மேகங்கள், மாசு, கோடை மழை

ரியான் ஈஸ்ட்மேன் | தமிழில்: ஜீவா 

வளிமண்டலத்தில் உள்ள காற்றின் இயக்கத்தை அதிகப்படுத்தும் அளவுக்கு நிலத்தில் வெப்பநிலை உருவாகும்போது இந்தியாவில் கோடை பருவமழை துவங்கும். அரேபியக் கடலில் உருவாகும் குளிர்ச்சியான, ஈரப்பதமான காற்றும், வெப்பத்துடன் மோதி இந்த சுழற்சியை புரிகிறது. வளிமண்டலத்தில் உள்ள சிறுதுகள்கள் அதிகரிக்கும்போது நிலத்தின் மேற்பரப்பை கமழும் சூரிய வெளிச்சத்தை உறிஞ்சி தேவையான மேற்பரப்பை அடையும், வெப்பத்தின் அளவு குறையும். இது, மழையை உருவாக்கும் காற்றின் அதிவேக இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும். தற்போதைய மாசுபட்ட சுற்றுச்சூழலில் உருவாகும் மேகங்களால் மழையாக உருவாகுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இந்த மேகங்கள் புவியின் மேற்பரப்பை குளிரச்செய்கிறது. இந்தியாவில் விவசாயம் குறித்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால், உலகளவில் பல நிறுவனங்கள் இத்தகைய ஆய்வுகளை திறன்மிக்க கணினிகள், மேம்பட்ட ஆய்வு முறைகளின் மூலம் இந்த வளிமண்டலத்தில் நொடி ஒன்றுக்கு தோன்றும் பில்லியன் கணக்கிலான நுண்துகள்கள் குறித்து ஆய்வு செய்திருக்கின்றன. மேகங்களில் நிகழும் இத்தகைய நுண் துகள்களின் செயல்கள், எப்படி மாசுவின் வகைக்கு ஏற்ப மேகங்களின் வகையும் மாறுகின்றன என்பதிலும் நீண்ட கால ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வலுவான பருவமழை, மாசுபாடு அதிகரிப்பு இவற்றுடன் தொடர்புடைய மேகங்களின் வகைகள் குறித்த அவதானிப்புகளை இந்திய வானிலை விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர். இந்த அவதானிப்புகளின் எண்ணிக்கை, தரம், நிலைத்தன்மை ஆகியவை மேகங்கள் குறித்த பெரும் தகவல்களுக்கு பங்களித்திருக்கின்றன. இந்த தகவல்கள் பல தசாப்தங்களாக உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர்ச்சியான உற்றுநோக்கல், புள்ளிவிவர பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் கிடைத்த முடிவுகளாகும். இந்தியாவில் மழைக்காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு உலகளவில்  வானிலை ஏற்படுத்தும் அலைகளை மாற்றுவதற்கு போதுமான காரணி. மற்ற வெப்ப மண்டல விளைவுகளும் குறிப்பிடத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய வானிலை மையங்கள் மற்றும் மேகங்களை உற்றுநோக்கும் செயற்கைக் கோள்கள் ஆகியவை மூலம் இந்தியாவின் பருவமழை மட்டுமே, மற்ற ஆறு கண்டங்களில் நிலவும் மேகமூட்டங்களுடன் தொடர்புடையது எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மழை காலத்திய மேகங்கள், காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுக்கு எப்படி முக்கிய கருவியாக விளங்குகிறது என்பதைக் காட்டுகிறது. நடு அட்சரேகைகளில் வீசும் காற்றானது துருவங்களை நோக்கி நகருகிறது என்பதை சமகால ஆய்வுகள் உறுதிப் படுத்தி யுள்ளன. இதனால், துருவபகுதிகளில் வெப்பமய மாதலின் விளைவு அதிகரிக்கும். இது உலக வெப்பமயமாதலின் அச்சுறுத்தும் குறியீடாக உள்ளது.

(தாழ்மட்ட மேகங்கள், வெப்பநிலை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்). பருவமழையை பாதிக்கும் இந்த மாசுபாடு, வெப்பமண்டல கடல்களின் மீதான தாழ் மேகங்கள் கடல் மேற்பரப்பில் வெப்ப நிலையை உருவாக்குகின்றன. கடலில் வெப்பம் அதிகரிக்கும்போது மேகப்பரப்பு குறையும். எனினும், மாசுபாடு அதிகரிப்பு மேகத்தின் நீடித்திருக்கும் கால அளவை அதிகரிக்கும். ஆழமான சிக்கல்: மேகங்களின் அமைப்புகள் சிக்கலானவை. மேகங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் ஒவ்வொருவரின் பங்கும் அவற்றை வேறுபட்ட « க £ ண ங்க ளி ல் பு ரி ந் துª க £ ள் வ த ற்கு அவசியமாகிறது. மேகமாதிரிகள், மேகங்களின் உள்ளியக்கம் மற்றும் நீர்த் திவலைகள் ஒன்றோ
டொன்று எப்படி தொடர்புகொண்டிருக்கின்றன ஆகியவை விஞ்ஞானிகளின் உற்றுநோக்கல் மற்றும் செயற்கை கோள்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. மேக வானிலையியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு பிரிவுகளும், அதுகுறித்த அறிவியலை முன்னோக்கி செல்ல துணை புரிகிறது. உருவகப்படுத்தப்பட்ட நடைமுறைகள், நிஜ உலக நடைமுறைகளுடன் ஒப்பிடப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். உலகளவில் வளி மண்டல அறிவியல் குறித்த ஆய்வை விரிவுபடுத்த மேகங்கள் குறித்த ஆய்வு தேவை. வளிமண்டல மாற்றங்களுடன் எப்படி மேகங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன, உலக வெப்பமயமாதலில் அவற்றின் பங்கை அறிந்துகொள்வதே இந்த ஆராய்ச்சியில் கடினமானதாக இருக்கும். ஏற்கனவே நாம் பயன்படுத்தும் ஆராய்ச்சி தளங்களை விரிவுபடுத்தி காலநிலை மாற்றம் குறித்து ஆராய வேண்டும்.

கட்டுரையாளர் : விஞ்ஞானி, வாஷிங்டன் பல்கலைக்கழகம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments