கோவை – பாலக்காடு இடையே கடந்த 5 ஆண்டுகளில் 8 யானைகள் ரயில் மோதி இறப்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை – பாலக்காடு வழிதடத்தில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது குறித்து தென்னக ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் அளித்த பதிலில், கடந்த 2016 முதல் 2021 வரை 8 யானைகள் ரயிலில் அடிபட்டு பலியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ‘பி’ லைனை ‘ஏ’ அருகில் மற்றும் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 இல் 6 கிமீ தூரத்திற்கு தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு 2கோடியே 43 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
2020 இல் அகலப்படுத்துவதற்கு 5 கிமீ தூரத்திற்கு ஒரு கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 7.5 கிமீ தூரத்திற்கு அகலப்படுத்துவதற்கு 3 கோடியே 10 லட்சம் அளவிற்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரயில் யானைகள் மீது மோதாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இரவு நேரத்தில் பி லைனில் ரயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பி லைனை ஏ லைன் அருகே அமைப்பது மட்டும் தான் நிரந்தர தீர்வு.
என்ஜின் டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வேக வரம்பினை எவ்வாறு கடை பிடிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் ஒரு கிமீ தூரம் டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருபுறமும் உள்ள செடிகொடிகள் வெட்டப்பட வேண்டும். ரயில் தூரத்தில் வரும்போதே யானைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சென்சார்கள் அமைக்கப்பட்டு ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.
ரயில்வே தெரிவித்துள்ள இந்த யானை பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்த படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள், பொதுமக்கள், தன்னாரவலர்கள் என அனைவரும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தும் நடைமுறைபடுத்தப்பட்டால் மட்டுமே ரயில் மோதி யானைகள் இறப்பது தடுக்கப்பட முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!