உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இதனிடையில் சர்வதேச அளவில் பல்வேறு அறிஞர்கள் பல தீர்வு நடவடிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். காலநிலை மாற்ற பாதிப்புகளை மட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டாலும் உள்ளூர் மக்களை ஈடுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இந்நிலையில் கிராமப்புற தன்னார்வலர்களுக்கான காலநிலை பயிற்சி திட்டத்தை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வடிவமைத்துள்ளது. இந்த பயிற்சி திட்டமானது, கிராமங்களில் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட ஆர்வமுள்ள தன்னார்வலர்க்கு திறனை மேம்படுத்துவதற்க்காக நடத்தப்படும் ஒரு நாள் பயிற்சி திட்டமாகும். அனுபவம் வாய்ந்த காலநிலை ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன், உள்ளூர் காலநிலை பிரச்சினைகளை ஆராய்ந்து, அப்பிரச்சனைக்கான நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை மேற்கொள்ள நோக்கமாகக் கொண்ட பயிற்சி திட்டமாகும்.
தேதி : 27-7-2024
இடம் : AICUF, நுங்கம்பாக்கம், சென்னை
விண்ணப்பிக்க: https://bit.ly/4cQPLXt
