தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசு வேதாந்தா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உலகளாவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஸ்டெர்லை எதிர்ப்பு மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்டிக் குறிப்பு பின்வருமாறு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் அவர்களோட இணைந்து செயல்படும் அமைப்புக்களும் மே 22ஆம் தேதியை வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான உலகளாவிய செயல்பாட்டு நாளாக அறிவித்து, கூடவே தூத்துக்குடியில் நீதிக்கான உலகளாவிய இணையவழி (JustAction.cc வழியாக) தொடர் பட்டினி போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். 2018 மே 22-இல் நடத்தப்பட்ட படுகொலைகள் மூன்றாம் ஆண்டினை எட்டும் இவ்வேளையில், இந்த பிரச்சாரத்தின் நோக்கம்: புதிய அரசு வேந்தாந்தா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும், மற்றும் மே 22, 2018 அன்றும் அதற்கு பிறகும் காவல் துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்துதல் வேண்டும்.
கொரோனா சூழல்களையும் மனதில் நிறுத்தி, அவை தொடர்பான அரசின் விதிமுறை மீறல்கள் எதுவும் நிகழமுடியா விதமாக, இந்த புதிய அறவழி போராட்டம் மே 12 முதல் 22 வரையிலான 11 நாள் உண்ணா நிலை போராட்டமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டில் இருந்த படியே இந்த பத்து நாட்களில் பங்கேற்பாளர்களின் வசதிபடி இப்போராட்டத்தில் பங்கேற்கலாம்”
என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.