இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகளின் தீவிரம்

heat wave

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது.   மார்ச் மாதமா? அல்லது மே மாதமா? என்கிற அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இயல்பான வெப்ப நிலையை விட 4.5℃ வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வரையறுத்துள்ளது (IMD). இந்தியாவைப் பொறுத்தவரை வெப்ப அலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெப்ப அலையின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. 2௦22-ம் ஆண்டின் வெப்ப அலையின் தாக்கம் முன்கூட்டியே துவங்கிவிட்டது என்றும்; கடுமையான வெப்ப அலையை எதிர்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், குஜாரத்தின் வடமேற்கு பகுதிகள் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் காணப்பட்டது. குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்தில் 11 நாட்கள் வெப்ப அலை வீசியுள்ளது. இந்தியாவின் குளிர் பிரதேசங்களான இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர் போன்ற பகுதிகளிலும் வெப்ப அலை வீசியுள்ளது. இதுகுறித்து இந்திய வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின்  (IITM) காலநிலை ஆராய்ச்சியாளர் கிருஷ்ணன் ஆங்கில இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “கடந்த காலங்களில் ஆங்காங்கே உணரப்பட்டு வந்த வெப்ப அலையின் தாக்கமும் அவை நிலவும் நாட்களின் எண்ணிக்கையும் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் IITM 1982- 2018 வரை இந்தியப் பெருங்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் ஆராய்ச்சி மேற்கொண்டதில் 15௦-க்கும் மேற்பட்ட வெப்ப அலைகள் அப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் அண்மையில் வெளியான IPCC அறிக்கையும் தெற்கு ஆசியா பகுதிகளில் கடும் வெப்ப அலையின் தாக்கம் தீவிரத் தன்மை கொண்டதாக  அதிகரிக்கும் என கூறியுள்ளது. அதிக அளவிலான மற்றும் தீவிரத் தன்மை கொண்ட வெப்ப அலைகள்; தீவிர மழைப் பொழிவு போன்ற பாதிப்புகள் இந்திய நிலப்பரப்பில் அதிகரிக்கும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– லோகேஷ் பார்த்திபன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments