ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; கிள்ளை பேரூராட்சியில் தீர்மானம்

கிள்ளை

கடலூர் மாவட்டத்துக்கு அருகே கடலுக்குள் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேசன் (Hindustan Oil Exploration Company Ltd)  எனும் தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி அந்நிறுவனம் தமிழ் நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஜூன் 1ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு எதிராக தமிழ் நாட்டில் பல கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை அடுத்த கிள்ளை பேரூராட்சியில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.

பரங்கிப்பேட்டை – கிள்ளை கடலோரப் பகுதியில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேசன் நிறுவனம் சார்பில் கடலில் 4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளது குறித்தும் அத்திட்டத்தால் மீனவர்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொட ர்ந்து, கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திப் பிரிவு
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted