காடுகள் பாதுகாப்புத் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கபடுவதன் காரணங்கள்

கடந்த ஜூன் 3ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு ராஜஸ்தான் மாநிலத்தில் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜாம்வா ராம்கர் காட்டுயிர் சரணாலயத்திற்கு அதைச் சுற்றியுள்ள சுரங்க நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த வழக்கில் திர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக ஆராய 9.05.2002 அன்று Central Empowered Committee ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழுவானது உச்சநீதிமன்றத்தில் 20.11.2003 அன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. அதில், ராஜஸ்தானில் உள்ள ஜாம்வா ராம்கர் காட்டுப் பகுதி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் சட்ட விரோதமாகவும், விதிமீறலாகவும் செயல்பட்டு வந்த சுரங்கங்களால் அக்காட்டுயிர் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சரணாலயத்திலிருந்து  500மீ சுற்றளவிற்கான பகுதிகளில் எவ்வித சுரங்க நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டுமென்றும் CEC தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் ஒரு வழக்கிடை மனுவாக (I.A. 1000 of 2003) மாற்றி உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. 20.09.2012 அன்று CEC மேலும் ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் அந்த அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்களைப் பாதுகாக்கும் வகையில் அதன் எல்லையில் இருந்து குறிப்பிட்ட தொலைவிற்கு பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அதை அறிவிக்கை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதுதான் Eco Sensitive Zone என்றழைக்கப்படுகிறது. இந்த ESZ அமைப்பது தொடர்ப்பான முடிவானது W.P. (Civil). No. 460 of 2004 Goa Foundation v. Union of India என்கிற வழக்கில் பரிசீலிக்கப்பட்டு 4.12.2006 அன்று தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ESZ அறிவிக்கை செய்வதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு 9.02.2011 அன்று வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலானது மூன்று வகையாக ESZ ஆக அறிவிக்கை செய்யப்பட பகுதிகளில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.

  1. முற்றிலும் தடை செய்யப்பட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் (prohibited Activities)
  2. ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகள் (Regulated Activities)
  3. அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் (Permitted Activities)

பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழிடங்களுக்கான ESZ அறிவிக்கை செய்யப்படாத வரையில் சரணாலயம் அல்லது தேசிய பூங்காக்களின் எல்லையிலிருந்து 10கி.மீ சுற்றளவிற்கான பகுதியை ESZ ஆக கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் 4.12.2006 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒன்றிய அரசின் இந்த வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் இதுவரை 25 சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில் ESZ அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களுக்கு ESZ அறிவிக்கை செய்வதற்கான முன்மொழிவுகளை தமிழ் நாடு அரசு ஒன்றிய அரசிற்கு அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் ESZ அறிவிப்புகள்

எண். ESZ அறிவிப்பு தேதி பகுதி (சதுர கிமீ) தாலுகா மாவட்டம்
1 சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 07.06.2019 4.7972 முதுகளத்தூர் ராமநாதபுரம்
2 கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 31.05.2019 5.519 அரியலூர் அரியலூர்
3 கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் 07.06.2019 9.74 திருநெல்வேலி திருநெல்வேலி
4 உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 07.06.2019 2.213 திருத்துறைப்பூண்டி திருவாரூர்
5 முதுமலை புலிகள் காப்பகம் 17.12.2019 438.904 பந்தலூர் நீலகிரி
பந்தலூர் நீலகிரி
கூடலூர் நீலகிரி
கூடலூர் நீலகிரி
கூடலூர் நீலகிரி
கூடலூர் நீலகிரி
உதகை நீலகிரி
உதகை நீலகிரி
உதகை நீலகிரி
உதகை நீலகிரி
உதகை நீலகிரி
உதகை நீலகிரி
6 தேர்த்தநாகல் பறவைகள் சரணாலயம் 17.12.2019 4.5718  ராமநாதபுரம் ராமநாதபுரம்
7 சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் 11.12.2019 19.0387 ராமநாதபுரம் இராமநாதபுரம்
8 ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலயம் 01.11.2019 305.86 பெரியூர் மதுரை
ஸ்ரீவில்புத்தூர் விருதுநகர்
9 காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் 06.11.2019 3.9 முதுகளத்தூர் ராமநாதபுரம்
10 வல்லநாடு  சரணாலயம் 11.11.2019 12.03 தூத்துக்குடி
11 வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 17.12.2019 7.423 திருப்பத்தூர் சிவகணகா
12 மேலசெல்வனூர்-மேலசெல்வனூர் பறவைகள் சரணாலயம் 10.10.2019 11.5108 கடலாடி ராமநாதபுரம்
13 கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் 22.09.2020 117.7772 கன்னியாகுமரி
திருநெல்வேலி
14 மன்னார் வளைகுடா தேசிய பூங்கா 01.01.2020 720.89
15 மேகமலை சரணாலயம் 10.10.2019 116.73 உத்தம்பாளையம் தேனி
ஆண்டிப்பட்டி தேனி
16 கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயம் 01.08.2019 1.47 திருநெல்வேலி திருநெல்வேலி
17 பாயிண்ட் கலிமேர் சரணாலயம் (தொகுதி B உட்பட) 28.01.2020 88.93 வேதாரண்யம் நாகப்பட்டினம்
18 நெல்லை வனவிலங்கு சரணாலயம் 05.08.2019 106.24 செங்கோட்டை திருநெல்வேலி
கடையநல்லூர் திருநெல்வேலி
சிவகிரி திருநெல்வேலி
வாசுதேவநல்லூர் திருநெல்வேலி
19 கொடைக்கானல் சரணாலயம் 28.01.2020 106.78 கொடைக்கானல் பிரிவு திண்டுக்கல்
20 வடுவூர் பறவைகள் சரணாலயம் 16.09.2019 1.299 நீடாமங்கலம் திருவாரூர்
ஒரத்தநாடு தஞ்சாவூர்
21 ஊசுடு சரணாலயம் 21.02.2020 9.068 வானூர் விழுப்புரம்
22 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 19.02.2021 209.4634 சத்தியமங்கலம் ஈரோடு.
கோபிசெட்டிபாளையம் ஈரோடு.
தாளவாடி ஈரோடு.
23 காவிரி வடக்கு சரணாலயம் 01.01.2020 301.934 தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி
பாலக்கோடு தருமபுரி.
24 பாயிண்ட் காலிமேர் சரணாலயம் (தொகுதி A உட்பட) 28.01.2020 37.492 பட்டுக்கோட்டை தஞ்சாவூர்
திருத்துறைப்பூண்டி திருவாரூர்
25 வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 22.05.2020 3.4 பெருந்துறை ஈரோடு
மொத்தம் 2676.9811  

தகவல் ஆதாரம்: https://moef.gov.in/en/rules-and-regulations/esz-notifications/

 

ஜூன் மாதன் வெளியான தீர்ப்பில் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல ESZ அறிவிக்கை செய்யப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் மீது தங்களுக்கு உடன்பாடு உள்ளது என்று கூறிய நீதிபதிகள் இருப்பினும் அனைத்து பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழிடங்களுக்கும் குறைந்தது 1கி.மீ சுற்றளவிற்கு கண்டிப்பாக ESZ அறிவிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் கூறியது. இதற்கான நியாயமான பின்னணியையும் நாம் அறிந்து கொள்வது அவசியம். 2011ம் ஆண்டு வெளியான வழிகாட்டுதலில் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல 0 KM சுற்றுலாவிற்குக் கூட ESZ அறிவிக்கை செய்ய வழிவகை உள்ளதால் அதைச் சில மாநிலங்கள் சுரங்கம், உல்லாச விடுதிகள், இறால் பண்ணைகள் போன்ற வணிக நலனுக்கு ஏதுவாக பயன்படுத்தத் தொடங்கியதால் இந்த ESZ அறிவிப்பதற்கான அர்த்தம் இல்லாத சூழல் உருவானது.

ஆனால், இந்த 1KM சுற்றளவிற்கு கண்டிப்பாக ESZ அறிவிப்பது மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிற்கு கடினம் என்பதால் இதற்கு மட்டும் சிறப்பு விலக்கு அளிக்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக  நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகா அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் 25.08.2022ம் தேதி முதல் 10 ஆயிரம் கடைகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 29.08.2022 அன்று காலை முதல் 24 மணி நேரம் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக  நம்மிடம் பேசிய செல்வராஜ் “ ESZ ஆக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகளை வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட Monitoring Committee தான் முடிவு செய்ய வேண்டும். 2006 வழிகாட்டுதலில் கூறியுள்ளது போல ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல மாநில அரசே உரிய ஆய்வு மற்றும் கலந்தாய்வு செய்து ESZ எல்லைகளை வரைவரையறுப்பதே சரியானது. இந்த உரிமையை PCCF எனும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் என்கிற ஒற்றை அதிகாரிக்கும் வழங்கும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2006 வழிகாட்டுதலுக்கு முரண்பாடாக உள்ளது” எனக் கூறினார்.

ஆனால், காடு மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் சிலர், இதுபோன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்துவதற்கு கடினம் என்றாலும் காடுகளில் சுற்றுலா நோக்கில் நடக்கும் அழிவுகளையும் நிலப் பயன்பாடு மாற்றத்தையும் தடுக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் சிலவற்றிற்கு குறுகிய சுற்றளவிற்கும் சிலவற்றுக்கு அதிக சுற்றளவிற்குமாக ESZ அறிவிக்கை செய்யப்படுவது அவசியமாகிறது. அனைத்து இடங்களுக்கும் 1 கி.மீ. என முடிவு செய்வதில் எவ்வித அறிவியல் காரணங்களும் இல்லை என்கின்றனர்.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் என ஜூன் மாதமே ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின்  இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே தெரிவித்திருந்த நிலையில் கேரளா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காட்டைச் சார்ந்து வாழும் மக்களை குறிப்பாக பழங்குடிகளைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது. அதே நேரத்தில் 2006ம் ஆண்டு வழிகாட்டுதலில் உள்ள சில சலுகைகளை வணிக நலனில் அணுகும் போக்கும் தொடர்வதால் காட்டுக்கும் காட்டுயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டிய அவசியம் அரசிற்கும் பொதுமக்களுக்கும் உள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments