மரபணு மாற்றப்பட்ட கடுகு

மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக ரீதியாக அறி முகப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கும் நிலை யில் அரசு இருப்பது, கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. கடந்த மே மாதம் மரபணு மாற்றப் பட்ட கடுகை வணிக நோக்கில் பயிரிடு வதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது மத்திய அரசின் மரபணு அறிவியல் மதிப்பீட்டு குழு. இன்னும் மத்திய சுற்றுச்சூழல் அரசு ஒப்புதல் வழங்க வேண்டியதுதான் மிச்சமிருக்கிறது. அது விரைவிலேயே கிடைத்துவிடும் என்கிற நிலையே இன்றிருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் மட்டு மல்லாமல் இந்தியா முழுவதிலும் விவசாயி களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் இந்த அனுமதிக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கிறது. சென்னையிலும் மரபணு மாற்றப்பட்ட கடுகு அறிமுகத்துக்கு எதிராக சமீபத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. பூவுலகின் நண்பர்கள் ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கில் அகில இந்திய அளவிலான நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டு மரபணு மாற்றப்பட்ட கடுகு பற்றிய தங்களது அச்சங்களையும் கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இது தொடக்கம்
மட்டுமே என்கிற அச்சம் அவர்களிடம் இருந்தது. மரபணு மாற்றப்பட்ட கடுகு என்பது என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? இப்போது மத்திய அரசு அறிமுகப் படுத்த விருக்கும் கடுகின் பெயர்  DMH-11 (Dhara Mustard Hybrid-11)  என்கிற வகை. தில்லி பல்கலைக்கழகத்தின் பயிர்களுக்கான மரபணு மாற்ற மையம்தான் இதை அறிமுகப்படுத்துகிறது. மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் மூலம் Bar, Barnase  மற்றும் ஙிணீக்ஷீstணீக்ஷீ என்னும் மரபணுக்கள் கடுகின் மரபணுக்களோடு சேர்க்கப்பட்டு இந்த புதிய கடுகு உருவாக்கப்பட்டுள்ளது.  Bar, Barnase  மரபணுக்கள் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களான Bacillus amyloliquefaciens  மற்றும்  Streptomyces hygroscopicus.B. amyloliquefaciens  இருந்து எடுக்கப்பட்டவை. இந்த மரபணுக்கள் ஆண்தன்மையை அழிக்க கூடியது. இவை கடுகுக்குள்ளாக செலுத்தப்பட்டு கடுகின் ஆண்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு  Male sterility – fertility restorer என்று பெயரிட்டுள்ளனர். இப்படிச் செய்வதற்கான காரணம், கடுகு தன்பால் மகரந்தச்சேர்க்கையும் அயல் மகரந்தச் சேர்க்கையும் செய்யக்கூடியது. தன்பால்

மகரந்தசேர்க்கையை கட்டுப்படுத்தினால், அயல் மகரந்தசேர்க்கை அதிகரிக்கும் அதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்பது இவர்களின் கணிப்பு. இதற்கு ஏற்ற வகையில் தன்பால் மகரந்தச் சேர்க்கையை கட்டுப்படுத்த கடுகுள் அனைத்தும் பெண்ணாக இருக்க மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் கடுகு வகைகளை விட இது அதிக விளைச்சலை தரும் என்றும் இதனால் இறக்குமதித் தேவைகள் குறையும் என்றும் சொல்கிறது அரசு. ஆனால் இது அனைத்தையும் மறுக்கிறார்கள் நிபுணர்கள். தற்போது சந்தையில் இருக்கும் கடுகு வகைகளை விட இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு அதிக விளைச்சலைத்தரும் என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை என்கிறார் உணவு கொள்கை நிபுணரும் எழுத்தாளருமான தேவிந்திர ஷர்மா. ”அவர்கள் சொல்வது போல இது எண்ணெய்ப் புரட்சியை எல்லாம் கொண்டு வந்துவிடாது. சொல்லப்போனால் இது அதிக விளைச்சலைத் தரும் கடுகு வகையும் அல்ல. மரபணு மாற்றப்படாத வகைகளில் ஐந்து வகை கடுகுகளாவது இந்த டி.எம்.எச் 11 வகையை விட அதிக விளைச்சலைத் தரும் வகை என்கிறார் அவர். மரபணு மாற்று பயிர்வகைகளைப் பொறுத்த வரையில் இதுவரை ஒரேயரு மருத்துவப் பரிசோதனை மட்டுமே நடந்திருக்கிறது என்று சொல்லி அதிர்ச்சியைத் தரும் தேவிந்திர ஷர்மா உணவு வகைகளைப் பொறுத்தவரையில் இந்த பரிசோதனை இல்லாமல் மரபணு மாற்றம் செய்வது என்பது நமது உணவில் நாமே நஞ்சை சேர்ப்பதற்கு சமம் என்கிறார். இந்த மரபணுமாற்று கடுகுகள் எலிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன. பிற கால்நடை களுக்கோ மனிதர்களுக்கோ கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்படவில்லை. எலிகளுக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. எனவே கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று மரபணுமாற்று கடுகு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பார் மரபணுக்கள் போன்ற அம்சங்கள் கொண்ட வேறு பாக்டீரியாவின் மரபணுக்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மரபணுக்களுக்கு அத்தகைய ஆய்வுகள் தேவை இல்லை என்று வாதிடுகின்றனர். இவ்வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், இரண்டு வித பாக்டீரியாக்களில் இருந்து மூன்றுவித மரபணுக்கள் கடுகு மரபணுவில் சேர்க்கப்படுகின்றன. இவை மூன்றும் இணைந்து எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை இதவரை உலகில் யாரும் ஆய்வு செய்யவில்லை. அப்படி இருக்க இந்த மரபணுமாற்று கடுகு மனிதகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லாதது என்று முற்றிலுமாக கூறிவிட முடியாது. மேலும் அமெரிக்காவிலும் சரி, கனடாவிலும் சரி; புதிய மரபணுமாற்றப்பட்ட உணவுகளை நெடும்காலம் பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தியே மனித பயன்பாட்டிற்கு அனுமதிக் கின்றனர். இவற்றைக் கண்காணிக்க உணவு மற்றும் மருந்துக்கான அமைப்பு உள்ளது. இந்தியாவில் இத்தகைய சட்ட நடைமுறைகளோ, கண்காணிப்பு அமைப்புகளோ போதியளவில் இல்லை. களைக்கொல்லி சகிப்புத்தன்மை கொண்டது இந்த மரபணு மாற்றக் கடுகு. இதனால் பயிர்களில் கூடுதல் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என்று அச்சப்படுகிறார்கள் நிபுணர்கள். இதனால் உடல்நலனுக்கு மட்டு மன்றி சுற்றுச்சூழலுக்கும் கேடு என்கிறார்கள் ஆர்வலர்கள். களைக்கொல்லி சகிப்புத்தன்மை கொண்ட கடுகு என்பதையே கடுமையான நெருக்கடிகளுக்குப் பிறகே மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. களையெடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிற கிராமப்புற பெண்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இந்த வகை கடுகால் நமது எண்ணெய் பிரச்னை தீரும் என்பதை விட முட்டாள்தனமான நம்பிக்கை வேறு எதுவும் இல்லை என்கிறார் பாதுகாப்புக்கான உணவு கூட்டமைப்பை சேர்ந்த கவிதா குருகந்தி. ”தொடர்ந்து பா.ஜ.க அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் இதனால் அதிக பாதிப்பு, இதை மத்திய அரசு உணரவேண்டும்” என்று சொல்லும் கவிதா, மாநில அரசுகள் இதை எதிர்த்து வலிமையான குரலை எழுப்ப வேண்டும்’ என்கிறார். வளர்ச்சி பற்றிய நமது தவறான புரிதலே மரபணு மாற்ற கடுகு போன்ற பிரச்னைகள் என்று வாதிடுகிறார் கவிதா. ‘‘உண்மையில் நமது உழவுக்கும் சூழலுக்கும் உடல்நலனுக்கும் இந்திய இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால் இந்த மரபணு மாற்றக் கடுகு என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். ”கடுகு ஒவ்வொரு நாளும் நம் சமையலில் விதவிதமாய் பயன்படுத்தும் பொருள். 7-8 மாநிலங்களில் அன்றாட சமையல் எண்ணெய். ஆதலால் சந்தைக்கு வரும் முன்னர் மிக அதிக பாதுகாப்பு தர சோதனைகள் தேவைப்படும்.அப்படி ஏதும் செய்யப்படவில்லை. கூடவே கடுகு மருத்துவ தாவரம். கடுகு குடும்பத்தில் பல மருத்துவ உணவுத் தாவரங்கள் உள்ளன. மருத்துவ தாவரங் களின் ஒருமித்த செயல்தன்மை (synergy) இழக்க, இம்மரபணு கடுகு காரணமாகக் கூடும். அது அத்தாவரத்தின் மருத்துவ உணவியல் செய்கையையே முற்றிலுமாய்ச் சிதைக்கக் கூடும்.” என்கிறார் அவர். நாட்டு ரகங்களோடு கலந்து மரபு கடுகை முற்றிலுமாய் அழிந்து போகச் செய்தல், உடலில் ஒவ்வாமை முதலான பல்வேறு நலக் கேடுகள் என பல சிக்கலை தரக் கூடியது இந்த தொழில்நுட்பம். இது தேசத்துக்கு அவசியமில்லாத ஒன்று. பிற நாடுகளில் பின்பற்றப்படும் எந்த சோதனையும் செய்யாமல் அவசர அவசரமாக இது அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்திய காப்புரிமை சட்டப்படி மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற முடியும். இப்படி காப்புரிமை பெறுவதன் மூலம் நிறுவனங்கள் தாங்கள் காப்புரிமை பெற்ற பயிர்களை தங்களுடைய அனுமதி இல்லாமல் பயிர் செய்வதையும், மறுஉற்பத்தி செய்வதையும் தடுக்கும் உரிமையைப் பெறுகின்றனர். இதன் மூலம் விதை மீதான விவசாயிகளின் இறை யாண்மையைப் பறிக்கமுடியம். மரபணுமாற்று கடுகுக்குக் கொடுக்கப்படும் அனுமதி பிற மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களுக்கான வாசலைத் திறக்கும் என்கிற அச்சமும் நிபுணர்களிடத்தில் இருக்கிறது. பி.டி கத்தரியை அறிமிகப்படுத்த முனைந்த போது நாட்டின் அனைத்து விவசாய -அறிவியல் –மருத்துவ -சுற்றுச்சூழல் தளங்களில் இருந்து எழுந்த கொதிப்பின் காரணமாய் அப்போதைய மத்திய அரசு அதை தடை செய்தது. இப்போது மரபணு மாற்ற கடுகை அறிமுகப்படுத்துவது இது போல இன்னும் பல அறிமுகங்களுக்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.

15 ஆண்டு கால பி.டி பருத்தி அனுபவம்

இந்தியாவில் முதலில் அறிமுகமான மரபணு மாற்றுப்பயிர் – பி.டி. பருத்தி. 1997 ம் ஆண்டு பி.டி.பருத்திக்கான திறந்தவெளி சோதனைகள் அனுமிக்கப்பட்டன. 2002 ஆண்டு வியாபார ரீதியான அனுமதி வழங்கப்பட்டது. உண்மையில் பி.டி.பருத்தியை நாம் பூச்சிக் கொல்லி என்று தான் அழைக்க வேண்டும். பேசில்லஸ் துரின் ஜியன்சிஸ் என்னும் பாக்டீரியாவின் சுருக்கம் தான் பி.டி. இந்த பாக்டீரியா ஒருவகை விசத் தன்மை கொண்டது. அந்த விச மரபணுவை தான் பருத்தி மரபணுக்களோடு கலக்கச் செய்து பி.டி.பருத்தி உருவாக்கின்றனர். ஏன் இப்படி செய்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்தடிக்கும் வேலை விவசாயிகளுக்கு இருக்காது என்பதற்கு தான். பூச்சிக்கொல்லியை செடிகளுக்குள் வைத்துவிட்டால் செடியே பூச்சி கொல்லியாக வளரும், அதனை உண்ட பூச்சிகள் சாகும். விளைச்சல் அதிகரிக்கும் என்பது தான் இதன் பின் உள்ள அறிவியல். இதனை பிற கால் நடைகள் உண்டால் என்னவாகும். யாருக்கும் தெரியாது. இப்படிப் பூச்சிகளைக் கொல்லும் திறன் படைத்த பி.டி.பருத்தியால் உண்மையில் நச்சுப் பூச்சிகளை அழிக்கமுடியவில்லை. பி.டி.பருத்தியை எதிர்கொண்டு அவை வளரத்துவங்கின. இதன் காரணமாக முன்று தலைமுறை பி.டி.பருத்தி பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே பி.டி.தொழில்நுட்பம் எந்த வகையிலும் பூச்சி கொல்லிப் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.
இன்று இந்தியாவில் சுமார் 1167வகையான பி.டி.பருத்தி விற்கப்படுகின்றன. இந்தியாவில் விளையக் கூடிய 93 சதவீத பருத்தி பி.டி.பருத்தி தான். நாட்டுரகப் பருத்தி கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. 11.2மில்லன் ஹெக்டர் அளவிலான நிலத்தில் பி.டி.பருத்தி பயிர் செய்யப்படுகிறது. பி.டி.பருத்தி அறிமுகமான காலகட்டத்தில் விளைச்சல் அதிகரித்தாலும் தற்போது ஆண்டு தோறும் குறைந்தளவே விளைச்சல் கிடைக் கின்றது. அதேபோல பூச்சிக்கொல்லிகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவை எல்லாவற்றையும் விட விவசாயிகளின் தற்கொலை விகிதமும் பி.டி.பருத்தி பயிர் செய்தவர்களிடையே அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள விவசயிகள் தற்கொலை என்பது பி.டி.பருத்தி சார்ந்துள்ளதாக 2015ம் ஆண்டு வெளியான ஆய்வு கூறுகிறது. (Gutierrez. et al, “Deconstructing Indian cotton: weather, yields, and Suicides”).

கவிதா முரளிதரன், வழ. வெற்றிச்செல்வன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments