மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை

IMAGE: PARI

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஜி.டி.பி.யில் முதல் இடத்திலுள்ள  மகாராஷ்டிரா  விவசாயிகளின் தற்கொலையிலும் முதலிடத்திலுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவும் மூன்றாவது இடத்தில் ஆந்திராவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியேற்றதிலிருந்து கடந்த ஏழு மாதத்தில் 1203 விவசாயிகள் தற்கொலை sஎய்திருப்பதாக அரசுத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய மகாராஷ்டிர மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே – பட்நாவிஸ் நிர்வாகமே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.அரசுத் தரவுகளின்படி நாளொன்றுக்கு 8 தற்கொலைகள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளன.

மாநிலத்தில் நடந்த இயற்கை பேரிடர்களைவிட அரசின் கொள்கைதான் இதற்கு முக்கியக் காரணமென்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பெய்த பெருமழை அங்கு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதே  தற்கொலைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் அரசின் கொள்கைதான் இந்த நிலைக்குக்  காரணம் என்று செட்க்ரி சன்காதனா எனும் (Shetkari Sanghatana) மாகாராஷ்டிர விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கைலாஷ் டவார் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முன்னெப்பொழுதும் பார்க்காத அளவு பெரிய அளவிலான பேரிடர்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுவருகிறது. இதை விவசாயிகளுக்கான பிரச்சனையாக  மட்டும் பார்க்காமல்  ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான பிரச்சனையாக பார்க்கவேண்டும். மனித சமுதாயத்தின் பேராசையால் காலநிலை மாற்றமும் அதன் தொடர்ச்சியாக இயற்கை பேரிடர்களும் தவிர்க்கமுடியாததாக மாறியுள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு வேகம் காட்ட வேண்டும். ஏனெனில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் விவசாயிகளை பாதுகாக்காமல் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியாது.

எனவே தற்காலிகமான மாற்றுகளுக்கு பதிலாக விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு கொள்கைமு டிவெடுத்து அதற்கேற்றவாறு நீண்டகால திட்டங்களை வகுக்கவேண்டும்.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments