தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் ரூ 20 கோடி மதிப்பீட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஆவுளியா பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திலும் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்,