தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆண்டு மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து வரும் போக்கு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கடந்த 2022ஆம் ஆண்டு நிலவிய வானிலை குறித்த விரிவான அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ல் ஆண்டு சராசரி வெப்பநிலையானது வேறுபாடுகள் அடிப்படையில் நீண்டகால சராசரி வெப்பநிலையைப் பொருத்தமட்டில் 2022ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் 1.17° C , இமாச்சலபிரதேசத்தில் 1.16° C, பஞ்சாபில் 1.05°C அதிகமாகவும் இருந்துள்ளது.
statewise_annual_climate_statement_press_CRS1901 – 2021 காலத்திற்கான வெப்பநிலையின் போக்கு பெரும்பான்மையான மாநிலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இமாச்சல பிரதேசத்தில் சராசரி வெப்ப நிலையானது 1.5° C, கோவாவில் 1.44° C, கேரளாவில் 1.05° C அதிகரித்துள்ளது. 2022ல் ஆண்டு சராசரி மழைப்பொழிவானது நீண்டகால சராசரி மழைப்பொழிவின் மாறுபாடுகளின் அடிப்படையில் கர்நாடகாவில் 138%, ராஜஸ்தானில் 136%, தெலங்கானாவில் 135% பதிவாகியுள்ளது. இயல்புக்கு மிகக் குறைவான மழையைப் பொருத்தமட்டில் மிசோரத்தில் 74%, மணிப்பூரில் 75%, பீகாரில் 77% பதிவாகியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டு மழைப்பொழிவின் போக்கு கோவாவில் 21.0mm, குஜராத்தில் 21.0mm, திரிபுராவில் 10.3mm ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், அருணாச்சல பிரதேசத்தில் 83mm, நாகாலாந்தில் 62mm, மணிப்பூரில் 22mm ஆக குறைந்துள்ளது. 2022ல் தீவிர வானிலை நிகழ்வுகளால் மட்டும் இந்தியாவில் 2,770 பேர் மரணமடைந்துள்ளனர். இடி மற்றும் மின்னல் தாக்கி 1,580 பேரும், வெள்ளம் மற்றும் தீவிரமழையில் சிக்கி 1,050 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்கள் வரிசையில் உத்தரபிரதேசம்(589), பீகார் (4180), அஸ்ஸாம் (258), மகாராஷ்டிரா (240), ஒடிஷா (194) முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு
2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சராசரி வெப்பநிலை 27.02° C ஆக இருந்துள்ளது. இது 1981 – 2010 காலத்திற்கான சராசரி வெப்பநிலையாகும். 1901ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் 2022ஆம் ஆண்டு 24வது இடத்தைப் பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டில் நிலவிய சராசரி அதிகபட்ச வெப்ப நிலையானது நீண்டகாலத்திற்கான சராசரி அதிகபட்ச வெப்பநிலையைவிட 0.1° C குறைவாகும். ஆண்டின் குறைந்தபட்ச வெப்பநிலையானது 0.2° C அதிகமாகும்.
Climate_Statement_2022_Tamil_Nadu_Draft2022ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 38ல் 3 மாவட்டங்களில் இயல்புக்கு மிக அதிகமான மழையும், 13 மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமான மழையும், 22 மாவட்டங்களில் இயல்பான மழையும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி வெப்பநிலையானது 1901 – 2021 காலத்தைப் பொருத்தமட்டில் 0.67° C /100yr உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிகபட்ச வெப்பநிலையானது +0.82° C /100yrs உயர்ந்துள்ளது.
1901 – 2021 காலத்திற்கான ஆண்டு மழைப்பொழிவு போக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆண்டு மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து வருகிறது.
2022ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடந்த இடி,மின்னல் தாக்குதலில் 21 பேர், சென்னை மற்றும் ஈரோட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் சிக்கி 3 பேர், மண்டோஸ் புயல் பாதிப்பில் 5 பேர் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– செய்திப் பிரிவு.