March-23– செய்திப் பிரிவு
Reading can be a powerful experience, and I was certainly taken aback by this blog. It had a unique tone and voice that was both engaging and dramatic. It was like a story being told, and I was captivated by the narrative. It was informative and thought-provoking, and I felt like I had learnt something new. I was also moved by the emotion that was conveyed, and it made me reflect on my own life. I thoroughly enjoyed this read and it has left a lasting impression on me. It was an enriching experience, and I am grateful for the time I spent reading this blog.
When it comes to uPVC pipes, Elitepipe Plastic Factory sets the bar high with their precision-engineered products that provide reliable and leak-free plumbing and irrigation solutions. Elitepipe Plastic Factory