தாரிணி பத்மநாபன்
வணக்கம் நண்பர்களே, உரமாக்கல் தொடரின் மூன்றாம் பகுதி இது! முதல் இரு பகுதியிலும் ஏரோபிக் ணீமீக்ஷீஷீதீவீநீ உரமாக்கல், அதாவது உயிர்வளி துணை கொண்டு, காற்றின் உதவியால் நிகழும் உர மாக்கல் முறைகளை பார்த்தோம். இந்த பகுதியில் அனிரோபிக் ணீஸீமீக்ஷீஷீதீவீநீ, அதாவது உயிர் வளியற்ற வகையில் நிகழும் உரமாக்கல் முறையைக் காண்போம். மேற்கூறியவாறு, அனிரோபிக் முறையென்பது காற்று புகாமல் நிகழும் உரமாக்கல் முறையாகும். இவ்வகையான முறைகளில் ஙிஷீளீணீsலீவீ எனப்படும் ஜப்பானிய உரப்படுத்தல் வழிமுறை சிறிய வீடுகளில் செய்ய மிக எளிமையான செயல் முறையாகும். வழக்கமான உரப்படுத்துதல் முறையில் காற்று புகுவதற்காக 2-3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பொருட்கள் கிளறப்படுகின்றன. இம்முறையில் அவ்வாறு கிளற வேண்டிய அவசியம் இல்லை!வீட்டின் சிறு முகப்பில் செய்வதற்கு ஏதுவான ஙிஷீளீணீsலீவீ முறை, உரமாக்கல் முறைகளிலேயே அண்மையான முறையாகும் !
1982, ஜப்பான் நாட்டு பேராசிரியர் Teuro Higa அவர்களின் ஆராய்ச்சியைக் கொண்டு தொடங்கிய இம்முறை, EM – Effective micro – organism எனப்படும் நுண்ணுயிர்களின் உதவியால் உர-மூல பொருட்கள் நொதிக்க வைக்கப்படுகின்றன. Ferment என்னும் நொதித்தல் மூலம் திடக் கழிவுகள் உப்புக்கண்டம்/ஊறுகாய் போல மாற்றப்படுகின்றன.நொதித்தல் மூலம் brine எனப்படும் உப்பு நீர் வெளியேற்றபடும். இதனை தினசரி முறையில் பிரிக்க வேண்டும். Bokashi உரமாக்கல் -இரட்டை படி செய்முறை கொண்டது. முதலில் நொதித்தல் என்னும் முறையில் உரதிடபொருட்கள் நொதிக்க வைக்கப்படுகின்றன. அதற்கு பின்னே உப்பு கண்டம் செய்யப்பட்ட உர மூல பொருட்கள் , உரமாக்கல் கலனில் இடப்பட்டு மக்க வைக்கப்படும்.மற்ற முறைகளை காட்டிலும், இம்முறையில் மிக விரைவாக உரமாக்கல் நிகழப்படும். Bokashi முறையில் உரமாக்கத் தேவையான பொருட்கள்.
1.நீர் வெளியேற வசதியான, மூடியைக் கொண்ட கொள்கலன் – முதல் படியான நொதித்தல் செய்ய, இக்கலன் வேண்டும்.
2.EM – எனும் நுண்ணுயிர்கள் கலந்த தீஷீளீணீsலீவீ மூலப்பொருள். தோட்டப் பொருட்கள் கடைகளிலும், இணையத்திலும் bokashi கலவையை வாங்கிக்கொள்ளலாம்.
Bokashi கலவையை கலனின் அடிப்பகுதியில் தாராளமாக பரப்ப வேண்டும். சமையல் கழிவுகளை அதற்கு அடுத்த அடுக்காக சேர்த்து காற்று புகாதவாறு இவ்வுர பொருட்களை அழுத்தி மூடி வைக்கவேண்டும்.நாள்தோறும் கழிவுகளை bokashi கலவையுடன் சேர்த்து கலனில் அடுக்கி கொண்டுவரலாம்.ஒவ்வொரு முறையும் இக்கலவையை காற்று புகாத வண்ணம் அழுத்தமாக நெருக்கி வைக்கவேண்டும்.
இக்கலனிலிருந்து உப்பு நீரை தினந்தோறும் வெளியேற்றபட வேண்டும்.2-3 வாரங்களில் உர-மூலப்பொருட்கள் நொதிக்கப்பட்டு ஊறுகாய் போல மாறி இருக்கும்.2-3 வாரங்களில் ஊறுகாய் போல நொதிக்கப்பட்டு கிடைக்கும் கழிவுகளை சாதாரண வகையில் உரமாக்கலாம். அவை பின்வருமாறு,
– பின் கட்டு தோட்டத்தில் 4 – 8 அங்குலம் கொண்ட குழியில் புதைத்து வைக்கலாம்.
– (அ) மண் புழு உரமாக்கல் கலனில் இட்டு வைக்கலாம்.
– (அ) எந்த ஒரு ஏரோபிக் உரமாக்கல் முறையிலும் சேர்த்து வைக்கலாம்.
இவ்வகையில் உரமாக்க, காய்கறிகளோடு மாமிச எச்சங்கள் சிறிய அளவினால் ஆன எலும்பு துண்டுகளை சேர்த்து மக்க வைக்கலாம். மற்ற உரமாக்கல் முறைகளை காட்டிலும் சிறிய அளவில் செலவு தேவைப்பட்டாலும் (கலவை, காலன் போன்றவைக்கு), மிக விரைவாகவும் சக்தி நிறைந்த உரம் கிடைக்கப் பெறும் தீஷீளீணீsலீவீ முறை, நகரப் பகுதியினரிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது! கூடுதலாக பின்வரும் பயன்களும் கிடைக் கின்றன!
- வீட்டில் வளர்க்கப்படும் ஆடு கோழிகளும் கூட இந்த நொதித்த உரத்தை விரும்பி உண்ணு வதாகும் கூறுகின்றனர்!
- Brine எனும் உப்பு நீர், வீட்டின் குழாய்களின்/ கழிவறையின் அடைப்புகளை நீக்க உதவும்.
சாதாரண முறையில் உரமாக்கப்படுவதைக் காட்டிலும் மிக விரைவாக,சக்திவாய்ந்த உர மாக்கல் முறையான தீஷீளீணீsலீவீயை செய்து எங் களுடன் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்!