பெருகி வரும் சுற்றுசூழல் குற்றங்கள்

மாகாணத்தில் நடந்த ஒரு ‘குற்ற நிகழ்வையும்’ இந்தியாவில் உள்ள பிரச்சனையையும் ஒப்பிட்டு விளக்க முற்படுகிறேன்.

வடக்கு கரோலினா மாகாணம்: ஓர் சிறு அறிமுகம்

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள இம்மாகாணத்தின் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. கடற்கரை சமவெளிகளையும், அபளாச்சியன் மலைத் தொடரையும், எழில் கொண்ட 480 கி.மீ. கடற்கரையையும் உடையது. விவசாயமும், அதனை சார்ந்த தொழில்களும் பிரதானமாக இருக்கின்றன. விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக தனி அரசுத் துறையும் உள்ளது. இம்மாகாணத்தில் 50,000 க்கும் மேற்பட்ட விவசாய பண்ணைகள், சுமார் 80 வகையான பயிர்களை 8.41 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் பயிரிடுகின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து ஒவ்வொரு விவசாய பண்ணையும் சராசரியாக ஆண்டுக்கு $57,000 (தோராயமாக 37 இலட்சம் ரூபாய்) வருமானம் ஈட்டுகின்றன. மாகாணத்தின் ஊடே செல்லும் பல்வேறு ஆறுகள் மக்களுக்கான முக்கிய நீர் ஆதாரமாக இருக்கின்றன.

டியுக் (Duke Energy) மின்சார உற்பத்தி நிறுவனமும் அதன் குற்றச் செயலும்

அமெரிக்காவின் முக்கிய மின் உற்பத்தி நிறுவனங்களில் டியுக் நிறுவனமும் ஒன்று. 52,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்ற இந்நிறுவனம், ஏறத்தாழ 74 இலட்சம் பேருக்கு மின்சார சேவையை அளித்துவருகிறது. இதன் மின்சார உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியே பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஆறு மாகாணங்களுக்கு மின் சேவை அளித்து வரும் டியுக் நிறுவனம், வடக்கு கரோலினாவில் மட்டும் 33 இலட்சம் பேருக்கு மின்சாரம் வழங்குகிறது. நிலக்கரியை முதன்மையான எரிபொருளாக பயன்படுத்துவதால் இந்நிறுவனம் அதிக அளவிலான நிலக்கரி சாம்பல் கழிவுகளை கையாள வேண்டியுள்ளது. பொதுவாக, இக்கழிவுகளை தக்க முறையில் கையாண்டு மறுபயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தியது போக மீதமுள்ளவற்றை உரிய பாதுகாப்புடன் சேமித்து வைக்க வேண்டும். ஏனென்றால், இக்கழிவுகளில் பாதரசம், காட்மியம், அர்சனிக் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இந்த இரசாயனங்களால்

அமெரிக்காவில் சுற்றுச் சூழலுக்கு எதிராக நடந்தால் அது சுற்றுச்சூழல் குற்றம் ஆனால், இங்கு சுற்றுச்சூழல் மாசு.

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இயற்கைச் சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பாதிப்புகளை தவிர்க்க இக்கழிவுகளை கவனமாக கையாள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்துகின்றன. மேற்சொன்ன விளைவுகளை பொருட்படுத்தாமல் டியுக் நிறுவனம், வடக்குக் கரோலினாவின் ‘தான் ஆற்றில்’ (Dan River) நிலக்கரிச் சாம்பல் கழிவுகளை கொட்டியது. ‘தான் ஆற்றின்’ ஓரம் உள்ள மக்கள் தொடர்ந்து மீன்கள் இறந்து மிதப்பதனையும், ஆற்று நீரில் நிறமாற்றம் ஏற்பட்டதையும் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின்[Environmental Protection Agency (EPA)] கவனத்திற்கு கொண்டு சென்றனர். மேற்கூறிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

டியுக் நிறுவனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணையும், தீர்ப்பும்

விசாரணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA); உள்நாட்டு வருவாய் சார்ந்த குற்ற விசாரணைக் குழு (Internal Revenue Service Criminal Investigation); âçHä (FBI); மாகாண விசாரணை அமைப்பு (State Investigation Bureau); தடயவியல் துறை (Forensics) போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து டியுக் நிறுவனத்தின் குற்றச் செயலைக் கண்டுபிடித்தனர். இந்நிறுவனம் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை சுமார் 35 மில்லியன் கேலன் அளவுக்கு நிலக்கரி சாம்பலை ‘தான் ஆற்றில்’ கலந்ததாக மதிப்பிடப் பட்டது. இச்செயல்களின் மூலம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சுத்த நீர் சட்டத்தை (Clean Water Act) டியுக் நிறுவனம் மீறி செயல்பட்டதாக விசாரணை அமைப்புகளால் நிரூபிக்கப்பட்டது. சுத்தநீர் சட்டத்தின் ஒன்பது பிரிவுகளின் கீழ் அந்நிறுவனத்திற்கு தண்டனையாக (Criminal Fine) $68 மில்லியன் (தோராயமாக 442 கோடி ரூபாய்) அபராதமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளுக்கும், கழிவினால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும், சமுதாய முன்னேற்ற (Community Development) நடவடிக்கைகளுக்கு உதவவும் $34 மில்லியன் (தோராயமாக 221 கோடி ரூபாய்) வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் டியுக் நிறுவனம் 663 கோடி ரூபாயை தண்டனைத் தொகையாக செலுத்த ஒப்புக்கொண்டது. இவ்விசாரணையை திறன்பட மேற்கொண்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் நீதிமன்றம் பாராட்டியது.

சுற்றுச்சூழல் குற்றம்: அமெரிக்காவும் இந்தியாவும்

அமெரிக்காவின் டியுக் நிறுவனம் போன்று இந்தியாவிலும் சில பல நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை (குற்றங்களை) ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன (எ.கா. தூத்துக்குடி ஸ்டெர்லிட், திருப்பூர் சாயப்பட்டறைகள்). தமிழ்நாட்டின் எண்ணூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தை டியுக் நிறுவனத்தோடு ஒப்பிடலாம். வடசென்னை மின் உற்பத்தி நிலையத்தில் வெளியாகும் நிலக்கரி கழிவுகள் எண்ணூர் சிற்றோடையில் கொட்டப்படுவது தெரிந்து மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, அடுத்த கட்டமாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக 2017 ஆகஸ்டு மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு எண்ணூர் சிற்றோடையில் கொட்டப்பட்ட நிலக்கரி சாம்பல் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளது. டியுக் நிறுவன வழக்கிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பதற்கு பல்வேறு துறைகளின் உதவி தேவைப்படுகிறது. பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவில் மண் உயிரியலாளர், தாவரவியலாளர், ஐஐடி பேராசிரியர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இக்குழுவிற்கு சில வரையறைகள் (limitations) ) இருப்பதையும் மறுக்க முடியாது. உதாரணமாக, விசாரணை செய்ய புலனாய்வு அதிகாரிகள் இல்லை, ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் வல்லுநர்கள் இல்லை, கழிவுகள் ஏற்படுத்தும் சமூக பாதிப்பை அறிய சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் இல்லை, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அப்பகுதி மக்களின் பிரதிநிதி இல்லை. இத்தகைய அணுகுமுறைக்குக் காரணம், அமெரிக்காவில் சுற்றுச்சூழலுக்கு எதிராக நடந்தால் அது சுற்றுச்சூழல் குற்றம் (environmental crime) ஆனால், இங்கு சுற்றுச்சூழல் மாசு (environmental pollution). அமெரிக்காவின் சுத்த நீர் சட்டத்தை (சிறீமீணீஸீ கீணீtமீக்ஷீ கிநீt) போன்று இந்தியாவில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க ‘நீர் (மாசடைதலில் இருந்து தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம்’ [Water (Prevention and Control of Pollution) Act]  கிநீt] நடைமுறையில் உள்ளது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், இச் 

சட்டத்தை நடைமுறைப்படுத்த குற்றவியல் நடைமுறை சட்டத்தின்¡ (Code of Criminal Procedure) சில பிரிவுகளை பயன்படுத்தலாம். இந்தியாவில் ‘நீர் (மாசடைதலில் இருந்து தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம்’ எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என அறிய தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு (National Crime Records Bureau) ஆண்டுதோறும் வெளியிடும் ‘இந்தியாவில் குற்றம்’ (Crime in India) என்ற அறிக்கை உதவும். அவ்வறிக்கையின்படி, ‘நீர் (மாசடைதலில் இருந்து தடுத்தல் மற்றும் கட்டுபடுத்துதல்) சட்டத்தின்’ கீழ் 2014 ஆம் ஆண்டு 15 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக, இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் மொத்தமே 25 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது! அமெரிக்காவில் எப்படி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குற்றச் செயலாக வரையறுத்து விசாரணை நடத்தி, நிரூபித்து பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் எவ்வாறு நீதி கிடைத்ததோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், நாம் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களை குற்றமாக வரையறுக்காதவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றச் செயல்களால் (மாசுபாடுகளால்) பாதிக்கப்படப் போவது நம் சந்ததியினரே. எனவே, நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தருவதில், சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புரிதல் மிக அவசியமானது.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுற்றுசூழல் குற்றங்கள் பற்றிய புரிதல் மிக குறைவாகவே இருக்கிறது.

சங்கர் பிரகாஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments