டீசல் வாகனங்களுக்குத் தடை! பிரான்ஸ் அறிவிப்பு!

2040-க்குள் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. அந்நாட்டின் சூற்றுச்சுழல் அமைச்சர் பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிடுகிறார். பிரான்ஸில் நடந்துமுடிந்த தேர்தலில் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தலைமையில் எதிர் வரும் காலங்களில் சூழல்சார்ந்த பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தூய காற்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க தீவிரமான முயற்சியில் இறங்கியதன் விளைவு தான் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத பிரான்ஸை முன்னெடுக்கும் நடவடிக்கைகள். பிரான்ஸ் நாட்டின் சூற்றுச் சுழல் அமைச்சர் நிக்கொல்ஸ் ஹ§லொட் இது குறித்த திட்டங்களின் அம்சங்களை வெளியிட்டு பேசிய போது, இந்த முடிவு கார் உற்பத்தியளார்கள் மத்தியில் கடும் நெருக்கடியைத் தரும் என்றாலும் அரச பல வழிமுறைகளைக் கொண்டு திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார். பிரான்ஸில் கார்பன் ஆக்ஸைடு வாயுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் முதல் படியாக,பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ, 2019 முதல் மின்சாரம் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை மட்டுமே தயாரிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்துஇந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது. மேலும் பாரீஸ் பருவநிலை மாநாட்டில் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையின் படி சூழல் சார்ந்த கொள்கையின் அடிப்படையில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நிலையங்களை 2022-க்குள் மூட இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு அதிக அளவில் மாசு விளை விக்கும் வாகனங்களுக்குத் தடை குறித்து பிரான்ஸ் மட்டுமல்ல; நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட ஏனைய நாடுகளும் 2025-க்குள் பெட்ரோல்-டீசல் வாகன தடைக்கு தயாராகிக் கொண்டிருக் கின்றன. இதில் இந்தியாவும் 2030-க்குள் முற்றிலும் தடைவிதிப்பது என தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

சூழலுக்கு அதிக அளவில் மாசு விளைவிக்கும் வாகனங்களுக்கு தடை குறித்து பிரான்ஸ் மட்டுமல்ல; நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட ஏனைய நாடுகளும் 2025-க்குள் பெட்ரோல்-டீசல் வாகன தடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவும் 2030-க்குள் முற்றிலும் தடைவிதிப்பது என தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

காடுகளில் உள்ள இயற்கை வளங்களை அழித்து பெறப்படும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான், தென்கிழக்கு ஆசிய காடுகள் மற்றும் காங்கோ போன்றவை அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. பிரஞ்சு நாடாளுமன்றத்தில் இலையுதிர் கால கூட்டத்தின் போது முற்றிலும் சூழல் மாசு பாடுக்குத் தடைகொண்டுவர விவாதிக்கப்பட உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மக்களின் மத்தியில் ஒரு பொதுவான கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அணு ஆற்றல் அளவை வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் 75 சதவிகிதத்திலிருத்து 50 ஆக கட்டுப்படுத்தப்படும் என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது. சூழல் சார்ந்த விஷயங்களில் பிரான்ஸ் கவனமாக கையாள்வதை இது போன்ற திட்டங்கள் விளக்குகின்றன. இந்தியாவை வளர்ச் சியின் உருவமாக சித்தரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சூழல் குறித்த எதிர்காலத் திட்டங்கள் எந்தளவில் உள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments