தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி 256 பேர் உயிரிழந்திருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் மற்றும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கே.ராதாகிருஷ்ணன், அண்டோ ஆண்டனி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதிலளித்திருந்தார்.
அதில் யானை தாக்குதலில் மட்டும் 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 256 பேரும் இந்தியாவில் 2,727 பேரும் உயிரிழந்திருப்பதாகவும் இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு
ஆண்டு | உயிரிழந்தோர் எண்ணிக்கை |
2019-20 | 58 |
2020-21 | 57 |
2021-22 | 37 |
2022-23 | 43 |
2023-24 | 61 |
மொத்தம் | 256 |
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,727
ஆண்டு | உயிரிழந்தோர் எண்ணிக்கை |
2019-20 | 574 |
2020-21 | 444 |
2021-22 | 520 |
2022-23 | 583 |
2023-24 | 606 |
மொத்தம் | 2,727 |
அதேபோல நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் புலி தாக்கி 349 பேரும் தமிழ்நாட்டில் 5 பேரும் உயிரிழந்திருப்பதாக இணை அமைச்சர் அளித்த பதிலில் கூறப்பட்டிருந்தது.
ஆண்டு | உயிரிழந்தோர் எண்ணிக்கை |
2019-20 | 49 |
2020-21 | 49 |
2021-22 | 59 |
2022-23 | 110 |
2023-24 | 82 |
மொத்தம் | 349 |
மேலும், காட்டுயிர் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு ஒன்றொய அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.5 லட்சமானது 2023 டிசம்பரிலிருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும். காட்டுயிர்-மனிதர் எதிர்கொள்ளலைக் குறைக்க பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பதாகவும் இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்,