‘Zoe’ வெப்ப அலைகளுக்கு வைக்கப்பட்ட முதல் பெயர்

Image:https://prometeosevilla.com/

புயல்களுக்கு பெயர் வைப்பதைப் போலவே வெப்ப அலைகளுக்கும் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன ஐரோப்பிய நாடுகள். சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளை நிலைகுலைய வைத்த வெப்ப அலைகளால் பலர் உயிரிழந்தனர், சாலைகள் உருகின, விமான ஓடுபாதைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் உருகியதால் பிரிட்டன் விமானப் படைக்கு சொந்தமான பிரைஸ் நார்டன் விமான தளத்தில் விமானங்கள் தரையிரங்க தடைவிதித்தது.

இதனைத் தொடர்ந்து புயல்களுக்கும் சூறாவளிக்கும் பெயர் சூட்டும் முறையில் வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டும் முடிவை ஸ்பெயின் நாடு தொடங்கி வைத்துள்ளது. அந்த நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு “Zoe” என்று பெயரிட்டு, வெப்ப அலைகளுக்கு பெயரிட்ட உலகின் முதல் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

மக்களிடம் வெப்ப அலைகள் வீசும் என்று சொல்வதற்கு பதிலாக, சோ வீசும் என்று சொன்னால் அதன் தாக்கத்தின் அளவை மக்கள் புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என உள்ளூர் வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டுவது என முடிவு கடந்த மாதம் எடுக்கப்பட்டது.
உள்ளூர் வானிலை அமைப்பான ProMeteo Sevilla மற்றும் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர்.

இதன்படி, காலநிலை நிபுணர்கள், வானிலை நிபுணர்கள் எல்லோரும் இணைந்து, கடந்த காலத்தில் பதிவான வெப்பம், அந்த காலகட்டத்தில் உள்ள வெப்பம், ஈரப்பதம் இவற்றை வைத்துக்கொண்டு வருகின்ற ஐந்து நாட்களில் வீச இருக்கும் வெப்ப அலைகளை கணித்து அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

காலநிலை மாற்றம் எல்லா இயற்கை நிகழ்வுகளையும் துரிதப்படுத்தவும், தீவிரமாக்கவும் செய்யும் என்று சொல்லப்பட்ட கணிப்புகள் நிகழ ஆரம்பித்துள்ளன. வெப்ப அலைகளுக்கு பெயர் வைக்க இந்திய வானிலை ஆய்வு மையமும் தயாராக வேண்டும்.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments