10வது நெல் திருவிழா

ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ் சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை… இவையெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள். இதேபோல சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வகை நெல் ரகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன என்பது நம்மில் பலருக்கும் நம்ப முடியாத வியப்பான செய்தியாக இருக்கலாம். மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய இந்தியாவின் தலை சிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஆர். ஹெச். ரிச்சாரியா என்பவர் விவசாயிகளிடமும்,
மலைவாழ் மக்களிடமும் நெருங்கி பழகி அவர் களிடமிருந்து சேமிக்கப்பட்ட சுமார் 19 ஆயிரம் நெல் வகைகளைக் கொண்ட மரபணு வங்கியை உருவாக்கினார். ஆனால் அன்றைய அரசியல் சூழ்நிலையாலும், எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோரின் நடவடிக்கைகளாலும் ரிச்சாரியா பழிவாங்கப்பட்டதோடு இந்தியாவிற்கு பொருத்த மில்லாத நெல் ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும் இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களும் களவாடப்பட்டன. எனினும் நம்மாழ்வார் போன்றவர்களின் முயற்சியால் நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை நமது விவசாயிகள் தொடர்ந்து செய்துவருகின்றனர். தமிழ்நாட்டில் கிரியேட் – நெல்லைக் காப்போம் அமைப்பும், கேரளாவின் தணல் அமைப்பும் சேர்ந்து திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் என்ற இடத்தில் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் சுமார் 150க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுத்து பாது காத்து வருகின்றனர். மேலும் தங்களுக்குள் அவற்றை பரிமாறிக்கொள்ளவும், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான விழா 10வது தேசிய நெல் திருவிழாவாக ஜூன் முதல் வாரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் ரகத்தில் இரண்டு கிலோ நெல் வழங்கப்படும். இதைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள் அடுத்த ஆண்டு விழாவுக்கு வரும்போது நான்கு கிலோ நெல்லாக திரும்பத்தர வேண்டும். இந்த நெல் ரகங்களை சாகுபடி செய்யும்போது ரசாயன உரங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தாமல் விவசாயிகள் அறுவடை செய்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல பகுதி களிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்துமிருந்தும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாய சங்கத்தலைவர்களும், விவசாய ஆர்வலர் களும் கலந்து கொண்டு தங்கள் கருத்து களையும் பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல பகுதி களிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்துமிருந்தும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாய சங்கத்தலைவர்களும், விவசாய ஆர்வலர் களும் கலந்து கொண்டு தங்கள் கருத்து களையும் பகிர்ந்து கொண்டனர்.

வேளாண்மை சார்ந்த அரசின் கொள்கைகள், விவசாயி களுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்று பேசியவர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு பலவித மானியம் அளிப்பதற்கு பதில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுத்தாலே விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவ்வாறு செய்வதன்மூலம் மட்டுமே விவசாயிகள் தற்கொலை என்ற சமூக அவலத்தை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த விழாவில் கணிசமான அளவில் தகவல்-தாழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நெல் ஜெயராமன் தெரிவித்தார். இந்த இளைஞர்களிடம் பேசியபோது, அவர்களில் பலர் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களில் இயற்கை வேளாண்மை செய்வதாக தெரிவித்தனர். இயற்கை மீதும், தங்கள் உடல் நலத்தின் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் நிறைந்திருந்த இந்த விழாவில் திரைப்பட கலைஞர்கள் ரோகிணி, விஷால் போன்றவர்களும் கலந்து கொண்டனர். இதுவரை வேளாண்மை சார்ந்த அரசுத் துறையினர் கலந்து கொண்ட இந்த நெல் திருவிழாவில் இந்த ஆண்டு விவசாயிகளின் விளைநிலங்களை பாதிப்படையச் செய்யும் எண்ணெய் மற்றும் நிலவாயு நிறுவனம் (ளிழிநிசி) போன்ற அரசு நிறுவனங்களும், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டதை விழா அரங்கில் இருந்த பதாகைகள் தெரிவித்தன. விவசாயிகளின் அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும் உள்ளான நிறுவனங்களை விவசாயிகள் பங்கெடுக்கும் நெல் திருவிழாவில் அனுமதித்தது, பெரும்பாலான விவசாயிகளிடம் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

 

நிறைகளும், குறைகளும்

சம்பத்குமார், கேஷ்வர்

இதையும் படிங்க.!