ஆட்டத்தை மாற்றும் மேகங்கள்

ஸ்ரீஷன் வெங்கடேஷ்  | தமிழில்: ஜீவா

மத்திய பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை குறைவாகவே பெய்தது. ஆனால், அதற்கடுத்து வெறும் இரண்டே நாட்களில் 400 மில்லி மீட்டர் மழைபெய்து அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், வழக்கமாக, இம்மாவட்டத்தில் இந்தளவு மழை பதிவாக இரண்டு மாத காலத்திற்கும் மேலாகும். இந்தாண்டில் 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 18 மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மழைக்காலங்களில் மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழும் என்றாலும், நான்கு நாட்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஜூலை 31-ஆகஸ்டு 3 இந்த நான்கு நாட்களுக்குள் ஒடிஷாவின் பல பகுதிகளில் 56-க்கும் மேற்பட்டோர் மின்னலால் உயிரிழந்தனர்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் பருவமழை துவங்கியதிலிருந்து, எட்டு மாநிலங்களில் சுமார் 400 பேர் மின்னலால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்தாண்டு கோடை மழையும் வலுவாக இருந்தது. இந்த கோடை மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதில், 400 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1,00,000 பேர் இடம்பெயர்ந்தனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட புயல், இடியால் பல பகுதிகளில் கடும் அழிவு ஏற்பட்டது. இத்தகைய வெள்ளம், புயல் போன்ற அசாதாரண நிகழ்வுகள் வழக்கமான ஒன்றாக மாறின. ஆனால் செயற்கைகோள் தொழில் நுட்பம் மற்றும் வானிலை அறிவியலில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருந் தாலும், இவற்றை கணிப்பதில் விஞ்ஞானிகள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிச்சயமற்ற நிகழ்வுகளை உருவாக்கும் மேகங்கள் குறித்த தொடர்பு இல்லாததே இந்த சிரமங்களுக்கு காரணம்.

“வானிலையை தாங்குபவைகளாக மேகங்கள் இருக்கின்றன. அவை, நீர்வழி சுழற்சியை உருவாக்கி மழைக்கு காரணமாகின்றன”, என புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தின் இயற்பியல் மற்றும் வெப்ப மண்டல மேகங்களின் இயக்கவியல் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி தாரா பிரபாகரன் கூறுகிறார். மேலும், மேகங்கள் காலநிலை அமைப்புகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளுக்கிடையேயான ஊடகமாக விளங்குகிறது. ஆனால், அத்தகைய மேகங்கள் குறித்த புரிதல்கள், அவை எவ்வாறு வானிலை மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, காலநிலை சுழற்சி குறித்து விஞ்ஞானிகள் அரிதாகவே புரிதலை கொண்டுள்ளனர். அதிதீவிரமான மற்றும் நம்மிடம் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் வானிலை நிகழ்வுகள், அதிக வெப்பநிலையுடன் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், விஞ் ஞானிகள் மேகங்கள் குறித்த மர்மங்களை கட்டவிழ்க்கும் முயற்சியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். மேகங்கள் உருவாதல் மற்றும் அவற்றின் பரிணாம வள்ர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வளிமக்கரைசல்கள் குறித்த புரிதலில் விஞ்ஞானிகள் இன்றளவும் பூஜ்ஜிய நிலையில் உள்ளனர். அதனால், மேகங்கள் வானிலை மீது செலுத்தும் தாக்கங்களை அவர்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. சிக்கலாக தென்படக்கூடிய வளிமக் கரைசல்கள், வளிமண்டலத்தில் தொடர்ந்து வெளிப்படும் நுண் கரிம மற்றும் கனிம மூலக்கூறுகளாகும். இயற்கையாக உருவாகும் மாசு துகள், எரிமலை சாம்பல், தாவரங்களிலிருந்து வெளியாகும் நீராவி அல்லது மனிதர்களால் உருவாகும் தூசி, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தாது சுரங்களிலிருந்து வெளியேறும் மாசு, அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் புகைக்கரி ஆகியனவற்றுள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இவை இருக்கலாம். இந்த நுண்ணிய மாசுக்கள் நீராவியாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன. “வளிமண்டலத்தில் உள்ள தூசுத்துகள்களை சுற்றி உருவாகும் நீர்படிமங்கள் அல்லது நீர்த்திவலைகளின் கூட்டமே மேகங்கள் ஆகும்”, என பிரபாகரன் கூறுகிறார்.

பேரிடியாக இறங்கும் உண்மை:

இவ்வாறு உருவாகும் நீர்த்திவலைகளின் வகை, அவற்றின் மிகுதியைப் பொறுத்தே  மேகங்கள் மழையை தோற்றுவிக்குமா? அல்லது சூரிய கதிரியக்கமாக உருமாறுமா என்பதை வரையறுக்க முடியும்.

மழைப்பொழிவை தடுக்கும் காற்று மாசுபாடு:

வளிமக்கரைசல்கள் எந்தளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்தளவுக்கு மேகங்களில் அதிக நீர்த்திவலைகள் உருவாகும் என, டானியல் ரோசன்ஃபெல்டு (Daniel Rosenfeld), (ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகிறார். ஆனால், அதிக நீர்த்திவலைகள் உருவானால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நீர்த்திவலைகள் அதிகளவிலுள்ள வளிம கரைசல்களுடன் இணைந்து, பெரும் நீர்த்திவலை கூட்டமாக மாறுகின்றன. இந்த நீர்த்திவலை கூட்டம்தான் மழைப்பொழிவை உருவாக்கும். இத்தகைய நீர்த்திவலை கூட்டம் ஒன்றிணைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் எனவும் டேனியல் கூறுகிறார். டேனியலின் இது குறித்து ஆய்வு கட்டுரை Water Resource Research இதழில் கடந்த 2008-ஆம் ஆண்டு பிரசுரமானது. மாசு துகள்கள் மற்றும் மழைப்பொழிவுக்கும் இடையேயான தொடர்பை 1996-2005 காலகட்டத்தில், விர்ஜினியா பல்கலைக் கழகம், அமெரிக்க மற்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து வளிமக் கரைசல்கள், காற்றின் திசை, மத்திய மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சஹாரா பாலை வனங்களில் மழைப்பொழிவு குறித்த தரவுகளை ஆராய்ந்தனர். இதில், அந்த பகுதியில் உள்ள மாசுபட்ட துகள்களால் மழைப்பொழிவு தடுக்கப்படுவது கண்டறியப்பட்டது. அதாவது, மழைப் பொழிவுக்கு தேவையான நீர்த்துளிகள் உருவாவதை இத்தகைய மாசடைந்த துகள்கள் தடுத்து மழையை முடக்குகின்றன என அந்த ஆய்வு கூறுகிறது. இத்தகைய மாசடைந்த மேகங்கள் அழிவை உண்டாக்கும் என டேனியல் கூறுகிறார்.

மின்னல், மேக வெடிப்பு நிகழ்வுகளின் பங்கு:

மாசடைந்த மேகங்கள் சில நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மேலெழும்பும். அப்போது, நீர்த்திவலைகளின் தன்மை மாறும். இந்த நேரத்தில் அவை பெரும் நீர்த்திவலை கூட்டத்தை ஏற்படுத்தி மழைப்பொழிவு உருவாகும். இத்தகைய மேகங்கள்தான் கார் மேகங்கள். இந்த கார்மேகங்கள், சூறாவளி, ஆலங்கட்டி மழை, புழுதிப்புயல், திடீர் புயல் மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்ட அதிதீவிர வானிலை மாற்ற நிகழ்வுகளை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையத்தின் மண்டல சிறப்பு தலைவர் மோஹபத்ரா தெரிவிக்கிறார். இத்தகைய கார்மேகங்கல் வளிமக்கரைசல் களுடன் இணைந்திருக்கும்போது, உறை நிலையை தாண்டிச் சென்றால் மேகங்களின் மேற் பரப்பில் பனிக்கட்டிகள் உருவாகும். இந்த பனிக் கட்டிகளின் ஓட்டம் மிக அதிகமாகவும், வேகமாகவும் இருக்கும்போது மேகங்களிடையே பெரும் நிலையான ஆற்றல் உருவாகும். அந்த ஆற்றலின் மூலம் மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். மின்னலின்போது அ தி க ள வி ல £ ன வ ளி ம க் க ¬ ர ச ல் க ள் ஏற்றப்பட்டிருக்கும் என்பதால், மிகப்பெரும் ஆற்றலின் காரணமாகவே எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் நடைபெறுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பார்வையின் மூலம், ஏன் இந்தியாவில் மின்னல் காரணமாக நேரிடும் உயிரிழப்புகள் வழக்கமான ஒன்றாக உள்ளன என்பதை புரிந்துகொள்ளலாம். வானிலை
க £ ர ண ம £ க இ ந் தி ய £ வி ல் ஏ ற் ப டு ம் உயிரிழப்புகளில், மின்னல் காரணமாகத்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2000-ஆம் ஆண்டு வரை சுமார் 30,000 பேர் மின்னல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கங்கை சமவெளி, மத்திய இந்தியா, தக்கான பீடபூமி ஆகிய பகுதிகளில் வளிமண்டல கரைசல்களின் அளவு அதிகமாக உள்ளது. இது இந்தியாவில் வளிமண்டல கரைசல்களின் உமிழ்வை அளவிடும் வரைபடம் மூலம் தெரியவருகிறது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் அதிகளவில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்டவை. இங்கும் உணவுக்கழிவுகள், தோட்டக் கழிவுகள், விவசாய கழிவுகள் ஆகியவற்றை இங்குள்ள மக்கள் அதிகளவில் எரிக்கின்றனர். இந்த பகுதிகளில்தான் மின்னலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. உயர்மட்டத்திலுள்ள மேகங்கள் ஆற்றல் ஓட்டத்திற்காக செங்குத்தான வழியில் பயணிக்கின்றன. “இதைத்தான் விமானம் மேகங்கள் வழியாக பயணிக்கும்போது பயணிகள் உணரும் அதிர்வு என சொல்கிறோம்”, என்கிறார் மோஹபத்ரா. மேகங்களில் உள்ள நீர்த்திவலைகள் மற்றும் பனிக்கட்டிகள் தொடர்ச்சியாக வேகமாக மேலும் கீழும் நகர்ந்து கொண்டேயிருக்கும். அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். இதனால், அவை எளிதில் ஆவியாகின்ற தன்மையை பெறும். ஆபத்தானதாகவும் மாறும். இந்த ஆவியாகும் தன்மையால் வளிமக்கரைசல்கள் ஊக்கமடையும். இந்த ஊக்கம் மேகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நீர்த்திவலைகளும் தூண்டப்படுவதற்கு போதுமானது என மோஹபத்ரா தெரிவிக்கிறார். இதுதான், உயர்மட்ட மேகங்களில் மேக வெடிப்பு நிகழ்வுகள் நிகழ்வதற்கு காரணமாகும்.

சுழற்காற்று:

கருமேகங்களாலேயே கடும் மழைப்பொழிவு ஏற்படுகின்றது. இந்த கருமேகங்களால் காற்றின் வேகத்தை அதிகரிக்க முடியும். கருமேகங்களில் அதிகளவில் உள்ள வளிமக் கரைசல்கள் அதன் அளவை அதிகரிக்க முடியும். மேலும், மழைப்பொழிவை தாமதப்படுத்துவதன் மூலம் தான் நிலைத்திருக்கும் காலத்தையும் நீட்டிக்க முடியும். அதனால், கடைசியாக மழைப் பொழியும்போது அதீத புயலை உருவாக்கும். புயல் மட்டுமல்ல இத்தகைய கருமேகங்களால் சுழற்காற்று, புழுதிப்புயல், திடீர்புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகளை நிகழ்த்தவல்லன என்கிறார் மோஹபத்ரா. டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொலரடோ போல்டர் பல்கலைக்கழகம் (University of Colarado Boulder) மற்றும் நாசாவின் ஜெட் இயக்க ஆய்வகம் ஆகியவை இணைந்து சமீபத்தில் நடத்திய ஆய்வானது, மோஹபத்ராவின் மேற்கண்ட கூற்றை உறுதிப் படுத்துகிறது. இந்த ஆய்வில், செயற்கைக்கோள் உதவியுடன் மேகங்களை ஆய்வு செய்தனர். அதற்காக 2,430 மேகங்களின் அமைப்புகள்
ஆராயப்பட்டன. அதிலிருந்து, மேகங்களில் உள்ள வளிமக்கரைசல்களின் செறிவால், புயலின் நிலைநிறுத்தல் காலத்தை 3 மணிநேரத்திலிருந்து 24 மணிநேரம் வரை நீட்டிக்க முடியும் என்று உறுதிபடுத்தப்பட்டது. “வளிமக்கரைசல்கள் அதிக செறிவுக்கு உட்படும்போது நீர்த்திவலைகளின் அளவு குறையும், அதனால், மழைப்பொழிவு தாமதமாகும். புயலை உருவாக்கும் மேகங்களை பொறுத்தவரையில்; அவை புயல் நிலை கொண்டிருக்கும் கால அளவை நீட்டித்தலிலும், புயலின் ஆதிக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன”, என சுதீப் சக்ரபர்த்தி  Proceedings of National Academy of Sciences என்ற இதழில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்டுகிறார். கார்மேகங்கள் எப்போதுமே இத்தகைய அதீத இயற்கை பேரிடர்களைத்தான் உருவாக்கும் எனும் அனுமானத்தை நம்புவதில் பற்றாக்குறை உள்ளது. சக்கரபர்த்தியின் இந்த ஆய்வு மட்டும்தான் மேகங்களின் பண்புகளை மாற்றுவதில் வளிமக் கரைசல்களின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக்கும் ஒரேயரு ஆய்வு. இத்தகைய ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படாததற்கு முக்கிய காரணம், மேகங்களின் பண்புகள் குறித்த தரவுகளின் பற்றாக்குறையே என ஐ.ஐ.டி. டெல்லியின் வளிமண்டல அறிவியல் மையத்தின் துணை பேராசிரியர் சாக்னிக் டே (Sagnik Dey) கூறுகிறார். தரமான மற்றும் அதிக எண்ணிக்கையில், எளிதில் கிடைக்கக்கூடிய தரவுகள், செயற்கைக்கோள் விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு இருந்தால், மேகங்கள் தங்களது பண்புகளை எவ்வாறு மாற்றுகின்றன, அதிதீவிரமான வானிலை நிகழ்வுகள் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆய்வு மேற்கொள்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம்கொள்வர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments