தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பது தொடர்பாக மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு  சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையின் அமைச்சர் பூபேந்தர் யாதவ்  18.07.2022 அன்று பதிலளித்திருந்தார்.

அதில் இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 1,578 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதிகபட்சமாக ஒடிஷாவில் 322 பேரும், ஜார்கண்டில் 291 பேரும், அஸ்ஸாமில் 229 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டில் 58 பேரும், 2021ல் 57 பேரும், 2022ல் 37 பேரும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

elephant attack
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

“Project Elephant” திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யானை தாக்கி இறந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ. 191 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் யானை – மனிதர் எதிர்கொள்ளலைச் சமாளிப்பதற்கான வழிகாட்டுதலை 6.10.2017 அன்று ஒன்றிய அரசு வெளியிருப்பதாகவும் 29.04.2022 அன்று வனத்துறை பணியாளர்களுக்கு யானை மனிதர் எதிர்கொள்ளலைச் சமாளிப்பதற்கான கையேடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

-செய்தி பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments