3 ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Elephants
Image: PTI

இந்தியா முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அருகிவரும் உயிரினங்களை கடத்துதல் மற்றும் வேட்டை தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2,054 வழக்குகள் பதியப்பட்டு 3,836 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

222 யானைகள் மின்சார வேலிகளில் சிக்கியும், 47 யானைகள் ரயில் மோதியும், 29 யானைகள் வேட்டையாடப்பட்டும், 11 யானைகள் விஷம் வைக்கப்பட்டும் கொல்லப்பட்டதாக இணையமைச்சர் தனது எழுத்துப்பூர்வ பதிலறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trafficking

புலிகளைப் பொருத்தமட்டில் கடந்த மூன்றாண்டுகளில் 58 புலிகள் வேட்டைக்காக கொல்லப்பட்டதாக தெரிவித்த இணையமைச்சர் அருகிவரும் உயிரினங்களை கடத்தும் சமபவங்களைத் தடுக்க WCCB தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments